தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது எப்போது? நாளை முடிவு


தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள்திறப்பது எப்போது என்பது குறித்துமுதலமைச்சர் தலைமையிலானமாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் நாளைமுடிவாக உள்ளது.

முதலமைச்சர் தலைமையில் நாளைநடக்கும் கொரோனா தடுப்புஆய்வுக்கூட்டத்தில் மாவட்டஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். ஏற்கனவே அறிவித்தபடி, விலையில்லா 

முகக்கவசங்கள் விநியோகம்செய்யப்படுவது குறித்தும்இக்கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புஉள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்  பண்டிகை காலங்களில்கொரோனா தொற்றை கட்டுப்படுத்தஎடுக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும்ஆலோசிக்கப்படுகிறது. வடகிழக்குபருவமழை முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள், குறுவைசாகுபடிக்கான ஏற்பாடுகள் குறித்தும்ஆய்வு செய்யப்படுகிறது என்றுதகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா தொற்று காரணமாக கடந்த8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள்மூடப்பட்டு உள்ளன. மாணவர்களுக்குஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெற்றுவருகின்றன. அரசு பள்ளி மாணவர்கள்தொலைக்காட்சி மூலம் பாடம் கற்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கல்விஆண்டுக்கான வகுப்புகள், தேர்வுகள்நடைப்ந்றுவது தொடர்பாகதெளிவில்லாத நிலையாகநீடித்துக்கொண்டிருக்கிறது. தற்போதுதளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளை திறந்து பாதுகாப்பானமுறையில் மாணவர்களை வரவழைத்துபாடம் கற்பிக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன.

இதற்காக முதலமைச்சர் நாளைமுடிவெடுப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive