கரோனா தடுப்பூசி வரும்வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை: டெல்லி துணை முதல்வர்



 கரோனா தொற்றுக்கான தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை என்று டெல்லி துணை முதல்வரும் அம்மாநிலக் கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நமக்குத் தடுப்பூசி கிடைக்கும் வரை டெல்லி பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை. இதுகுறித்துப் பெற்றோர்களிடம் இருந்து தொடர்ந்து கருத்துகளைக் கேட்டு வருகிறோம். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டால் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இருக்குமா என்று அவர்கள் கவலையில் உள்ளனர்.


எங்கெல்லாம் பள்ளிகள் திறக்கப்பட்டதோ அங்கே குழந்தைகள் மத்தியில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளது. அதனால் தேசத்தின் தலைநகரத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். 


மீண்டும் புதிய உத்தரவுகள் வரும் வரை பள்ளிகள் அனைத்தும் தொடர்ந்து  மூடப்பட்டிருக்கும்'' என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தார்




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive