ஓய்வு பெறுவோருக்கு பணி நீடிப்பு :தற்காலிக பேராசிரியர்கள் கொதிப்பு:


கோவை:தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், அறுபது வயது கடந்து ஓய்வு பெற உள்ள பலரும், பணியை நீட்டிக்க முயற்சித்து வரும் தருவாயில், அங்கு பணிபுரியும் தற்காலிக பேராசிரியர்கள், கூடாதென அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழ்நாடு வேளாண்பல்கலையின் கீழ், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தற்காலிக பேராசிரியர்களும் மூன்று நிலைகளில் பணிபுரிகின்றனர். இவர்களில், 2014க்கு பின் ஒருவரும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.இச்சூழலில், அறுபது வயதை எட்டி ஓய்வு பெறும் தருவாயில் உள்ள, துறை பேராசிரியர்கள், டீன்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்று, தமிழக அரசிடம் பணி நீட்டிப்பு கோரி மனு கொடுத்துள்ளது.வேளாண் அமைச்சர் துரைகண்ணு, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமணையில் இருப்பதால், அம்மனு கிடப்பில் உள்ளது. இதை சாதகமாக்கிக்கொண்டு பல்கலையில் பணிபுரியும் தற்காலிக பேராசிரியர்கள் இணைந்து, பணிநீட்டிப்பு வழங்கி அரசு நிதியை இழக்க வேண்டாம். நீண்ட நாட்களாக தற்காலிகமாக பணிபுரிந்து வருபவர்களுக்கு, வாய்ப்பு வழங்குங்கள் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive