ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுவழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
* கணினி தேர்ச்சி பெற்றஆசிரியர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு.
* சிறப்பாசிரியர்களுக்கும் வழக்குகள்முடிந்தவுடன் கலந்தாய்வு
* 40% பாடங்கள் குறைப்பு
பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின்பரிந்துரைப்படி 40 சதவீத பாடங்கள்குறைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்தசாவக்கட்டுபாளையத்தில் கைத்தறிநெசவாளர்களுக்கு காப்பீடு அட்டைஉள்ளிட்ட நலத்திட்டஉதவிகளைவழங்கிய பின்அவர்செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர்ஒப்புதல்வழங்குவது குறித்து முதல்வர்நடவடிக்கை மேற்கொள்வார். ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுகுறித்து 2 வழக்குகள் நீதிமன்றத்தில்இருந்தன. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருதீர்ப்பும், மதுரைஉயர் நீதிமன்றக்கிளையில் ஒரு தீர்ப்பும்வழங்கப்பட்டன. இந்த இரண்டையும்ஒருங்கிணைத்து நடவடிக்கைஎடுக்கப்படும்.
கணினி தேர்ச்சி பெற்றஆசிரியர்களுக்கு பணி வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது. சிறப்பாசிரியர்களுக்கும் வழக்குகள்முடிந்தவுடன் கலந்தாய்வுமேற்கொள்ளப்படும். பள்ளிபாடத்திட்டங்கள் குறைப்புதொடர்பாகஆய்வு செய்ய குழுஅமைக்கப்பட்டது. 14 பேர் கொண்டஅந்த குழுஅளித்த பரிந்துரையின்அடிப்படையில், 40 சதவீதம் பாடங்கள்குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 சதவீதம் பாடங்களில் இருந்து தேர்வுக்குவினாக்கள் கேட்கப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment