10,906 காவலர்களை தேர்வு செய்வதற்கான, எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.




 தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, 10 ஆயிரத்து, 906 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்வதற்கான, எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.


இரண்டாம் நிலை


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.அந்த வகையில், இந்த ஆண்டு காவல் துறையில், மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு, ஆண்கள், 685; பெண்கள் மற்றும் திருநங்கையர், 3,099 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


சிறப்பு காவல் படை பிரிவுக்கு, 6,545; சிறைத் துறைக்கு, ஏழு பெண்கள், 112 ஆண்கள் என, 119; தீயணைப்பு துறைக்கு, 458 ஆண்கள் என, 10 ஆயிரத்து, 906 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை, சீருடை பணியாளர் தேர்வு குழுமம், செப்., 17ல் வெளியிட்டது. இப்பணிகளுக்கு, www.tnusrbonline.org  என்ற, இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டது. 


ஆறு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அவர்களில், 5 லட்சத்து, 50 ஆயிரத்து, 314 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. இவர்களுக்கு, சென்னை உட்பட, 37 மாவட்டங்களில், 499 தேர்வு மையங்களில், நாளை எழுத்து தேர்வு நடக்கிறது.


கட்டாயம் முக கவசம்


எழுத்து தேர்வு சரியாக காலை, 11:00க்கு துவங்கி, மதியம், 12:20 மணிக்கு நிறைவு பெறும். சென்னையில் மட்டும், பச்சையப்பன் கல்லுாரி உட்பட, 35 மையங்களில், 29 ஆயிரத்து, 981 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். முக கவசம் இல்லாதவர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, தேர்வு குழுமம் அறிவித்து உள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive