செல்போன் வெளிச்சத்தால் கண் புற்றுநோய் வருமா?

#

செல்போன் ஆயிரம் வசதிகளை உள்ளங்கையில் கொடுத்திருப்பதைப் போலவே, ஆயிரம் பிரச்னைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. கழுத்து வலி, தூக்கமின்மை, மன அழுத்தம் ஏற்படுவது வெளிப்படையாகவே தெரிந்த விஷயம்தான். இவற்றில் முக்கியமாக கண் புற்றுநோய் ஏற்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன.

அதிலும் குறைந்த வெளிச்சம் உள்ள இடத்திலோ, இரவு நேரத்தில் விளக்குகள் அணைந்த பிறகு மொபைல் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் கண் புற்றுநோய் ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் அவ்வப்போது செய்திகள் பரவுகிறது.


இது நிஜம்தானா, கண் புற்றுநோய் என்பது என்ன, எதனால் கண் புற்றுநோய் வரும்? 

கண் சிகிச்சை மருத்துவர் குமரன் பதிலளிக்கிறார்.

கண் புற்றுநோய் என்றால் என்ன?

கண் புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் இருப்பினும் வைரஸ் தாக்கத்தினால் வருவதும் ஒரு முக்கிய காரணமாகும். அதில் Cytomegalo virus (CMV) மற்றும் Human immunodeficiency virus (HIV) ஆகிய வைரஸ் தாக்கத்தால் வருவதற்கு சில காரணங்கள் ஆகும்.

யாருக்கெல்லாம் கண் புற்றுநோய் வரும்?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அடிப்படையில் குழந்தைகளுக்கு பல புற்றுநோய் தொற்று வரலாம். அதில் மிகவும் முக்கியமானது கண் புற்றுநோய் என்று கூறப்படும் Retinoblastoma. அமெரிக்காவில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா ஆய்வாளர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வு முடிவுகளை cancer.net இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வுக்கட்டுரை கடந்த ஜனவரி மாதம் 2019ல் வெளியானது.

Retinoblastoma என்று கூறப்படும் Cancer cell-லால் ஏ்ற்படும் கண் புற்றுநோய்க்கு 15 வயதிற்கு உட்பட்ட 2 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருபாலரும் அடங்குவர். நான்கில் மூன்று குழந்தைகள் இந்த நோய்க்கு ஒரு கண்ணில் பாதிப்பும், நான்கில் ஒரு பங்குக்கு ஒரு குழந்தை இரண்டு கண்களிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த ஆராய்ச்சி கூறுகிறது.

கண் புற்றுநோயில் வகைகள் ஏதேனும் இருக்கிறதா?

கண் புற்றுநோயில் இரண்டு வகைகள் உண்டு. Malignant and nonmalignant ஆகும். Malignant வகையில் புற்றுநோய் செல்கள் மற்ற உறுப்புகளை பாதிக்கும். Non Malignant வகையில் புற்றுநோய் உருவான உறுப்பில் மட்டும் செல்கள் இருக்கும். மற்ற உறுப்புகளுக்குப் பரவாது. பொதுவாக உயிருக்கு ஆபத்தும் நேராது.

கண் புற்றுநோய் வரக் காரணம்?

கண் புற்றுநோய் வருவதற்கு பரம்பரை அல்லது ெபற்றோருக்கு இருந்தால் குழந்தைகளுக்கும் வர வாய்ப்பிருக்கிறது. Primary & Secondary என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. Primary வகை என்பது கண்ணிலிருந்து ஆரம்பிக்கும். கண்ணில் உள்ள புற்றுநோய் செல்கள் உடலில் உள்ள உறுப்புகளைத் தாக்கி மேலும் அதிகமாக உற்பத்தி செய்யும். Secondary Type என்பது உடலில் உள்ள புற்றுநோய் கண்களை தாக்கி உற்பத்தியாகும்.

கண் புற்றுநோயை கண்டுபிடிப்பது எப்படி?

இயல்பாக குழந்தைகளுக்கு கண் கருவிழி கருப்பாக இருக்கும். ஆனால், Retinoblastoma-வால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண் சற்று ஆடிக்கொண்டிருக்கும். குழந்தைகளுக்கு இயல்பாகக் கண் விழி பாப்பாவானது(Pupil) கருப்பாக இருக்கும். ஆனால், கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாப்பாவானது வெள்ளையாக இருக்கும். இதை டார்ச் லைட் அடித்து பார்க்கும்போது கண்டுபிடிக்க முடியும்.

இதற்கான அறிகுறிகள் என்ன?

கண் பார்வை குறைபாடு, நீர் வழிதல், கண் சிவந்து போதல், கண்களில் அழுக்கு சேர்தல் போன்ற அறிகுறிகள் கண் ஆரோக்கியம் கெட்டிருப்பதையே காட்டுகிறது. ஆனாலும் இவை சாதாரண கண் தொடர்பான பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். ஆனால், இத்தகைய அறிகுறிகள் ஏற்படும்போது முன்னரே பரிசோதித்துக் கொள்வது நாளடைவில் கண் புற்றுநோய் வராமல் நம்மைக் காப்பாற்றும். இதை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்த முடியும்.  

கண் புற்றுநோய் வந்தவர்கள் எதிர்–்கொள்ளும் பிரச்னை?

கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்லீரல் போன்ற உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படலாம். எனவே, மற்ற உறுப்புகளும் பாதிக்காமல் இருக்க பாதிக்கப்பட்ட கண்ணை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும். குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட கண்ணை அகற்றவில்லை என்றால் 10-15 வயதுக்குள் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ெகாடுக்கப்படும் சிகிச்சை முறை என்ன?

பொதுவாக புற்றுநோய்க்கு பல வகையான சிகிச்சைமுறைகள் உண்டு. அவை Radiotherapy, Chemotherapy மற்றும் Surgery போன்றவை முக்கியமானதாகும். Chemotherapy சிகிச்சையானது ரத்தநாளங்கள் மூலம் மருந்துகள் செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் முறையாகும். ரேடியோ தெரபி என்பது ஒளிக்கதிர்கள் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் முறையாகும். அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட கண் அகற்றப்பட்டு மற்ற உறுப்புகளுக்கும் பரவாமல் தடுக்கலாம்.

கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி மூலமாக கொடுக்கப்படும் சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி எடுத்துக் கொள்பவர்களுக்கு ஜீரண சக்தி குறையும், முடி உதிரும், எடை குறையும், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இருந்தாலும் மேலே குறிப்பிட்ட சிகிச்சை எடுத்துக் கொள்வதால் புற்றுநோயால் பிற்காலத்தில் ஏற்படும் அதிகளவு பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

மொபைல், கம்ப்யூட்டர், டெலிவிஷன் காரணமாக கண் புற்றுநோய் வர சாத்தியம் உள்ளதா?

மொபைல், கம்ப்யூட்டர் மற்றும் டெலிவிஷன் பார்ப்பதால் கண் புற்றுநோய் வருவதற்கு சாத்தியம் இல்லை. இதுபற்றி நிறைய ஆய்வுகள் நடந்து வருகின்றன. எனவே, இந்த கருவிகளின் ஒளிக்கதிர்களால் கண் புற்றுநோய் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும் செல்போன், கம்ப்யூட்டர், டெலிவிஷன் போன்ற திரைகளை அதிக நேரம் பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும்.

ஏனெனில், இதனால் கண் புற்றுநோய் வராவிட்டாலும் மற்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக கண்கள் சோர்வடைதல்(Eye strain), கண் பார்வை குறைதல்(Defective vision), மாறுகண் ஏற்படுதல்(Strabismus), தூக்கமின்மை போன்ற இன்னல்கள் ஏற்படலாம். இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நமது கண்களைப் பாதுகாக்கும் வழிகள் ஆகும்...





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive