தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும், இன்று(அக்.,10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கொேரானா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, அரசு அலுவலகங்கள், சனிக்கிழமையும் செயல்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனிக்கிழமை, அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் காரணமாக, அன்றைய தினம் மட்டும், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில், இன்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள, அனைத்து அலுவலகங்களுக்கும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment