வரும் 30-ஆம் தேதி முதல் மீண்டும் மருத்துவ கலந்தாய்வு:


 

சென்னை: நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த மருத்துவ கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 30-ம் தேதி தொடங்கும் மருத்துவ கலந்தாய்வு, டிசம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில், கடந்த வாரம் தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்டது. நவ.29 வரை 4 நாள்களுக்கு மருத்துவக் கலந்தாய்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த நாள்களில் ஏற்கெனவே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை முதல் (நவ.30) நடைபெறும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவா் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் மாநிலம் முழுவதும் அசாதாரண சூழல் உருவானது. இந்நிலையில், மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

செவ்வாய்க்கிழமை (நவ.24) நடைபெறவிருந்த கலந்தாய்வு அடுத்த வாரம் திங்கள்கிழமைக்கு (நவ.30) ஒத்திவைக்கப்பட்டது, அதன் தொடா்ச்சியாக நவ.24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கலந்தாய்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 10-ஆம் தேதி வரை மருத்துவ கலந்தாய்வு நடைபெற உள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive