காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்தோர், இந்துக்களுக்கு மாணவர் சேர்க்கையில் சலுகை: ஏஐசிடிஇ அனுமதி



காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கு மாணவர் சேர்க்கையில் சலுகை வழங்க ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வித் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கு மாணவர் சேர்க்கையில் சலுகை வழங்க ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, காஷ்மீரிலிருந்து புலம்பெயர்ந்தோர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரி இந்துக் குடும்பங்களுக்கு மாணவர் சேர்க்கையில் சலுகை வழங்க, மத்திய கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சலுகை நாடு முழுவதும் 2020- 21 ஆம் கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.

அதிகபட்சமாக 10 சதவீதம் வரை கட் ஆஃப் மதிப்பெண்ணிலும் துறை வாரியாக 5 சதவீதம் வரையிலும் இந்தச் சலுகை வழங்கப்படும். தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இந்தச் சலுகையைப் பெற காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்தோருக்குக் குடியேற்றச் சான்றிதழ் தேவை ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரி இந்துக்கள் குடும்பங்கள், இருப்பிடச் சான்றிதழ் வழங்க வேண்டியது அவசியம்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive