ஆன்லைனில் அறிவியல் திறனறித் தேர்வு


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி., மற்றும் விபா இணைந்து ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் திறனறித்தேர்வை நடத்துகின்றனர். 

இணைய வழியில் இத்தேர்வு, நடத்தப்படுகிறது.வழக்கமாக, மையத்தில் நடத்தப்படும் இத்தேர்வு, நடப்பாண்டில் கொரோனா பாதிப்பினால், மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் தேர்வில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றும், இன்றும், இத்தேர்வு தேசிய அளவில் நடக்கிறது.தேசிய அளவில் லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர். 

நேற்று காலை, 10:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, ஏதேனும் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் மாணவர்கள் இணையத்தில் தேர்வு எழுதினர்.உடுமலை, கல்வி மாவட்டத்தில், 20 மாணவர்கள் இத்தேர்வை தங்களின் வீடுகளிலிருந்து ஆன்லைனில் எழுதினர். மாணவர்கள், தேசிய அளவிலான ஒரு தேர்வை, வீட்டிலிருந்து எழுதுவது புதுமையானதாக இருப்பதாகவும் கருத்துகளை தெரிவித்தனர். 

விஞ்ஞான் பிரசார் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், மாநில செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியர் சரவணன் மற்றும் சதீஷ்குமார் தேர்வுகளை பார்வையிட்டனர்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive