டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடியும் ஊரடங்கு ! முதலமைச்சர் ஆலோசனை :


அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

முதலில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அந்த தாக்கம் குறைந்து வருகிறது.இதனைக்கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன.குறிப்பாக ஒவ்வொரு மாதமும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கில் என்ன தளர்வுகள் அளிப்பது என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். கடந்த சில நாட்களாக உருமாறி உள்ள புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் இந்த வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறதாக செய்திகள் வெளியாகி வருகிறது.இதனால் உலக நாடுகள் மீண்டும் பீதியடைந்துள்ளன. வைரஸ் பரவல் இருப்பதால் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றியும், தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு தளர்வு குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive