வலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்



தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத்தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது.


தமிழகம், புதுச்சேரியில் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் வியாழக்கிழமை (டிச. 3) வரை மிதமான மழையும், தென்தமிழகத்தில் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ADVERTISEMENT

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:


புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவாகி, நிலைகொண்டிருந்தது. இது, ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது.


இது மேற்கு, வட மேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாய்க்கிழமை காலையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். டிசம்பா் 2-ஆம் தேதி தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகம், புதுச்சேரியில் டிச. 1 முதல் டிச. 3 வரை மிதமான மழையும், தென் மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.


இன்று மிதமான மழை: தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை லேசான மழை பெய்யக்கூடும் என்றாா்.


டிச.1:


கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.1) இடியுடன் கூடிய பலத்த மழையும்,  ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


டிச.2:


கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் புதன்கிழமை (டிச, 2) மிக பலத்த மழையும், தேனி, மதுரை, சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.


டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


டிச.3:


கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (டிச. 3) இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆசிரியர்கள் நியமனம் - ஏஐசிடிஇ புதிய சுற்றறிக்கை.


அகில இந்தியி தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் ( ஏஐசிடிஇ ) கல்விப்பிரிவு ஆலோசகர் திலீப் என்.மால்ஹீடே , உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை : 

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கிராஸ் மேஜர் ( பாடப் பிரிவு மாறி படிப் பவர்கள் ) முடித்தவர்களை ஆசிரியராக நியமிப்பது குறித்து பல கோரிக்கைகள் வருகின்றன . ஆனால் , இதற்கு ஏஐசிடிஇ சார்பில் வழிமுறைகள் வழங்கப் படவில்லை . எனவே , உயர்கல்வி யில் கிராஸ் மேஜர் முடித்தவர் களுக்கு பணி வழங்குவதில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம். கூடுதல் விவரத்தை www.aicte-india.org இணையத்தில் அறியலாம்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு - பள்ளிகள் திறப்பா ?முழு விவரம்...


தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு இல்லை


டிசம்பர் 14 முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி


தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 முதல் தொடங்கப்படும் 


மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் டிசம்பர் 7 முதல் வகுப்புகள் தொடங்கும்


விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி


டிசம்பர் 14ஆம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளை பொதுமக்களுக்கு அனுமதி


வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி


டிசம்பர் 1 முதல் உள்ள உள்அரங்கங்களில் சமுதாய ,அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 


அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் வண்ணம் உள்ள அரங்கங்களில் மட்டும் கூட்டம் நடத்திக் கொள்ளலாம்.கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கலாம்கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்


டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு - முதல்வர் அதிரடி அறிவிப்பு


இறுதியாண்டு வகுப்புகள் டிச.7ம்தேதி தொடங்க அனுமதி



மருத்துவக் கல்லூரிகள் 7ஆம் தேதி முதல் திறக்க அனுமதி

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் டிச.1ம் தேதி முதல் தொடங்கும்

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு பயிற்சிக்கு மட்டும் நீச்சல் குளங்கள் செயல்படலாம்

சமுதாய, அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிச.1 முதல் 31 வரை நடத்த அனுமதி

கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கலாம்

கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்

பள்ளி மாணவர்களுக்கு 4 நாட்களில். அமைச்சர் முக்கிய அறிவிப்பு.!!!


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவது பற்றிய அறிவிப்பு நான்கு நாட்களில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து இணையத்தில் வரும் தகவல்கள் உண்மையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அனைத்துப் பாடங்களும் கல்வி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை நான்கு நாட்களில் முதல்வர் பழனிசாமிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு அவர் எந்தெந்த பாடங்களை நடத்துவது என்று முடிவு எடுப்பார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் அறிவியல் திறனறித் தேர்வு


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி., மற்றும் விபா இணைந்து ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் திறனறித்தேர்வை நடத்துகின்றனர். 

இணைய வழியில் இத்தேர்வு, நடத்தப்படுகிறது.வழக்கமாக, மையத்தில் நடத்தப்படும் இத்தேர்வு, நடப்பாண்டில் கொரோனா பாதிப்பினால், மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் தேர்வில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றும், இன்றும், இத்தேர்வு தேசிய அளவில் நடக்கிறது.தேசிய அளவில் லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர். 

நேற்று காலை, 10:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, ஏதேனும் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் மாணவர்கள் இணையத்தில் தேர்வு எழுதினர்.உடுமலை, கல்வி மாவட்டத்தில், 20 மாணவர்கள் இத்தேர்வை தங்களின் வீடுகளிலிருந்து ஆன்லைனில் எழுதினர். மாணவர்கள், தேசிய அளவிலான ஒரு தேர்வை, வீட்டிலிருந்து எழுதுவது புதுமையானதாக இருப்பதாகவும் கருத்துகளை தெரிவித்தனர். 

விஞ்ஞான் பிரசார் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், மாநில செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியர் சரவணன் மற்றும் சதீஷ்குமார் தேர்வுகளை பார்வையிட்டனர்.

TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் ஹால் டிக்கெட் வெளியீடு - டவுன்லோட் செய்வது எப்படி?


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான நுழைவுச் சீட்டை tnusrbonline.org அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. அட்மிட் கார்டில் தேர்வின் தேதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும். தேர்வுக்கு முன்னும் பின்னும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNUSRB ஹால் டிக்கெட்:

10,908 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை TNUSRB செப்டம்பர் 17 அன்று வெளியிட்டது மற்றும் விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை ஆன்லைனில் நடைபெற்றது. இதில் தேர்வர்கள் 3 முறைகளில் தேர்வு செய்யப்படுவர்.

முதல் சுற்று எழுத்துத் தேர்வாக இருக்கும், பின்னர் உடல் அளவீட்டு சோதனை / உடல் திறன் சோதனை சுற்று மற்றும் இறுதி தேர்வுக்கு முன் நேர்முகத்தேர்வு நடைபெறும். இதற்கான முதற்கட்ட எழுத்து தேர்வு டிசம்பர் 13ம் தேதி நடைபெற உள்ளது.

TNUSRB 2020 கான்ஸ்டபிள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி:

TNUSRB அதிகாரப்பூர்வ வலைத்தளதிற்கு செல்லவும்.


கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு பிரிவில் உள்நுழைய இணைப்பைக் கிளிக் செய்க.
உள்நுழைவு விவரங்களை (பதிவு எண் & பிறந்த தேதி) உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

ஹால் டிக்கெட் ஆப்ஷனை கிளிக் செய்து அதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

அருகம்புல் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?


ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி நெய் விட்டு சூடுபடுத்தவும். இதனுடன் அருகம்புல் சாறு சேர்க்கவும். பின்னர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். 

இதனுடன் சிறிது மிளகுப் பொடி சேர்க்கவும். லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும். இது உடல் வெப்பத்தை குறைக்கும், வெட்டை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று புண்களை ஆற்றும் சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. 

கை கால் வீக்கத்தை போக்குகிறது. மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும் வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆற்றும். எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய அருகம்புல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது.

448 நோய்ககளைக் குணமாக்கும் துளசி


துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இயற்கை தந்த படைப்புகளில் துளசிஅற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.முன்னைய காலங்கில் சித்தர்களாலும் முனிவர்களாலும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இத் துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை பீடித்துக்கொன்டுதான் இருக்கின்றது.

எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் அருந்தி வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

துளசி நீர் எப்படி செய்வது?

முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.

இதை எட்டு மணிநேரம் மூடி வைத்து பின்பு பின்னர். வெறும் வயிற்றில். ஒரு டம்ளர்ரோ, அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.

இவ்வாறு 48 நாட்கள் பருகினால். இதனால் 448 நோய்கள் குணமாகும் அத்துடன் தோல் சுருக்கம் மறையும் நரம்புகள் பலப்படும் பார்வை குணமடையும் இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.

மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

வியாதி உள்ளவர்கள் தான். துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.

CPS-ல் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் CPS -ஐ இரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையினை மட்டும் நோக்கி -


🚫CPS ஒழிப்பு இயக்கம்🚫


பழையபோராட்டங்களைப் போன்றுஇல்லாமல்,


CPS -ஐ இரத்து செய்ய வேண்டும் என்றஒற்றை கோரிக்கையினை மட்டும்நோக்கி

புதிய வலுவுடன் இந்த தளத்தினை(Telegram) கொண்டு செல்லதிட்டமிடப்பட்டுள்ளது.

 தற்போது இந்த CPS ஒழிப்பு இயக்கம்telegram குரூப்பின்  எண்ணிக்கை22,000 ஐ  நோக்கி.

ஆறு இலக்கத்தில் எண்ணிக்கையுள்ளCPS அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் எண்ணிக்கையுடன்ஒப்பிடும் போது 21,000 என்பதுகுறைந்த எண்ணிக்கையே!!

 

தற்பொழுது 21,241 யை கடந்துள்ளது. இது மிகப்பெரிய விசயம்.

இதனைசாதாரணமாகஎடுத்துக்கொள்ள முடியாது.


ஏனெனில் 10000 எண்ணிக்கைகொண்ட எந்த வாட்ஸ் அப் தளமோடெலிகிராம் தளமோ ஒரே குரூப்பில்அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களைஇணைக்கவில்லை.

ஆனால் நம் இலக்கு 2,00,000 இரண்டுஇலட்சம்.

 CPS-ல் உள்ள அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்கள் ஓர் இனமாக முயற்சிசெய்ய வேண்டும்.

நாம்அனைவரும் ஒன்று சேர்ந்துமுயற்சித்தால் அடுத்த வாரமே ஆறுஇலக்கமான ஒரு இலட்சத்தைகண்டிப்பாக எட்டிடுவோம்.

நம்பிக்கையுடன் முயற்சிப்போம்நண்பர்களே!

🚫CPS ஒழிப்பு குரூப்பில் இணைவதற்குகீழ் குறிப்பிட்டுள்ள இரண்டுலிங்கையும் கிளிக் செய்ய வேண்டும்* 🚫

 Step 1:

https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger

 Step 2:

  டெலிகிராம் ஆப் டவுன்லோடுசெய்தபின் CPS ஒழிப்பு இயக்கம்குரூப்பில் இணைவதற்கு கீழ்கண்டLink-ஐ கிளிக் செய்யவும்.

https://t.me/joinchat/PjyGwA_wxaWHeHM_9uxkfg


தன்னெழுச்சியாக ஒன்றுபடுவோம்நண்பர்களே !!!

தன்னெழுச்சியாக ஒருங்கிணைப்போம்நண்பர்களே..!!!

நன்றி!

நன்றி.!

மாநில, மாவட்ட தன்னெழுச்சிபோராளிகள்

CPS ஒழிப்பு இயக்கம்.

அரசுப்பள்ளிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தைத் தானமாக வழங்கிய தொழிலதிபர்!



கோவைஎலச்சிபாளையம் அரசுநடுநிலைப்பள்ளியைத் தரம் உயர்த்தஅப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்  ஒருவர், ரூ.3 கோடி மதிப்புள்ள 1.50 ஏக்கர் நிலத்தைத் தானமாகவழங்கியுள்ளார்.


கோவைகருமத்தம்பட்டி பேரூராட்சிக்குஉட்பட்ட எலச்சிபாளையம் கிராமத்தில்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிசெயல்பட்டு வருகிறது. அப்பகுதியைச்சேர்ந்த குழந்தைகள் படிக்க ஏதுவாக1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப்பள்ளியில் தற்போது 174 மாணவர்கள்படித்து வருகின்றனர். இடப்பற்றாக்குறை நிலவி வந்ததால்உயர் நிலைப்பள்ளியாக அப்பள்ளி தரம்உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இதனால் உயர்நிலைப் பள்ளிக்குச்செல்ல வேண்டுமெனில் மாணவர்கள்15 கிலோமீட்டர் பயணித்து அரசூர், தெக்கலூர், சூலூர் பகுதிகளுக்குச்செல்ல வேண்டிய நிலை இருந்துவருகிறது.


எனவே, அப்பகுதியைச் சேர்ந்ததன்னார்வலர்கள், பொதுமக்கள்இணைந்து பள்ளியைத் தரம் உயர்த்தமுயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அரசுத் தரப்பை அனுகியபோது, இடம்இருந்தால் கட்டிடத்தைக்கட்டிக்கொடுப்பதாகத்தெரிவித்துள்ளனர். இதுகுறித்துஅப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்  ராமமூர்த்தியிடம் தெரிவித்தவுடன், அவர் தனக்குச் சொந்தமான ரூ.3 கோடி  மதிப்புள்ள 1.50 ஏக்கர் நிலத்தைத்தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து எலச்சிபாளையம் கிராமமக்கள் கூறுகையில், "கருமத்தம்பட்டிபேரூராட்சிப் பகுதியில் 1 லட்சத்துக்கும்அதிகமானோர் உள்ளனர். இருப்பினும், அரசு உயர்நிலைப்பள்ளி இல்லாததால்எலச்சிபாளையத்தில் பள்ளியைத் தரம்உயர்த்தத் தொடர்ச்சியாகப் பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். தொழிலதிபர் ராமமூர்த்தியிடம்தெரிவித்தவுடன் நடுநிலைப் பள்ளிக்குஅருகே 1.50 ஏக்கர் பரப்பளவிலானதனது நிலத்தை வழங்கி உயர்நிலைப்பள்ளி கட்ட ஆவனசெய்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்தமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம், தொலைவில் உள்ளபள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகள்சென்று வீடு திரும்பும் வரைஅச்சத்துடனேயே பெற்றோர் இருக்கும்சூழல் தவிர்க்கப்படும். இடத்தைத்தானமாக அளித்த ராமமூர்த்திக்குநன்றி தெரிவிக்கும் விதமாக ஊர்மக்கள் சார்பில் நாளை (நவ.29) பாராட்டு விழா நடத்த ஏற்பாடுசெய்துள்ளோம். இடம்கிடைத்துள்ளதால் உயர்நிலைப்பள்ளியாக உடனே தரம் உயர்த்தஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


தந்தை வழியில் மகனும் உதவி

இதுகுறித்துத் தொழிலதிபர்ராமமூர்த்தி கூறுகையில், "எலச்சிபாளையம் கிராமம் விவசாயம்மற்றும் விசைத்தறித் தொழிலைப்பிரதானமாகக் கொண்டுள்ளது. இங்குகுழந்தைகள் படிப்பதற்காக 1957-ல்என்னுடைய தந்தை பள்ளிக்குநிலத்தைத் தானமாகக் கொடுத்து, பள்ளியும் கட்டிக் கொடுத்துள்ளார். தற்போது மாணவர்களின் படிக்கும்ஆர்வம் அதிகரித்துள்ளதால்கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளிஇல்லாததால் அதைக் கட்ட கிராமமக்கள் முயற்சிகள்மேற்கொண்டுவந்தது குறித்துஎன்னிடம் தெரிவித்தனர்.

அதன்படி நிலத்தை அரசுக்குத்தானமாக வழங்கி உள்ளேன். இதனால்இந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள்எந்தவித சிரமமும் இல்லாமல் கல்விபயில முடியும். இந்த இடத்தில்மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு, இங்குபயிலும் மாணவர்கள் வாழ்வில்முன்னேறினால் அதுவே எனக்குமிகுந்த மனநிறைவைத் தரும். மேலும்பள்ளிக்காக நிலம் வழங்க எனக்குவாய்ப்புக் கொடுத்த கிராம மக்களுக்குநன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன். மேலும்பள்ளிக்குத் தேவையான உதவிகளைஇயன்றவரை செய்யத் தயாராகஉள்ளேன்" என்றார்

தணிக்கை (AUDIT )தொடர்பான ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள்

-


தணிக்கை தொடர்பானஆசிரியர்களுக்கான 10ஆலோசனைகள் :

 வட்டாரக் கல்வி அலுவலகங்களில்  மண்டல தணிக்கைத் துறைஅலுவலர்களால், ஆசிரியர்களின்பணிப் பதிவேடு தொடர்பானதணிக்கை நடைபெறும் போது,

தணிக்கை அலுவலர்களால் பொதுவாகசுட்டிக் காட்டப் படும் சிறு சிறுகுறைபாடுகள்:

1. ஒரு ஆசிரியர் அரசுப் பணிக்கு வரும்முன்னரே, கூடுதல் கல்வித் தகுதிபெற்றிருந்தால், பணியில் சேரும்முன்னரே உயர் கல்வி பெற்றுள்ளார்என்ற பதிவை வட்டாரக் கல்விஅலுவலருக்கு விண்ணப்பித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

2. உயர் கல்வி பயில்வதற்கான முன்அனுமதி ஆணை வழங்கப் படும்விவரம், 2012 ஆம் ஆண்டிற்கு பின்புதான், பணிப் பதிவேட்டில் பதிவுசெய்யப் படுகிறது. அதற்கு முன்னர்ஆணை மட்டும் தான், வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தணிக்கைத் துறைஅலுவலர்கள், பணி நியமன நாள் முதல்இன்று வரை, பணிப் பதிவேட்டில் பதிவுசெய்துள்ள அனைத்து கூடுதல் கல்வித்தகுதிகளுக்கும் முன் அனுமதி அல்லதுபின்னேற்பு பதிவு செய்வது கட்டாயம்என வலியுறுத்துகின்றர். ஊக்கஊதியம் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முன் அனுமதி / பின்னேற்பு ஆணையை வட்டாரக் கல்விஅலுவலரிடம் காண்பித்து, பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

3. 10 ஆம் வகுப்பு முதல், நாம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்திருக்கும்அனைத்து கல்வித் தகுதிகளுக்கும்உண்மைத் தன்மைச் சான்றினைப்பெற்று பணிப் பதிவேட்டில் பதிவுசெய்திருக்க வேண்டும். அதன் நகலும்ஆசிரியர் கைவசம் வைத்திருக்கவேண்டும்.

4. பணிப் பதிவேட்டில், தற்காலிகதேர்ச்சி சான்று மட்டும் பதிவுசெய்திருத்தல் கூடாது. அப்படிப்பிற்கான பட்டச் சான்றை பணிப்பதிவேட்டில் பதிவு செய்திருக்கவேண்டும்.

5. இதற்கு முந்தைய தணிக்கையின்போது, ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப் பட்டிருந்தால், அவற்றைநிவர்த்தி செய்திருக்க வேண்டும்.

6. பணியிட மாறுதல் ஏதேனும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப் படாமல்விடுபட்டிருந்தால், அவற்றை உரியஆவணங்களின் அடிப்படையில்விடுதல் பதிவாக பதிவு செய்யவிண்ணப்பித்து, பதிவு செய்யவேண்டும்.

7.  CL, RH தவிர பிற அனைத்து விடுப்புவகைகள், ஈட்டிய விடுப்பு பணப் பயன், ஈட்டிய விடுப்பு கையிருப்பு, பணிக்காலம் சரி பார்ப்பு இவற்றில் ஏதேனும்விடுபட்டிருந்தால் சரி செய்து கொள்ளவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டகாலம், ஊதியமில்லா விடுப்பாக பதிவுசெய்யப் பட்டிருக்க வேண்டும். கலந்துகொண்ட போராட்ட நாட்களுக்கு ஏற்ப, ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிபோயிருக்க வேண்டும்.

8. குடும்ப உறுப்பினர் விவரம், வாரிசுநியமனம் இவற்றில் ஏதேனும்மாற்றங்கள் இருப்பின் உடனேவிண்ணப்பித்து சரி செய்து கொள்வதுநல்லது.

9. பி.எட். கற்பித்தல் பயிற்சிக்காக, அரைச் சம்பள விடுப்பு எடுத்திருந்தால், அதை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புகணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

10. பணிப் பதி வேட்டின் நகல்தங்களிடம் இருந்தால், அனைத்துபதிவுகளும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்வதுநல்லது.

போலி கல்வி சான்றிதழ் (FAKE CERTIFICATE ) கொடுத்து பணி : பள்ளிகளில் விசாரணை



போலிகல்வி சான்றிதழ் கொடுத்துபணி : பள்ளிகளில் விசாரணை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்ஊழியர்கள் பலர் பணியில்சேர்ந்தபோது கொடுத்த கல்விசான்றிதழ் உண்மைதானா எனசம்பந்தப்பட்ட பள்ளிகளில் கோயில்நிர்வாகம் விசாரணை நடத்திவருகிறது.


இக்கோயிலில் சில ஆண்டுகளுக்குமுன் சேவுகர் உள்ளிட்டபணியிடங்களுக்கு ஆட்கள்நியமிக்கப்பட்டனர். பள்ளிகள் வழங்கியகல்விச்சான்றிதழ் அடிப்படையில்பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இதில் சேவுகர் காமாட்சி என்பவர்கொடுத்த 10ம் வகுப்பு சான்றிதழ்போலியானது என கோயில் நிர்வாகஅதிகாரி செல்லத்துரைக்கு கடிதம்வந்தது.


விசாரணையில் உண்மை எனத்தெரியவந்ததை தொடர்ந்து அவர்'சஸ்பெண்ட்' செய்ய பட்டார். இதேபோல்சிலரும் பணியில் சேர்ந்திருப்பதுவிசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து காமாட்சியுடன் பணியில்சேர்ந்தவர்களின்கல்விச்சான்றிதழ்களை ஆய்வு செய்யஉத்தரவிடப் பட்டது. முதற்கட்டமாகபள்ளி சான்றிதழ் உண்மைதானா எனசம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கேட்டுகோயில் நிர்வாகம் கடிதம்எழுதியுள்ளது.


இணைகமிஷனர் செல்லத்துரைகூறுகையில், ''பள்ளி நிர்வாகங்கள்அளிக்கும் பதிலை பொறுத்துநடவடிக்கை இருக்கும்'' என்றார்


திருமணமான பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதம் அனைவரும் கட்டாயம் படிங்க!!!


அன்புள்ள அம்மா,
எல்லா பெண்களைப் போலவே கல்யாண கனவில் களித்து மனதைக் கொள்ளையடித்தவரை உங்கள் சம்மதத்துடன் குதூகலமாக ஆடம்பரமாக திருமணம் புரிந்து கொண்டேன் .

பின்னர் தான் தெரிந்தது வாழ்க்கை சினிமாவில் போடும் சுபத்திற்கு பின்பு தான் தொடங்குகிறதென்று.

வாழ்க்கையில் விரும்புவது விரும்பப் படுவதென்பதையும் தாண்டி நிறைய இருக்கிற்து என்று தெரிய வருகிறது

எத்தனை பொறுப்புகள்?

எத்தனை சுமைகள்?

எத்தனை எதிர் பார்ப்புகள்?

எத்தனை தியாகங்கள்?

எத்தனை ஏமாற்றங்கள்?

நினைத்த நேரத்தில், நிம்மதியாக முழு தூக்கம் கலைந்த நேரத்தில் எழுந்திருக்க முடியவில்லை..

 குடும்பத்தில் மற்றவர் விழிக்கும் முன் நான் விழித்து என் வேலைகளை ஆரம்பிக்க வேண்டி இருக்கு..

உன்னோடு இருந்த நாட்களில் எனக்கென்ற விருப்பமான உடைகளில் சிட்டாக பறந்து கொண்டிருந்தேன்..

 இங்கே அவர்கள் விரும்பிய உடையில் வலம் வருவதையே விரும்புகின்றனர்.. 

இதோ என் தோழியை/தோழனைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று உன்னிடம் சொல்லிவிட்டு சென்றது போல் சொல்லிச் செல்ல இயலவில்லை.

என் தேவைகளை விட அடுத்தவர் தேவைகளை முன் வைத்தே நான் நடந்து கொள்ள வேண்டி இருக்கு.. 

நினைத்த நேரத்தில் தூங்க கூட முடிவதில்லை. 

எனக்கு விருப்பமான டிவி நிகழ்ச்சியைக் கூட பார்க்க முடிவதில்லை..

சில நேரங்களில் எதற்கு இந்த திருமணம் என்று அலுப்பாக இருக்கிறது..

 இந்த திருமணம் என் சுதந்திரதை அல்லவா பறித்து விட்டது.. 

என் சுயத்தை அல்லவா சூறையாடி விட்டது

உன்னிடம் இருந்த போதே மிக மகிழ்வாக இருந்தேனே! 

உன்னிடம் திரும்ப வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது. 

உன் மடியில் படுத்து கொள்ளனும் போல இருக்கிறது அம்மா

வேண்டாம் வேண்டாம் என்று நான் சொல்ல சொல்ல ஒரே ஒரு இட்லி போட்டுக்கோ.. 

உனக்கு பிடிக்குமேன்னு பால் கோவா செஞ்சேன்னு நீ பின்னாலயே வந்து வந்து ஊட்டி விடுவதை கொஞ்சிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பிலேயே இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது.. 

ஆனால் அடுத்த கனமே நீயும் என் வயதில் என்னை மாதிரி தானே உணர்ந்திருப்பாய். 

நீ உன் திருமணத்தில் செய்த தியாகங்கள் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது..

நீ அன்று நான் இன்று நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா? 

நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் பாசத்தையும் எதிர்பாரா அன்பையும் நான் திருப்பித் தர வேண்டாமா.. என்று நினைத்து கொள்கிறேன்..

 அதுவும் உன்னிடம் இருந்து கற்றது தான்..

அப்படி நினைக்கும் போது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது.. தெளிவாக புரிகிறது

 காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல் நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவேன்.. 

நீ செய்த தியாகங்களை நானும் செய்ய தயாராகி விடுவேன்..

உனக்கு நாங்கள் கொடுத்த மன உறுதியை திடத்தை என் குடும்பமும் எனக்கு தரும். 

ஆமாம் மா நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகி விட்டேன்..

நன்றிம்மா…

என்றும் அன்புடன்…!!

        உன் தேவதை

பெண் அன்பில் ஒரு தாய்

பெண் அழகில் ஒரு தேவதை

பெண் அறிவில் ஒரு மந்திரி

பெண் வெறுப்பில் ஒரு நெருப்பு

பெண் வெற்றிக்கு ஒரு மாலை

பெண் நட்பில் ஒரு நேர்மை

பெண் கண்டிப்பில் ஒரு ஆசிரியர்

மொத்தத்தில் பெண் தியாகத்தின் மறு உருவம் 


NET தோ்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு.


 NET தோ்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு.

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..

ஒத்திவைக்கப்பட்ட நெட் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு, சனிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு: நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மையங்களில், வியாழக்கிழமை (நவ.26) நடைபெற இருந்த வேதி அறிவியல் மற்றும் கணித அறிவியல் பாடங்களுக்கான நெட் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.


இத்தோ்வுகள், திங்கள்கிழமை (நவ.30) நடைபெறவுள்ளன. இதற்கான தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு, சனிக்கிழமை வெளியிடப்பட்டன. அவற்றை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, என்டிஏஇணையதளத்தை அணுகலாம்.

உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு , புயலாக மாறுமா?


 உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு , புயலாக மாறுமா?

  

இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


 தென்கிழக்கு வங்கக்கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவானது. இது திங்கள்கிழமை மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. இதனால், தென் தமிழகப் பகுதிகளில் மூன்று நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:

மிதமான மழை: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகம் மற்றும் தமிழகக் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (நவ.30) மிதமான மழையும் பெய்யக்கூடும்.

டிச.1-ஆம் தேதி: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்.... சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியில் 90 மி.மீ., திருப்பூா் மாவட்டம் அவிநாசியில் 80 மி.மீ., மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தானில் தலா 70 மி.மீ., தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.


மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் நவ.30-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுதவிர, தென்மேற்கு வங்கக் கடல் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னாா் வளைகுடா பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு டிசம்பா் 2-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருவேறு கருத்துகள்: தென் கிழக்கு வங்கக்கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவானது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்று ஒரு தரப்பும், புயலாக மாறாது என்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்துள்ளன. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஓய்வு பெற்ற ஆய்வாளா் ஒருவா் கூறுகையில், ‘நவம்பா் மாதத்தில் ஒருபுயல் உருவாகிய பிறகு அடுத்த வாரத்தில் மற்றொரு புயல் உருவாவது வழக்கமாக உள்ளது. 1977-ஆம் ஆண்டு நவம்பா் 11-இல் வங்கக்கடலில் ஒரு புயல் உருவாகி நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. நவம்பா் 17-இல் மற்றொரு புயல் உருவாகி ஆந்திர கடலோரத்தைக் கடந்தது. இதுபோலதான் தற்போது காணப்படுகிறது.

‘நிவா்’ புயல் வலுவிழந்துள்ள நிலையில், மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, ‘நிவா்’ புயல் வந்த அதே பாதையில் பாதி தொலைவு வரை பயணிக்க வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.


இதை இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மறுத்துள்ளனா். தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற குறைவான வாய்ப்புதான் உள்ளது. ஏனெனில், அதற்கான சூழ்நிலை தற்போது வரை காணப்படவில்லை. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அந்தமானில் கீழ்பகுதியில் உருவாகியுள்ளது. போதுமான வெப்பம் கிடைக்கும் என்று கூறமுடியாது. இது அதிகபட்சமாக ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வரை வலுவடைய வாய்ப்பு உள்ளது. தொடா்ந்து, தமிழகம் வழியாக அரபிக்கடல் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, புயல் உருவாக வாய்ப்பு இல்லை என்றனா்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு'' ஊதிய உயர்வு தர கோரிக்கை !!

''

 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தர கோரிக்கை

 இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


 'பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:கடந்த, 2012ல், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்களை, 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், ஜெயலலிதா நியமித்தார்.தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டும் பணி புரிகின்றனர். அவர்களுக்கு, 7,700 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.அதாவது, 2014 மற்றும் 2017ம் ஆண்டுகளில், அனைவருக்கும் கல்வி இயக்க தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, சம்பளத்தை உயர்த்தும் போது, பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கும், சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது.

இம்மாதம், 'சமக்ரா சிக் ஷா' தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குனர், இம்மாதம், 16ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.எனவே, பகுதி நேர ஆசிரியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; காலதாமதம் செய்ய வேண்டாம்.இவ்வாறு, செந்தில்குமார் கூறியுள்ளார்.


M.Phil, Ph.D ஆய்வாளர்களின் புகாருக்கு யுஜிசி விளக்கம்.


பிழையான வங்கிக் கணக்கு  விவரங்களால் நிதிப் பரிமாற்றத்தில் இடையூறு ஏற்படுவதாக, எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வாளர்களின் பல்கலைக்கழக மானியக்குழு விளக்கம் அளித்தது.

புதுடெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) 13 திட்டங்களின் கீழ், நிதியுதவி மற்றும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இதன்படி ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு முதுநிலைப் பட்டப்படிப்புக்கான இந்திரா காந்தி உதவித்தொகை, முதுநிலைப் படிப்புக்கான பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவர்களுக்கான உதவித்தொகை, அறிவியல் மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான ஆராய்ச்சி உதவித்தொகை, அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் ஆய்வாளர்களுக்கான டாக்டர் கோதாரி முதுமுனைவர் ஆராய்ச்சி உதவித்தொகை, கலை மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் முதுமுனைவர் ஆராய்ச்சி உதவித்தொகை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஆய்வாளர்களுக்கான ராஜீவ்காந்தி தேசிய நிதியுதவி, சிறுபான்மையினருக்கு மவுலானா ஆஸாத் நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களின் கீழ் முதுநிலைப் பட்டப்படிப்பு, எம்ஃபில்., பிஎச்.டி. போஸ்ட் பிஎச்.டி. படிப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.


இதற்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் மற்றும் யுஜிசி அனெக்சரில் உள்ள சான்றிதழ்களில் நெறியாளர், துறைத் தலைவர் மற்றும் முதல்வரிடம் கையொப்பம் பெற்ற சான்றிதழை மாதந்தோறும், அவர்கள் படிக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்பட்டுள்ள யுஜிசி நிதியுதவி பொறுப்பாளர்கள் (நோடல் ஆபீசர்ஸ்) மூலமாக யுஜிசி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின்னர் மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு உதவித்தொகை மற்றும் நிதி அனுப்பப்படும். இந்நிலையில் இந்த நிதியுதவி மற்றும் உதவித்தொகை பெறுவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக தொடர்ச்சியாகப் புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதுகுறித்துப் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவி பெறும் கோவையைச் சேர்ந்த எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வாளர்கள் சிலர் கூறும்போது, ''எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையில், ஆய்வுத் திட்டங்கள் மற்றும் பிற தகுதிகளின் அடிப்படையிலும் நிதியுதவி மற்றும் உதவித்தொகைக்கு யுஜிசி மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறோம். ஆனால், அந்த நிதியுதவியைப் பெறுவதில் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்திக்கிறோம். சிலருக்கு இத்தொகை கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தகுதி பெற்ற நாளில் இருந்தும், பல மாதங்களாகவும், இடையிடையே சில மாதங்களும் நிதியுதவி கிடைப்பதில்லை. யுஜிசியைத் தொலைபேசி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்புகொண்டு விளக்கம் பெற முடிவதில்லை. மற்ற ஆய்வாளர்களுக்குத் தொடர்ச்சியாக நிதி விடுவிக்கப்படுவதில்லை. இப்பிரச்சினைகளை விரைவாகக் களைந்து நிதியை விடுவிக்க யுஜிசி  நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

நீண்டகாலமாகத் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து ஆய்வாளர்கள்  எழுப்பி வரும் புகாருக்குப் பல்கலைக்கழக மானியக்குழு  அளித்துள்ள விளக்கத்தில், ''ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு நிதி விடுவிக்கும்போது, பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குக்குச் செல்வதில்லை. வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் தவறாக இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது ஆவணங்களின் உள்ள மாணவர்களின் பெயரும், வங்கிக் கணக்கு விவரத்தில் உள்ள மாணவர்களின் பெயரும் பொருந்தாமை, வங்கிக் கணக்கு  எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாமை, தவறான வங்கிக் கணக்கு எண், தவறான வங்கியின் ஐஎஃப்சி எண், இருவர் பயன்படுத்தும் வங்கிக் கணக்கு, பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கு உள்ளிட்ட காரணங்களால் நிதியுதவிப் பரிமாற்றத்தில் தடை ஏற்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஆய்வாளர்கள் இப்பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் அவர்கள் அளித்த ஆவணங்கள் அடிப்படையில், சரியான வங்கிக் கணக்கு எண் விவரத்தை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற சிக்கல்கள் உள்ளவர்கள் அதன் விவரத்தை, தங்களுடைய யுஜிசி  நிதியுதவி திட்டப் பொறுப்பாளர்கள் மூலமாக வரும் டிச.10-ம் தேதிக்குள் nspugc1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இந்திய விமானப் படைப் பிரிவில் ஏர்மேன் பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு


இந்திய விமானப் படைப் பிரிவில்ஏர்மேன் பணிக்கு நேரடி ஆள்சேர்ப்புவேலைவாய்ப்பு பயிற்சித் துறைஅறிவிப்பு





பள்ளிகள் திறந்தபின் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த சுவரொட்டி வெளியீடு


         

பள்ளிகள் திறந்தபின் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டுநெறிமுறைகள் குறித்த சுவரொட்டிவெளியீடு.

       



டிசம்பர் 15- ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு:


 

டிசம்பர் 15- ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இன்று டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார் . ஆலோசனைக்கு பின்னர் முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்பே அறிவித்த நிலையில்,வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த மினி கிளினிக் துவங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்:


 

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் நாடு முழுவதும் பள்ளி-கல்லூரிகளை மூட கடந்த மார்ச் 16-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

பின்னர் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால், இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அதேநேரம் புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

கடந்த ஜூன் 8-ந்தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாளை மறுநாள் அறிக்கை வழங்கப்படும்.

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

* அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது.

* அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறுவது மக்கள் கையில்தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

டெபிட் கார்டு-கிரடிட் கார்டு சில வித்தியாசங்கள்:தெரிந்து கொள்ளுங்கள் :


தற்போது டெபிட் கார்டு, கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. டெபிட் கார்டுக்கும், கிரடிட் கார்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்

டெபிட் கார்டு-கிரடிட் கார்டு
இந்தியாவில் டெபிட் கார்டு, கிரடிட் கார்டு இவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜன்தன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு டெபிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. கணக்குகள் தொடங்கிய அனைவருக்கும் டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஎம்ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

டெபிட் கார்டுக்கும், கிரடிட் கார்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்:

வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு ஒன்றை துவங்கும் போது, இக்கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு டெபிட் கார்டை வங்கி அவருக்கு அளிக்கும். இந்த டெபிட் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் கணக்கில் இருக்கும் நிலுவை பணத்தை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

எனவே கணக்கில், பணம் இல்லையென்றால் டெபிட் கார்டு மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியாது. இதில் பண பரிமாற்றத்திற்கு வட்டி விகிதங்கள் முற்றிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. டெபிட் கார்டை ஒப்பிடுகையில் கிரடிட் கார்டு பயன்பாடு என்பது முற்றிலும் மாறுபட்டது. கிரடிட் கார்டு பெற்றுள்ளவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக அறிவித்திருக்கும்.

உதாரணமாக வங்கி கணக்கில் ஒருவருக்கு உச்சவரம்பு ரூ.1 லட்சம் என்றால் அந்த தொகை வரை பணம் எதுவும் செலுத்தாமலேயே பணத்தை எடுக்க முடியும். எனினும் இத்தொகைக்கான குறிப்பிட்ட வட்டி தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டி கட்டவில்லை எனில் அபராத தொகை செலுத்த நேரிடும்.

எனவே பணம் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் கிடைக்கும் வருமானம் வட்டி கட்டவே போய்விடும். இயன்றவரை டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்த முயலுங்கள். அவசரமான சூழ்நிலையில் மட்டும் கிரடிட் கார்டை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகும். மேலும் கிரடிட் கார்டில் செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியில் செலுத்தி விட வேண்டும். அவ்வாறு செய்தால் வட்டி தொகையை சேமிக்கலாம்.

CENTRAL GOVT -JOB- B.E,B.TECH CANDIDATES ILL APPLY-LAST DATE- 21.12.2020

CENTRAL GOVT -JOB- B.E,B.TECH CANDIDATES ILL APPLY-LAST DATE- 21.12.2020

                   



அரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்?



அர்ச்சனாவின் அப்பா சக்திவேல் திண்டுக்கல்லில் சுமை தூக்கும் ஒரு தொழிலாளி. அம்மா ரேவதி நூறு நாள் திட்டத்தில் வேலை பார்ப்பவர். அர்ச்சனாவுக்கு மருத்துவக் கல்லூரிக் கலந்தாய்வுக்கான அழைப்பு வந்தது. முதல் நாளே சென்னைக்கு வந்தது குடும்பம். அன்றைய இரவை அவர்கள் நேரு விளையாட்டரங்கின் வாயிலில் கழித்தார்கள். அறை எடுத்துத் தங்கும் வசதி அவர்களிடத்தில் இல்லை. அர்ச்சனா ஓர் அரசுப் பள்ளி மாணவி. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டால் பயனடைந்தவர். கலந்தாய்வுக்கு வந்த அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அரிகிருஷ்ணனின் தந்தை திருச்சியில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்க்கிறார். தஞ்சை மாவட்டம் பூக்கொல்லை கிராமத்து மாணவி சகானாவின் தந்தை கணேசனும் தாயார் சித்ராவும் கூலித் தொழிலாளர்கள். சிவகங்கை மாவட்டம் அரியக்குடி அரசுப் பள்ளி மாணவி அமிர்தத்தின் பெற்றோர் ராமுவும் ராஜேஸ்வரியும் தட்டி முடைகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் தென்காளம்புத்தூர் பகவதிக்கு அப்பா இல்லை; அம்மா சமுத்திரக்கனி விவசாயக் கூலித் தொழிலாளி; மாடு மேய்த்துக்கொண்டும் பால்கறந்து கொண்டும் நீட்டுக்குப் படித்தார் பகவதி.

இந்தப் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பைச் சாத்தியப்படுத்திய உள் ஒதுக்கீட்டு மசோதாவானது சட்டமன்றத்தில் ஏக மனதாக நிறைவேறியது. ஆளுநர் உடனே கையெழுத்திடுமாறு எதிர்க்கட்சி போராட்டம் நடத்தியது. அரசு சம்பிரதாயங்களைப் புறக்கணித்து ஆணை பிறப்பித்தது. ஆளுநர் அனுமதி அளித்தார். இவர்கள் அனைவரும் குடிமைச் சமூகத்தின் நன்றிக்குரியவர்கள்.


இந்த ஆண்டு மொத்தம் 313 எம்பிபிஎஸ் இடங்களையும், 92 பிடிஎஸ் இடங்களையும், ஆக 405 இடங்களை அரசுப் பள்ளி மாணவர்கள் பெறுவார்கள். கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்ற இடங்கள் ஆறு என்பதோடு இதை ஒப்பிட்டுக் கொள்ளலாம். இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய 8.41 லட்சம் மாணவர்களில், 3.44 லட்சம் பேர், அதாவது 41% அரசுப் பள்ளி மாணவர்கள். இவர்களில் வெறும் 405 பேர் மருத்துவக் கல்லூரி வாசலை மிதிப்பதற்கே ஒரு சமூகம் ஏன் இத்தனை பிராயாசைப்பட வேண்டும்?

தாராளமயமும் தனியார்மயமும்

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தபோது தமிழகத்தில் எட்டுக் கல்லூரிகள்தான் இருந்தன. மருத்துவக் கல்லூரிகள் ஏழுதான். ஆனால், அப்போது உள் ஒதுக்கீடு எதுவும் தேவைப்படவில்லை. ஏனெனில், 95% பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ, அரசு உதவி பெறும் பள்ளிகளாகவோ இருந்தன. தராசின் இந்தத் தட்டு எப்போது தன் எடையை இழந்தது? எண்பதுகளின் பிற்பகுதியில் தாரளமயத்துக்கான கதவு திறக்கலானது. சக்தியுள்ளவன் பிழைக்கக் கடவது என்றொரு சித்தாந்தமும் விற்பனைக்கு வந்தது. தனியார்மயம் திறமையைப் போற்றும், ஒழுங்கைப் பேணும் என்ற பிரச்சாரம் செல்லுபடியானது. அந்தக் காலகட்டத்தில்தான் கல்வியும் மருத்துவமும் தனியார் கைகளுக்கு மாறத் தொடங்கின.

பீடத்தில் தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளிகள் ஒரு பீடத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த பீடத்தைப் பிரதானமாக மூன்று தூண்கள் தாங்குகின்றன. முதலாவது தூண் ஆங்கில மோகம். அரசுப் பள்ளிகள் தமிழில் பயிற்றுவித்தபோது அதற்கு மாற்றாக ஆங்கிலத்தில் போதித்தன தனியார் பள்ளிகள். ஆங்கிலமே அறிவு, ஆங்கிலம் பேசுதலே உயர்வு என்று அவை உரக்கச் சொல்லின. இதற்கு நேர்மாறாக உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள் தாய்மொழிக் கல்வியின் பெருமை பேசினார்கள். தாய்மொழிக் கல்வி நேரடியானது. அது சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கிறது. பிள்ளைகளை அவர்தம் கலாச்சாரத்தோடு இணைக்கிறது. தாய்மொழிக் கல்வியில் காலூன்றிய பிள்ளைகளுக்கு இரண்டாவது மூன்றாவது மொழிகள் கற்பது எளிதானது. தாய்மொழியில் படிக்கும் பிள்ளைகள் தன்மானம் மிக்கவர்களாக வளர்வார்கள். அறிவியல்ரீதியாக நிறுவப்பட்ட இந்தக் கருதுகோள்கள் எவையாலும் இந்து மாக்கடலைத் தாண்ட முடியவில்லை. ஆனால், கல்வி வணிகர்களின் ஆங்கில விற்பனை எந்த எதிர்க்குரலும் இன்றி இங்கே வெற்றிகரமாக நடந்தது.

தனியார் பள்ளிகளின் வெற்றிக்கான இரண்டாவது காரணம் மதிப்பெண் மோகம். கல்வியை மதிப்பெண்களால்தான் அளக்க வேண்டும் என்று ஒரு கருத்து வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. மதிப்பெண்கள் உயர்கல்விப் படிப்பில் இடம் வாங்கித் தரும், விசா தரும், வேலை தரும், நல்லன எல்லாம் தரும் என்று பரப்புரைக்குப் பலன் இருந்தது. இதே மண்ணில்தான் ‘கல்வி என்பது நல்லவற்றையும் தீயவற்றையும் பகுத்துணரக் கற்பிக்க வேண்டும்’ என்று சொன்ன காந்தி வாழ்ந்தார். அவரையும் ஒரு பாடச் சிமிழுக்குள் அடைத்து மதிப்பெண்களாக மாற்றுகிற ரசவாதம் நம் கல்வித் தந்தைகளுக்குத் தெரிந்திருந்தது.

தனியார் பள்ளிகளின் பீடத்தைத் தாங்கும் மூன்றாவது தூணின் பெயர் டாம்பீகம். பல்வேறு கட்டணங்களில் பள்ளிகள் உருவாகிவிட்டன. சமூகத்தின் ஒரு படிநிலையில் வாழும் ஒருவர் தன் பிள்ளைகளை அதற்கு இயைந்த பள்ளியில் சேர்த்தாக வேண்டும். இல்லையெனில் அது அன்னாரது கௌரவத்துக்கு இழுக்காகிவிடும்.

கடந்த 30 ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் மிகுந்து வருகையில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையோ குறைந்துவருகிறது. 1990-ல் கல்விக்காக அரசு செலவிட்டது 4%. 2019-ல் 3%. பள்ளிக் கல்வியை அரசு கட்டாயம் ஆக்கியிருக்கிறது. அதை இலவசமாகவும் வழங்குகிறது. நல்லது. ஆனால், அது இலுப்பைப்பூச் சர்க்கரையாக அல்ல, நயம் நாட்டுச் சர்க்கரையாகவும் இருக்க வேண்டும்.

உலகெங்கும் அரசுப் பள்ளிகள்

இந்தியாவில் தாரளமயம் தொடங்கியதன் உடன் நிகழ்வாகத் தனியார் பள்ளிகள் பெருகின என்று பார்த்தோம். ஆனால், இது முதலாளித்துவச் சித்தாந்தம் என்று கருதுவதிற்கில்லை. பல மேற்கு நாடுகளில் அரசுப் பள்ளிகள்தான் அதிகம். அங்கு கல்வி கற்றவர்கள்தான் உலகின் சிறந்த அறிவாளர்களாகத் திகழ்கிறார்கள். உலகம் உய்வதற்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை வழங்குகிறார்கள்.

நமது தனியார் பள்ளிக் கலாச்சாரம் பிள்ளைகளை வர்க்கரீதியாகப் பிரிக்கிறது. கற்றலின் எல்லையை மனனக் கல்விக்குள் சுருக்குகிறது. சிந்திக்கும் திறனை மட்டுப்படுத்துகிறது. கலாச்சாரப் பிணைப்பை, சமூக அக்கறையைக் குறைக்கிறது. இதற்கெல்லாம் மாற்றாக அரசுப் பள்ளிகள் இருக்க முடியும். இருந்தது. இப்போதைய அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். புதிய பள்ளிகளைத் திறக்க வேண்டும். பிள்ளைகளுக்கு நன்மையையும் தீமையையும் பகுத்துணரும் ஆற்றலையும் கல்வி வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளோடு முறுக்கிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினரை இங்கே மீண்டும் அழைத்துவர வேண்டும். அவர்கள்தான் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்துவார்கள்; அது பள்ளிகளின் தரத்தை உயர்த்தும். அப்போது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம். அதுவரை உள் ஒதுக்கீட்டுக்கான அவசியம் இருக்கும். அதுவே வறுமையின் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு வழங்கும் நீதியாக அமையும்.

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

நிரந்தர பணியிடம்: இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர்


அரசுஉதவி பெறும் கல்லூரிக்கு  தேவை:நிரந்தர பணியிடம்: இளநிலைஉதவியாளர்,  தட்டச்சர், ஆய்வகஉதவியாளர், பதிவறை எழுத்தர், நூலகஉதவியாளர் ....share to all

Breaking Now : தமிழகத்தில் இன்று ( நவம்பர் 28 ) மேலும் 1,430 பேருக்கு கொரோனா தொற்று



தமிழகத்தில் ( 28.11.2020 ) இன்று 1,430 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,66,677 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 393   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 142

செங்கல்பட்டு - 78

திருவள்ளூர் - 80


மாவட்ட வாரியான பாதிப்பு.( 28.11.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,453


இன்றைய உயிரிழப்பு : 13

உலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.


சர்வதேச அளவிலான, சிறந்த, 500 கல்வி நிறுவனங்களின் பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., இடம்பிடித்துள்ளது. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல, க்யூ.எஸ்., எனப்படும், குவாக்குவரேலி சிமண்ட்ஸ் என்ற சர்வதேச நிறுவனம், ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

உலகம் முழுதும், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், அதன் கல்வி தரம், மாணவர் -- ஆசிரியர் விகிதம், ஆசிரியர்கள் பெற்ற விருதுகள், சாதனைகள், மாணவர்கள் விகிதம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் தரம் பிரிக்கப்படுகிறது. இதன்படி, 2021ம் ஆண்டில், உலக அளவிலான சிறந்த கல்வி நிறுவன பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், உலக அளவில், சிறந்த கல்வி நிறுவனம் என்ற முதல் இடத்தை, அமெரிக்காவின், எம்.ஐ.டி., எனப்படும், மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பெற்றுள்ளது.அடுத்த இரண்டு இடங்களையும், அமெரிக்காவின் ஸ்டாண்போர்டு மற்றும் ஹாவர்டு பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன.உலக அளவில், சிறந்த, 500 கல்வி நிறுவனங்களில், இந்தியாவை சேர்ந்த எட்டு கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளன. மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கு, 172வது இடம் கிடைத்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி., 275வது இடத்தில் உள்ளது. இதை தவிர, ஐ.ஐ.டி., டில்லி, கரக்பூர், கான்பூர், ரூர்கி, கவுஹாத்தி மற்றும் கர்நாடகாவின் பெங்ளூருவில் உள்ள, ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவை இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடான, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், ஆசிய அளவில், சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வாகி உள்ளது.

டிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி




இறுதியாண்டு  மாணவர்களுக்கு வரும், 2ம் தேதி திட்டமிட்டபடி கல்லுாரிகள்திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலால்மூடப்பட்ட கல்லுாரிகள், அகில இந்திய 

தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும்பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டுமாணவர்களுக்கு மட்டும், டிசம்பர், 2ல்திறக்கப்படும் என, ஏற்கனவேஅறிவிக்கப்பட்டது.

இதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுஏற்பாடுகளை, உயர் கல்வித்துறைசெய்து வந்தது. அறிவியல் மற்றும்தொழில்நுட்ப கல்லுாரிகளில்இறுதியாண்டு படிக்கும்மாணவர்களுக்கு மட்டும், வரும், 2ம்தேதி கல்லுாரிகளை திறந்து, பாடங்களை நடத்தஅனுமதிக்கப்பட்டுள்ளது.


புயல் பாதிப்பு மற்றும் மழைகாரணமாக, வரும், 2ம் தேதிகல்லுாரிகள் திறக்கப்படுமா; தள்ளிவைக்கப்படுமா என, மாணவர்கள்சந்தேகம் எழுப்பினர்.

இந்நிலையில், திட்டமிட்டபடிஇறுதியாண்டு மாணவர்களுக்கு, கல்லுாரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள்நடத்தப்படும் என, உயர்கல்வி துறைஅமைச்சர் அன்பழகன்அறிவித்துள்ளார். புயல், கனமழைபோன்றவை வந்தால், கல்லுாரிகளைவேறு தேதியில் திறப்பது குறித்துஆலோசிக்கப்படும் என்றும்தெரிவித்துள்ளார்.



நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை- last date- 30.11.2020


சங்கர் மேல்நிலைப்பள்ளி சங்ககிரிமேற்கு - 637 303 கீழ்க்கண்ட நிரந்தரமுதுகலை பாட ஆசிரியர்கள்பணியிடத்திற்கு தகுதியானவர்கள்தேவை .

 

1.  M.Sc. Biology / Botany , B.Ed. , | SC.                   ( அருந்ததியர் )

2. ஆங்கிலம் எண்ணிக்கை -1 | M.A. ,    English . B.Ed. , பொதுப்பிரிவினர் 

30.11.2020 க்குள் கல்வி , அனுபவசான்றிதழ் நகல்கள் மற்றும்விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல்முகவரி அல்லது மின்னஞ்சலுக்குஅனுப்பவும் .


செயலர் சங்கர் மேல்நிலைப்பள்ளி , சங்ககிரி மேற்கு - 637 303 . email id : shsskd5@gmail.com கற்பித்தல்பணியில் முன் அனுபவம்விரும்பத்தக்கது.


தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு:



தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,272 அளவுக்கு விலை குறைந்துள்ளது. விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.கொரோனா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், தங்கம் விலை உச்சத்தை தொட்டது. சாதாரண மக்கள் நகை வாங்க முடியுமா என்ற அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இது நகை வாங்குவார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்படியே விலை உயர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒரு சவரன் ரூ.43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக காணப்பட்டது. நவம்பர்மாதத்தில் இதே நிலை தான் நீடித்தது.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒரு சவரன் 37,984, 24ம் தேதி 37,120, 25ம் தேதி 36,912க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 1 குறைந்து ஒரு கிராம் 4,613க்கும், சவரனுக்கு 8 குறைந்து ஒரு சவரன் 36,904க்கும் விற்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் நேற்று காலை 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. காலையில் கிராமுக்கு 37 குறைந்து ஒரு கிராம் 4,576க்கும், சவரனுக்கு 296 குறைந்து ஒரு சவரன் 36,608க்கும் விற்கப்பட்டது. மாலையில் விலை சற்று அதிகரித்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 24 குறைந்து ஒரு கிராம் 4,589க்கும், சவரனுக்கு 192 குறைந்து ஒரு சவரன் 36,712க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,272 குறைந்துள்ளது. அதே நேரத்தில் 4 மாதத்தில் மட்டும் சவரனுக்கு சுமார் 6,616 அளவுக்கு குறைந்துள்ளது. இது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை திங்கட்கிழமை அன்று முதல்வர் அவர்களிடம் வழங்கப்படும். - அமைச்சர் செங்கோட்டையன்




பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை நாளை மறுநாள் முதல்வர் பழினிசாமியிடம் வழங்கப்படும்,  அதனை தொடர்ந்து 5 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும். அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்பது தவறான தகவல் இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்கக் கோரி மனு.. இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரித்து பல மாணவர்கள் பயனடைவர் என கோரிக்கை


 


மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2020-21 க்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கலந்தாய்வில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரி மதுரையை சேர்ந்த வாசுதேவா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். 


நடப்பாண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு 


2020-21ம் கல்வியாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு கடந்த 18ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதனிடையே, நிவா் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மருத்துவ கலந்தாய்வு வருகிற 30ம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 10ஆம் தேதி வரை மருத்துவ கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 


11 மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் இல்லை 


இந்த நிலையில் 2020-21ம் கல்வியாண்டுக்கான மருத்துவ கலந்தாய்வில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய  நகரங்களில் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கலந்தாய்வு தொடங்கிய நிலையில், 11 கல்லூரிகளையும் பட்டியலில் தமிழக அரசு இதுவரை சேர்க்கவில்லை. ஆகவே நடப்பாண்டிற்கான மருத்துவ கலந்தாய்வில் விடுபட்ட 11 மருத்துவ கல்லூரிகளையும் சேர்க்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த வாசுதேவா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவ்வாறு 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் கலந்தாய்வு பட்டியலில் சேர்த்தால் இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரித்து பல மாணவர்கள் பயனடைவர் என்றும் தம் மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WANTED- ASST-PROFESSORS- IN ENGLISH, COMMERCE,MANAGEMENT,VISUAL COMMUNICATION :

WANTED- ASST-PROFESSORS- IN ENGLISH, COMMERCE,MANAGEMENT,VISUAL COMMUNICATION :

WANTED- ASST-PROFESSORS- IN ENGLISH, COMMERCE,MANAGEMENT,VISUAL COMMUNICATION


WANTED- ASST-PROFESSORS- IN ENGLISH, COMMERCE,MANAGEMENT,VISUAL COMMUNICATION- SHARE TO ALL

வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை பயிலும் நடைமுறை; மத்திய அரசு அறிவிப்பு.


வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வியை வழங்க ஐஐடி மற்றும் சில அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-22ஆம் கல்வியாண்டு முதல் ஐஐடி மற்றும் என்ஐடி நிறுவனங்களில் தாய்மொழியில் பொறியியல் கல்வி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியிலேயே கல்வி பெறுவதற்காக புதிய தேசிய கல்விக் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், ஐஐடி மற்றும் என்ஐடியில் தாய்மொழியில் பொறியியல் கல்வி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்நுட்ப கல்வியை, குறிப்பாக பொறியியல் படிப்புகளை தாய்மொழியில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அடுத்த கல்வியாண்டு முதல் தாய்மொழி வழி கல்வி தொடங்கும். இதற்காக ஆரம்பகட்டமாக சில ஐஐடி மற்றும் என்ஐடி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இந்தியில் பொறியியல் கல்வியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். இதன்பிறகு ஐஐடி மற்றும் என்ஐடிகளில் தாய்மொழி வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்!


 அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தியா டுடே பத்திரிகையின், இந்தியா டுடே ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ் இ-கான்க்ளேவ் & விருதுகள் 2020 நாளை நடைபெற இருந்த நிலையில் இயற்கை இடையூறுகள் காரணமாக இந்த நிகழ்ச்சியானது வரும் டிசம்பர் 5ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில், இந்தியாவில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் சிறந்த மாநிலமாக தேர்வு செய்து முதல்வர் பழனிசாமிக்கு டிசம்பர் 5ல் இந்தியா டுடே விருது வழங்குகிறது . இதில் இமாச்சலப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் மூன்றாவது இடத்தையும், கேரளா 4வது இடத்தையும், குஜராத் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேப்போல் 6 முதல் 10 வரையிலான இடங்களை, ஹரியானா ,ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா ,மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்து தக்க வைத்துள்ளன. 11 முதல் 20 வரையிலான இடங்களை கர்நாடகா, உத்தரகண்ட்,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர்,ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், அசாம், பீகார் ஆகிய மாநிலங்கள் வரிசையாக பிடித்துள்ளன. இந்திய டுடே வெளியிட்டு வரும் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் அகில இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து 3 -வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. அதே போன்று பீகார் மாநிலம் தொடர்ந்து 3வது முறையாக 20வது இடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது

Recent Posts

Total Pageviews

Blog Archive