அரியர் தேர்வு வழக்கு: உயர்கல்வித்துறை அமைச்சர் முதலமைச்சருடன் ஆலோசனை


 


அரியர் வழக்கு தொடர்பாக முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல் உள்ளிட்ட நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் கலை, பொறியியல் கல்லூரியில் அரியர் வைத்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு, பல்கலைக் கழக மானியக் குழு விதிகளுக்கு புறம்பானது என்று அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தது.

ஆனாலும் சட்டப்பேரவையில் அரசு தனது முடிவில் உறுதியாக இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.


இந்த நிலையில், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் சி்.வி.சண்முகத்தை அவரது இல்லத் தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் எவ்விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் அரியர் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது. அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப் பட உள்ள நிலையில் தொடர்ச்சியாக அமைச் சர்கள் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive