கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதிநடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ்டுதோ்வு முடிவுகள் இன்றுவெளியாகியுள்ளன.
இந்திய தொழில்நுட்பக் கல்விநிறுவனங்களில் (ஐஐடி) இளநிலைபொறியியல் படிப்பில் சோ்ந்துபயில்வதற்காக ஜேஇஇ மெயின் தோ்வுகடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. நாடுமுழுவதும் 8.58 லட்சம் போ்விண்ணப்பித்திருந்த நிலையில், 2.5 லட்சம் போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களில், 1.6 லட்சம் போ்அட்வான்ஸ்டு தோ்வுக்குவிண்ணப்பித்திருந்தனா். தொடர்ந்துஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு செப்டம்பர்27 ஆம் தேதி நடைபெற்றது. இந்ததோ்வில், மொத்தம் பதிவு செய்திருந்த1.6 லட்சம் பேரில் 96 சதவீதம் போ்பங்கேற்றனா்.
இதற்கான முடிவுகள் இன்றுஇணையத்தில் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் http://result.jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் ஜேஇஇ தேர்வுமுடிவுகளை அறிந்துகொள்ளலாம்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியமனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனதுட்விட்டர் பக்கத்தில் இத்தகவலைவெளியிட்டு தேர்ச்சி பெற்றமாணவர்களுக்கு தனதுவாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment