வாட்ஸ் ஆப்பினை மொபைல் சாதனங்களில் செயலியாக பயன்படுத்தக்கூடிய வசதி காணப்படுகின்றமை தெரிந்தே. அதேபோன்று டெக்ஸ்டாப் கணினிகள், மடிக் கணனிகள் என்பவற்றில் இணைய உலாவியில் பயன்படுத்தக்கூடியவாறு வாட்ஸ் ஆப் வெப் எனும் தளமும், மென்பொருளும் காணப்படுகின்றது. எனினும் இங்கு மொபைல் அப்பிளிக்கேஷன்களைப் போன்று குரல் வழி அழைப்புக்கள், வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடியாது. மாறாக சட் செய்தல், கோப்புக்களை பரிமாறுதல் என்பவற்றினை மாத்திரம் மேற்கொள்ள முடியும்.
எனினும் குரல் வழி அழைப்புக்கள் மற்றும் வீடியோ அழைப்புக்கள் என்பவற்றினை ஏற்படுத்துவதற்கான வசதிகள் விரைவில் வாட்ஸ் ஆப் வெப்பில் தரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டால் மொபைல் சாதனங்களுக்கு வரும் அழைப்புக்களுக்கு கணினிகளிலும் பதில் அளிக்க முடியும் என்பதுடன் கணினிகளில் இருந்தும் வாட்ஸ் ஆப்பிற்கு அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.