தமிழகத்தில், உடற்கல்வி ஆசிரியர்நியமனத்திற்கான எழுத்து தேர்வு கடந்த2017 ஆம் ஆண்டு நடந்தது. இந்ததேர்வுக்கு பிறகு, வெளியான தேர்வுமுடிவுகளில் தொடர்ந்து பல்வேறுகுழப்பம், குளறுபடி நீடித்தன. இதன்காரணமாக மூன்று ஆண்டுகளாகஇழுபறியில் இருந்த நிலையில், கடந்தமாதம் 28ம் தேதி இறுதி பட்டியல்வெளியிடப்பட்டது. தற்போது, இந்தஇறுதிப் பட்டியலில் முறைகேடு நடந்துஇருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
வேலைவாய்ப்பு முன்னுரிமைமதிப்பெண்கள் 1, 2 மற்றும் பூஜ்ஜியம்என்று பெற்றிருந்த நிலையில், 18 க்கும்மேற்பட்டோர் முழுமையான
மதிப்பெண்களை பெற்று, தேர்வுபட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதாவது ஐந்துக்கு ஐந்து எனமதிப்பெண் பெற்றுள்ளனர். இதன்காரணமாக இதில் பல முறைகேடுநடந்து இருக்கலாம் என்றும், அதிகாரிகள் துணையில்லாமல் இதுநடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தேர்வர்களும், பல்வேறு ஆசிரியர்சங்கங்களும் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, இதுகுறித்து ஆசிரியர் தேர்வுவாரியம் முழுமையாக விசாரணைநடத்த வேண்டும் என்றும், அதன் பிறகேபணி நியமன கலந்தாய்வை நடத்தவேண்டும் என்றும் வேண்டுகோள்விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும்பணி நியமன கலந்தாய்வு நடைபெறும்நிலையில், வெளியான இந்த தகவல்கடும் அதிர்வலையை ஏற்படுத்திஉள்ளது.
0 Comments:
Post a Comment