அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இறுதிப் பருவத் தேர்வு தவிர பிற பருவத் தேர்வுகளில் அரியர் வைத்திருந்து கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் தேர்வு எழுத தேர்வுக்கட்டணம் செலுத்தியிருப்பின் அவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அரியர் தேர்ச்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி வழங்க சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முடிவால், பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பயின்று அரியர் வைத்துள்ள சுமார் 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றும், அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி வழங்குவதால் கூடுதல் மதிப்பெண் தேவைப்படுவோர் அடுத்த முறை நடைபெறும் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுக் கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி பருவத் தேர்வு முடிவுகளில் 99% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment