நிவர் புயல் எதிரொலி பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு.


25.11.2020 நிவர் புயல் எதிரொலி பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளியின் சாவியை பள்ளி அருகில் இருக்கும் முக்கிய உள்ளூர் பிரமுகர்களிடம் ஒப்படைக்க உத்தரவு.



25.11.2020 அன்று அறிவித்துள்ள நிவர் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ( பேரிடர் காயங்களில் ) பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்துவதற்காக உள்ளூர் பிரமுகர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் , எஸ்.எம்.சி பொறுப்பாளர்கள் , மராட்சி மன்றத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கேட்கும் போது உடனடியாக வழங்குவதற்கு ஏதுவாக பள்ளியின் சாவியை உள்ளூர் பிரமுகர்கள் அல்லது உள்ளூர் ஆசிரியர்கள் எவரேனும் ஒருவரிடம் ஒப்படைத்து வைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் , பேரிடர் காலங்களில் மக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதியான குடிநீர் வாதி ( குடிநீர் தொட்டியினை நிரப்பிவைத்தல் ) , கழிவறைகள் ( சுத்தம் செய்தல் ) போன்றவற்றினை தயார் நிலையில் வைத்திடவும் , துப்புரவு பணியாளர்களைக்கொண்டு பள்ளியினை தூய்மைப்படுத்திடவும் தெரிவிக்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் தேவை ஏற்படின் NSS மாணவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது - CEO திருவண்ணாமலை மாவட்டம்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive