உடல் எடை குறைப்பு, உடல் சூடு, இரத்த சோகை, இதய நோய் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து - கம்பு


தானிய உணவு வகையான கம்பு , புரோட்டீன் மற்றும் அதிக நார்ச்சத்து, வைட்டமின் ஈ, பி , நியாசின், தையமின், ரிபோஃப்ளேவின் போன்றவைகளைக் கொண்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவகளும் கம்பு உணவில் அடங்கியுள்ளன.தினமும் காலையில் இரண்டு டம்ளர் கம்பங்கூழ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காண்போம்.

உடல் சூடு குறையும்:

உடல் சூடு காரணமாக சிறுநீரக கோளாறுகள், உடல் கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தினமும் இரண்டு டம்ளர் கம்பங்கூழ் குடிப்பதன் மூலம் உடல் சூடு சமநிலை அடைகிறது.

இரத்த சோகை:

இரும்பு சத்து அதிகமுள்ள கம்பங்கூழ் ரத்த செல்களின் உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது, உடலின் ரத்த அளவை அதிகரிக்க கம்பங்கூழ் சிறந்த உணவாக இருக்க முடியும்.

இதயநோய்:

உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து ரத்தத்தின் அடர்த்தியை மற்றும் உறைவை தடுத்து கரோனரி இதய நோய்களிலிருந்தும் பக்கவாதத்திலிருந்தும் காக்கிறது.

வைட்டமின் பி அதிகரிக்கும்:

கம்பு உணவில் உள்ள வைட்டமின் பி ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது. இதில் உள்ள நியாசின் ரத்தத்தில் கொழுப்புகள் படிவத்தை தவிர்க்கிறது. ரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புக்களின் அளவையும் அதிகரிக்கிறது.

உடல் எடை குறையும்:

தானிய உணவான கம்பு உடல் எடை குறைவதற்கு உறுதுணையாக இருக்கிறது. இதில் உள்ள ட்ரிப்டோஃபேன் எனும் அமினோ அமிலம் அதிகப் பசி ஏற்படுவதைக் குறைக்கிறது.மேலும் இதில் உள்ள நார்ச்சத்து அதிகமான அளவில் உண்பதைக் குறைத்து விடும். ஆகவே உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் கம்பு உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

குடல் புற்று நோயைத் தடுக்கும்:

கம்பங்கூழில் உள்ள நார்ச்சத்து மற்றும் லிக்னன் என்னும் பைட்டோநியூட்ரியண்ட், குடலில் மமாலியன் லிக்னனான மாற்றப்பட்டு, குடல் மற்றும் மார்பகப் புற்று நோயிலிருந்து நம்மைக் காக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் சீராகும்:

கம்பங்கூழில் உள்ள மெக்னீசியம் ரத்த நாள சுவற்றை தளர்த்தி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது, மேலும் ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலிக்கும் மருந்தாகிறது.

சர்க்கரை நோய்க்கு தீர்வு:

இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் செரிமான செயலைத் தாமதப்படுத்தி, ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க உதவுகிறது.முக்கியமாக டைப் 2 சர்க்கரை நோய்களுக்கு சிறந்த மருந்து கம்பங்கூழ்தான்.

ஆழ்ந்த தூக்கம்:

கம்புவில் உள்ள ட்ரிப்டோஃபேன், மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தினமும் உறங்குமுன் கம்பங்கூழ் குடித்து வந்தால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

எலும்புகள் வலுவடையும்:

சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் எலும்புகள் வலுவாக இது உதவி செய்கிறது. ஆர்தரைடிஸ் போன்ற வலி உள்ளவர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் கம்பங்கூழை தினமும் பருகி வருவதால் நீண்ட கால வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive