அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு : ஆசிரியர் சங்கம் வரவேற்பு


தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லூரி சேர்க்கையில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. இதையடுத்து இந்த மசோதா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகள், ஏற்கனவே வெளியான நிலையில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு, ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதனால், தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில், தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அமைப்பின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதன் மூலம், வருடத்திற்கு சுமார் 300 அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேருவது உறுதி செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார். மேலும், 7.5% உள்ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில், நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive