அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.


 அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.



 அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இன்ஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸ் என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட, தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளைக் கொண்ட குழு, ஏற்கனவே மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

அதைதொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ஏற்கப்போவதில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், துணைவேந்தர் சுரப்பா தெரிவித்தது போல் நிதியைத் திரட்ட முடியாது எனவும், கடந்த நிதியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் 350 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive