NEET தேர்வு முடிவுகள்தெரிவிப்பதுஎன்ன?
தமிழ்நாட்டில் NEET தேர்வுக்குவிண்ணப்பித்தவர்கள் – 1,21,617
NEET தேர்வு எழுதிய99,610 தமிழகமாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி!
தேர்வு எழுதியவர்களில் 57.44 சதவீதம்பேர் தேர்ச்சி!
கடந்த ஆண்டை விட 11 சதவீதம்கூடுதலாக தேர்ச்சி!
முதல் 20 மாணவர்களில் 4 வதுஇடத்தை தமிழக மாணவன் பிடித்துள்ளார்!
முதல் 20 மாணவிகளில் 14 வதுஇடத்தை தமிழக மாணவிபிடித்துள்ளார்!
சென்ற ஆண்டை விட தேர்ச்சிசதவீதத்தில் முன்னேற்றம் + 8.87%
தமிழ் நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில்உள்ள இடங்கள் = 5550
தமிழ் நாட்டு மாணவர்களுக்கானஇடங்கள் = 4717 (85%)
இந்தியாவில் உள்ள மொத்தமருத்துவக்கல்லூரி இடங்கள் = 82926
அதில் தமிழ் நாட்டு மாணவர்கள் சேரவாய்ப்புள்ள இடங்கள் = 11606
((82926-5550) x 0.15))
தேர்ச்சி பெற்ற 57215 மாணவர்களில்தமிழ்நாட்டிலுள்ள 4717 இடங்கள் (NEET க்கு முன்பு 833 இடங்கள் மட்டுமே) போகமீதி உள்ள 52498 மாணவர்கள் இந்தியாமுழுவதும் 11606 (ஏறத்தாழ500% அதிகம்) இடங்கள் உள்ளன என்ற அசுரவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுNEET.
நீட் தேர்வைக் குறித்த தேவையில்லாதஅச்சம், பயம், நம்பிக்கையின்மை, ...என திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டபலபிம்பங்கள் பொய் என்பதையும், நம்கல்வியின் பாடத்திட்டம் தரம்குறைந்தது, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களால் தேர்ச்சிபெறஇயலாது என பலர் சத்தமாககளமாடிக்கொண்டிருந்த வேளையில், “முயன்றால் முடியாதது எதுவுமில்லை” என்பதையும், நாங்கள் எவருக்கும்சளைத்தவர்கள் அல்ல என்பதையும், மற்ற மாநில மாணவ மாணவியர்களால்முடிந்தது நம்மாலும் முடியும்என்பதையும் நமது மாணவமாணவியர்கள்நிரூபித்துகாட்டியுள்ளனர்.
முதல் முயற்சியில் கிடைக்காவிட்டாலும் துவண்டு போய்விடாமல், அடுத்த முறை முழுமுயற்சியாக "நன்குதிட்டமிட்டஉள்ளார்ந்த பயிற்சி" எடுத்துமுதல் மதிப்பெண் வாங்கியதுபாராட்டுக்குரியது.
ஆண்டுக்காண்டு, நீட் தேர்வில் தமிழகமாணவர்களின் தேர்வு சதவீதம்படிப்படியாக உயர்ந்துகொண்டிருப்பதையும் உணரவேண்டும். மேலும், தமிழக பள்ளி மாணவர்களுக்குமருத்துவ இடங்கள் அதிகமாகவும்கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
நம் தமிழ்நாட்டு மாணவர்கள்சாதனையாளர்கள். கடினஉழைப்பாளிகள் மட்டுமல்லஅதிகதிறமை பெற்றவர்கள். அடுத்தடுத்தஆண்டுகளில்பெரும்பாலான AIIMS மற்றும் JIPMER கல்லூரிகளிலும், மற்றமாநிலங்களின்அகில இந்திய ஒதுக்கீடுஇடங்களிலும் அதிகஅளவில் நம்தமிழ்நாட்டு மாணவர்கள் இடம்பிடிப்பர். இது தொடக்கம் தான். இதனைத்தொடர்ந்து அனைத்துமாநிலங்களிலும்தமிழ்நாட்டிலிருந்து வந்து படிக்காதஎந்த கல்லூரியும் இல்லை என்ற நிலைஉருவாகும். தமிழ்நாட்டிலிருந்து பலர்படிக்கும் நிலை உருவாவதால் நம்மாணவ, மாணவியர்கள் பயமின்றி, பாதுகாப்பாக கல்வி பயிலும் நிலைவெகுவிரைவில் உருவாகும்.
*
NEET தேர்வு பாடத்திட்டம் என்பதுNCERT புத்தகங்களை அடிப்படையாககொண்டு Medical Council of India (MCI) கொடுப்பது. 1961 ம் ஆண்டு மத்தியஅரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டஅமைப்புNCERT. மத்திய மாநிலஅரசாங்கங்களுக்கு பாடத்திட்டத்தில்உதவுவதற்காக மாதிரிபாடப்புத்தகங்களை வெளியிட்டுவருகிறார்கள்.
CBSE பள்ளிகள், NCERT பாடப்புத்தகங்களை அப்படியேஎடுத்துக்கொள்கிறார்கள். ஆந்திராபோன்ற சில மாநிலங்கள் NCERT பாடப்புத்தகத்தை மேலும் மெருகேற்றிஅவர்களின் மாநில பாடப்புத்தகங்களைவடிவமைத்தார்கள் தமிழ்நாடு போன்றமாநிலங்கள் அதை எவ்வ்ளவு முடியுமோஅவ்வளவு குறைத்துபாடப்புத்தகங்களை வடிவமைத்தார்கள். ஆனால், கடந்த இரு ஆண்டுகளில்மேல்நிலைக் கல்வியின்பாடப்புத்தகங்களின் தரம் மிகவும்மேம்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் திருத்தப்பட்ட மாநிலபாடத்திட்டத்தில் இருந்து, இந்த வருடம்NEET தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில் ஏறத்தாழ 90% கேள்விகள் கேட்கப்பட்டன. மிகச்சிறப்பான திருத்தப்பட்டபாடத்திட்டத்தை கொடுத்த நம்தமிழநாட்டு மாநில அரசின் இச்செயல்மிகவும்பாராட்டுக்குரியது.
NEET நல்லதுதான். அது ஏழை ஜாதிமக்களை நிரந்தரமாக வஞ்சிக்கும்செயலாக உருவகப்படுத்தப்படுவதுநல்லதல்ல.
மேலும், NEET தேர்வானது நம்தமிழ்நாட்டின் MBBS இடங்களை வடநாட்டு மாணவர்களுக்குவழங்குவதற்காகமத்திய அரசால்கொண்டு வரப்பட்டது என்ற வாதமும்தவறானதாகும். ஏனெனில், தமிழ்நாடுமாநில அரசு கல்லூரிகளில் உள்ள 85% சதவிகித இடங்கள் NEET தேர்வில்தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டுமாணவர்களுக்கு மட்டும் 69% இடஒதுக்கீட்டுடன் நிரப்பப்படும்.
கிராமப்புறத்தில் படிக்கும் மக்கள், ஏழைமக்களின் மாணவ மாணவியர்களுக்குNEET, GATE, JEE, . . . போன்ற தேர்வுகள்மட்டும் இல்லை உயர்கல்விகற்பதேசிரமாகத்தான் உல்ளது. இதனை ஈடுகட்ட ஒரு மாவட்டத்தில் ஒருசில அரசு பள்ளிகள், அரசு மானியத்தில்இயங்கும் பள்ளிகள் இவற்றில்ஒருங்கிணைந்தவகுப்புகள் (Integrated sections) தொடங்கி NEET, GATE, JEE, . . . போன்ற தேர்வினை எதிர்கொள்ளும்திறனைக் கொண்டு வரலாம்.
தனிவகுப்புகளுக்கு செல்ல முடியாதஏழை மாணவ, மாணவியர்களுக்குஅரசு மானியம் கொடுத்து அவர்களும்NEET, GATE, JEE, . . . போன்றதேர்வுகளில் வெற்றிபெறவைக்கலாமே!
அரசுப்பள்ளியில்6 முதல் 12 ஆம் வகுப்புவரை படித்த மாணவர்களுக்கு 7.5% இடங்களைஒதுக்கீடு செய்வதற்கு பதில்30%-40% ஒதுக்கீடு செய்ய (சமூகநீதிஎல்லாம் உள்ளடக்கியதாக) அரசுமுயற்சிக்கலாம்.
மாநில அரசின் நிதியில் கட்டியகல்லூரிக்கு, மத்திய அரசு தேர்வுநடத்துவது, மாநில உரிமையைபறிக்கும் செயல் எனகம்புசுற்றுபவர்களுக்கு ஒரு தகவல். மத்தியஅரசு நடத்தும் தேர்வின் மூலம்தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகமானமருத்துவப்படிப்புக்கான இடங்கள்கூடியிருக்கின்றன.
முதல் தடவை எழுதுபவனையும், ஒன்றுஅல்லது இரண்டு வருடம் சிறப்புபயிற்சிமையங்களுக்கு சென்று பயிற்சிபெற்றவரையும் ஒன்றாக எழுதவைக்கிறது எப்படி சரியான போட்டியாஇருக்கும்? என கருத்துகூறுபவர்களுக்கு ஒரு தகவல். NEET தேர்வு வருவதற்கு முன்னர், மாணவர்கள் அடுத்த தேர்வுகளில்மீண்டும் தேர்வு எழுதி தன்மதிப்பெண்களை உயர்த்திக்கொண்டு, அடுத்த வருடம் மருத்துவக் கல்லூரியில்சேர்ந்து படித்தவர்களும் உண்டு.
ஒரு வருடம் கோச்சிங்கொடுத்ததால்தான் நீட் தேர்ச்சிபெறமுடிகிறது. இந்தியாவில் / தமிழ்நாட்டில்70% - 90% மாணவர்கள்ஒரு வருடம் தனியாக கோச்சிங்போவதில்லை. மேலும் போகும் வசதிவாய்ப்பும் இல்லை. பள்ளியில்படிக்கும்போதே, NEET தேர்வுக்குபயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். அல்லது அதற்கானவாய்ப்புள்ளபள்ளிகளில்படிக்கின்றனர்.
ஒன்றிரண்டு ஆண்டுகள் பயிற்சிக்காகலட்சக்கணக்கில் செலவழிக்கவாய்ப்பும், வசதியும் உள்ளவர்களேமருத்துவராக முடியும் என்ற நிலையைபயிற்சிநிலையங்கள்உருவாக்கியுள்ளன. NEET தேர்வுகளுக்கான இத்தகைய வசதிவாய்ப்புகளை கிராமப்புற ஏழை மக்கள்நினைத்தும் பார்க்க முடியாது!
ஏழைமற்றும் தரமான கல்வி கற்கும்வாய்ப்பு இல்லாத மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பளிக்கும்வகையில், மத்திய அரசுஉறைவிடப்பள்ளியான நவோதயாபள்ளிகளைநடத்துகிறது. அப்பள்ளிகளில் பயிலும் ஆர்வமுள்ளமாணவ, மாணவியர்களைத்தெரிவுச்செய்து online பயிற்சி அளித்துஇந்தியா அளவில் பல ஆயிரம்மாணவர்கள் மருத்துவம்மற்றும்உயர்கல்வி இடங்களைகைப்பற்றுகிறார்கள்... ஆனால்துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் அந்தபள்ளிகளை நடத்த அனுமதிவழங்கப்படவில்லை.
அத்தகையபள்ளிகளில், NEET, GAAT, JEE, . . . போன்றதேர்வுகளுக்குத்தயாராகி ஒருவர் மருத்துவ இடத்தைவாங்கவில்லையென்றாலும், எந்தபடிப்புக்கு போனாலும் சிறந்துவிளங்குவான் என அறிந்துஅவர்களுக்கு நல்வழிகாட்டுகின்றனர். தனித்திறன் போட்டிகள், விளையாட்டுப்போட்டிகள், . . . ஆகியவற்றில் நன்கு பயிற்சிஎடுத்துக்கொண்டால் தான்வெற்றிக்கனியை சுவைக்க முடியும். ஓடத்தெரிந்தவர்கள் எல்லாம்ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளஇயலாது, கலந்துகொண்டாலும்வெற்றி பெறுவது சுலபமல்ல. எங்களுக்கு திறமை இருக்கிறது. ஏன்பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்என்பது சரியான வாதமல்ல.
மேல்நிலைத்தேர்வில் பெற்றமதிப்பெண் அடிப்படையில் எத்தனைஅரசுப்பள்ளி மாணவ மாணவியர்கள்மருத்துவப்படிப்பு படிக்கும் வாய்ப்பைப்பெற்றனர் என்பதும் மகிழ்வைத்தரும்வகையில் இல்லை. அப்போதும்குறிப்பிட்ட மாவட்டத்தில், குறிப்பிட்ட(பயிற்சி) பள்ளிகளில் படித்தவர்களேஅதிக இடங்களைப் பிடித்தனர். அப்பள்ளிகளில் மேல்நிலைமுதலாமாண்டு பாடங்கள்அவசரகதியில் நடத்தப்பட்டோ அல்லதுநடத்தப்படாமலோ, இரண்டு ஆண்டுகள்இரண்டாமாண்டு பாடங்கள் மட்டுமேநடத்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டது. அப்பள்ளிகளில் மேல்நிலைகல்விபயில சில லட்சங்கள் தேவை. பணமிருப்பவர்கள், வசதி வாய்ப்புஇருப்பவர்களின் பிள்ளைகள் மட்டுமேபடித்து மருத்துவக் கல்லூரிகளில்சேர்ந்தனர். இது மறுக்கமுடியாதஉண்மை. பலர் ஏற்றுக்கொள்ளமறுக்கும் உண்மையும் கூட. அப்போதும்கூட மருத்துவ இடங்களைபெற்றார்கள், IIT, NIT க்கு போனார்கள், JEE, GATE., ... இல்தேர்வானவர்கள் எனஆராய்ந்தால் முடிவுகள்வருத்தப்படவைக்கக்கூடிய அளவில் தான் உள்ளது.
நீட் தேர்வு வருவதற்கு முன்னரும்அனைத்து கிராமப்புற, ஏழைமாணவர்களுக்கும், அனைத்துவாய்ப்புகளும் கிடைக்கவில்லைஎன்பது யதார்தமான உண்மை. ஆனால்அரசியல்வாதிகளும், குறிப்பிட்டகல்வியாளர்களும் ஏற்றுக்கொள்ளவிரும்புவதில்லை.
கிராமப்புறமற்றும் ஏழைமாணவர்களுக்கு நன்குபயிற்சி பெறும்வாய்ப்பை உருவாக்கி தர வேண்டியதுஅரசுமட்டும்தான். அரசு பல பயிற்சிமையங்களைஉருவாக்கி பயிற்சிஅளித்தது. அது மட்டும் போதுமானதல்லஎன்பது ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பிரச்சினை நீட் அல்ல. நீட் நல்லதுதான்.அது ஏழை ஜாதி மக்களை நிரந்தரமாகவஞ்சிக்கும் செயலாக மட்டுமேஉருவகப்படுத்துவது நல்லதல்ல. அவ்வெண்ணத்தை மாற்ற என்னசெய்யலாம் என சிந்திக்கும்வேளைஇது!
NEET பயிற்சிக்கு வல்லுனர்களின்சேவையை இலவசமாகப் பெற்றுமாணவர்களுக்குக் கிடைக்க செய்வதுஇயலாத, சிரமமான காரியம்.ஏனெனில், அத்தகையபயிற்சிபெற்றவர்களுக்கு அள்ளிஅள்ளி கொடுக்க தனியார் பயிற்சிமையங்கள் தயாராக உள்ளது.
அரசு செய்ய வேண்டியவை!
அரசுப் பள்ளிகளில் உள்ளஆசிரியர்களுக்கு முதலில்திறமையானவர்களால் நன்கு பயிற்சிஅளித்து, பயிற்சி பெற்றவர்களில்தகுதியானவர்களைக் கொண்டுதேர்ந்தெடுத்த மையங்களில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிஅளிக்க வேண்டும். தன்னார்வலர்கள், புரவலர்கள், உதவும் மனப்பான்மைஉள்ளவர்கள், சமூகஅக்கறையுள்ளவர்களைஒருங்கிணைத்தால் பயிற்சி சிறப்பாகநடைபெறும். இலக்கை எளிமையாகஅடைய இயலும். நிறைய அரசுப் பள்ளிமாணவர்கள் NEET, JEE, . . . போன்றஅனைத்திந்திய போட்டித் தேர்வுகளில்தேர்ச்சி பெறுவர்.
தமிழ்நாட்டில்உள்ள ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி, சிறப்பு நிலைபேரூராட்சி, . . . ஆகியவற்றில் மாணவ, மாணவியர்களுக்கு வசதியாக உள்ளசுமார் 500 – 600 பள்ளிகளில் சுமார் 100 மாணவ மாணவியர் படிக்கும் வகையில்(உண்டு உறைவிட) சிறப்புமையங்களை உருவாக்கி, அதற்குநன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களைமுழுநேர பொறுப்பாளர்களாகநியமித்து, அப்பள்ளியின்தலைமையாசிரியர் மேற்பார்வையில்நடத்தப்பட வேண்டும். மையத்தின்சுற்றுப்புறங்களில் உள்ள திறமைமற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்களைச் சேர்த்துஅவர்களுக்கு பாடம் நடத்துவதோடு, சிறப்புப் பயிற்சியும் அளித்தால் நல்லபலன் கிடைக்கும்.
அகில இந்திய போட்டித்தேர்வுகளில்தேர்ச்சிபெற உழைத்தஆசிரியர்களுக்கு பணப்பலன், சான்றிதழ்கள், விருப்ப மாறுதல், நல்லாசிரியர் விருது அளித்தலில்முன்னுரிமை, . . . அளிக்க அரசு முன்வந்தால் எல்லாம் சாத்தியம். வானம்தொட்டுவிடும் தூரம்தான். நம்உழைப்பில் அரசுப் பள்ளியில் நம்மைநம்பி வரும் ஏழை மாணவ, மாணவியரின் முகத்தில் சிரிப்பைக்காண வழிகாட்டலாம் வாருங்கள்.
Article By:
Mr. S. Ravikumar.
0 Comments:
Post a Comment