அடேயங்கப்பா..! 4ம் தேதி உஷார்! கதி கலங்கச் செய்யும் புரெவி புயல்!


ஒரு மணி நேரத்திற்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் நேற்று உருவான புரெவி புயல் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே வெள்ளிக்கிழமை கரையை கடக்க உள்ளது.

கடந்த 24-ம் தேதி வங்க கடலில் நிவர் புயல் உருவாகி, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால், வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மீண்டும் உருவாகியுள்ளது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெற்று உள்ளது. இந்த புயலுக்கு 'புரெவி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புரெவி புயல், பாம்பனுக்கும் குமரிக்கும் இடையே 700 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயல் நகர்ந்து வருவதாகவும், வரும் 4-ம் தேதி, அதாவது நாளை மறுதினம் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive