கலை அறிவியல் மற்றும் பொறியியல் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கிடையே பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்கமுடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தாக கூறப்பட்டது.
ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையின் போது ஏஐசிடிஇ தனது முடிவை தெரிவிக்கும் என்று அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே ஏற்கனவே கூறியிருந்தார். அண்ணா பல்கலை. துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்தில் அரியர் ரத்து தவறான முடிவு என கூறியுள்ளேன். அரியர் தேர்வு பற்றி தமிழக அரசு தரப்பில் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபூதே தெரிவித்திருந்தார்.
0 Comments:
Post a Comment