NET தோ்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு.
இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
ஒத்திவைக்கப்பட்ட நெட் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு, சனிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு: நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மையங்களில், வியாழக்கிழமை (நவ.26) நடைபெற இருந்த வேதி அறிவியல் மற்றும் கணித அறிவியல் பாடங்களுக்கான நெட் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இத்தோ்வுகள், திங்கள்கிழமை (நவ.30) நடைபெறவுள்ளன. இதற்கான தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு, சனிக்கிழமை வெளியிடப்பட்டன. அவற்றை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, என்டிஏஇணையதளத்தை அணுகலாம்.
0 Comments:
Post a Comment