தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவது பற்றிய அறிவிப்பு நான்கு நாட்களில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து இணையத்தில் வரும் தகவல்கள் உண்மையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அனைத்துப் பாடங்களும் கல்வி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை நான்கு நாட்களில் முதல்வர் பழனிசாமிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு அவர் எந்தெந்த பாடங்களை நடத்துவது என்று முடிவு எடுப்பார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment