ஜனவரி 1-ம் தேதி முதல் பாஸ்டேக்’ கட்டாயம் என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘பாஸ்டேக்’ மூலம் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது.
இதன் மூலம், சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதியில் இருந்து, அனைத்து தேசிய நெடுங்சாலைகளிலும் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்படுவதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், பல்வேறு இடங்களில் பாஸ்டேக் நடைமுறை மற்றும் ரொக்க பரிவர்த்தனை நடைமுறையும் அமலில் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இலவசமாக சுங்கச் சாவடிகளின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், 2021 ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ’பாஸ்டேக்’ (#Fastag)கட்டாயமாகப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment