புதுடில்லி:'ராணுவத்தினருக்கான, ஒருபதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் அரசின்கொள்கை முடிவு; இதில் திருத்தம்செய்வது தொடர்பாக பிரச்னையில்நீதிமன்றம் தலையிட முடியாது' என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில்தெரிவித்துள்ளது.
ராணுவத்தினருக்கான, ஒரு பதவி, ஒரேஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசுஅமல்படுத்தி உள்ளது. 'இந்ததிட்டத்தின் கீழ், ஓய்வூதியம் ஐந்துஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிஅமைக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. 'ஆண்டுதோறும் மாற்றியமைக்கஉத்தரவிட வேண்டும். 2013ம் ஆண்டைஅடிப்படையாக வைத்து ஓய்வூதியதிட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை, 2014ம் ஆண்டை அடிப்படையாக வைத்துமாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்' என, முன்னாள் வீரர்கள் இயக்கம்சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது....
இந்நிலையில், ராணுவஅமைச்சகத்தின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது; அதில்கூறப்பட்டுள்ளதாவது:ஒரு குறிப்பிட்டபணி அந்தஸ்துள்ளவர்கள், ஒருகுறிப்பிட்ட ஆண்டில் எப்போது ஓய்வுபெற்றாலும், ஒரே மாதிரியானஓய்வூதியம் அளிக்கும் இந்ததிட்டத்துக்கு, மத்திய அமைச்சரவைஒப்புதல் அளித்து, அதன் பிறகுநடைமுறைக்கு வந்தது.
இந்ததிட்டத்தின் கீழ், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 7,123 கோடி ரூபாய்கூடுதலாக செலவாகிறது. பொருளாதார சூழ்நிலைகள்உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்தே, இந்த நடைமுறைமேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அதில் திருத்தம் செய்யும்படி கோரமுடியாது. அதில் நீதிமன்றங்களும்தலையிட முடியாது.இவ்வாறு, பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment