இரவு நேரம் வாழைப்பழம் சாப்பிடலாமா?


வாழைப்பழம் உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதில் இருக்கும் இரும்பு சத்து ரத்தசோகையை எதிர்த்து போராட உதவும். உடல் எடையை சீராக வைத்திருக்கும் திறன் உண்டு. 

இதயம் மற்றும் கண்களையும் பாதுகாக்க துணைபுரியும். ஆனாலும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. அந்த சமயத்தில் சாப்பிடுவது சளியை அதிகரிக்கச்செய்துவிடும் என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சோர்வான தசைகளை வலுவாக்க உதவும். அதனால் மாலை வேளையில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது இரவில் நன்றாக தூங்குவதற்கு வழிவகுக்கும். 

ஊட்டச்சத்து நிபுணர்கள், 'ஒரு வாழைப்பழத்தில் 487 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. அது நமது உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் 10 சதவீதத்தை வழங்குகிறது' என்கிறார்கள்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive