கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ப்ரம் ஹோம் என பல வகைகளில் நம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை செல்போன், மடிகணினி முன் அமர்ந்து பலமணி நேரங்கள் செலவிடுகின்றனர். இதனால் அதிகம் பாதிக்கபடுவது கண் நரம்புகள் தான்.

இதனால் கண் நரம்புகளை பாத்துக்க உதவும் முக்கிய பொருள் ஆமணக்கு எண்ணை. உடலில் நமது உடலின் மையப்பகுதி தொப்புள். இங்கு இருந்து பல்வேறு நரம்புகள் பல்வேறு திசையில் செல்கின்றன. தொப்புளில் விளக்கெண்ணையை வைத்து தடவி வரும்பொழுது கண் வீக்கம், கண் நரம்பு பாதிக்கப்படுதல் ஆகியவை விரைவில் குணமடைந்து கண்பார்வை தெளிவாகும்.
எனவே ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆமணக்கு எண்ணையை எடுத்து உங்களது தொப்புளில் விட்டு தொப்புளில் இருந்து ஒரு அங்குலம் அளவு சுற்றி தடவி விட்டு அனல் பறக்க தேய்த்து விடுங்கள். இவ்வாறு செய்வது சூட்டை தணிப்பதுடன் கண் நரம்புகளுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. இவ்வாறு அடிக்கடி செய்து வரும் பொழுது உங்களது கண் தொடர்பான பிரச்சனைகள், கண் நரம்பு பிரச்சனைகள், கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
0 Comments:
Post a Comment