மகாராஷ்டிரம் மாநிலம் புணேயில் செயல்பட்டு வரும் தேசிய ரசாயன ஆய்வகத்தில் புதியதாக டெக்னீக்கல் அதிகாரி, டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 45
நிறுவனம்: தேசிய ரசாயன ஆய்வகம் (National Chemical Laboratory)
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Sr. Technical Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.1,00,136
பணி: Sr. Technical Officer (1)/Fire Safety Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.84,360
பணி: Technical Officer- 12
சம்பளம்: மாதம் ரூ.65,096
பணி: Technical Assistant - 10
சம்பளம்: மாதம் ரூ.52,176
பணி: Technician - 20
சம்பளம்: மாதம் ரூ.29,200
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல், கெமிக்கல், பையர் மற்றும் சேப்டி பிரிவில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ., எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 28 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ncl-india.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruit.ncl.res.in/Pdf/NCL_TECHNICAL_ADVT_01_2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2020
0 Comments:
Post a Comment