மாவட்ட மாணவ விடுதிகளில் சமையலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ விடுதிகளுக்கான சமையலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர் விடுதிகளில் 42 சமையலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது.

இதுகுறித்து , திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் 24 சமையலர் பணியிடங்களும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் 18 சமையலர் பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.

இந்த பணிக்கான ஊதியம் ₹15,000 ஆகும். எழுதப் படிக்கத் தெரிந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குள் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமையல் பணியில் அனுபவம்இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பெற்று, அடுத்த மாதம் 9-ஆம் தேதிக்குள் நேரில் அல்லது பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive