பேடிஎம் தற்போது வழங்கி வரும் கேஷ்பேக் ஆஃபர் மூலம பொதுமக்கள் சிலிண்டரை வெறும் 200 ரூபாய்க்கு பெற முடியும்.
தற்போது வீட்டுக்கான கேஸ் சிலிண்டர் 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம் விழாக்கால சலுகையாக பல்வேறு கேஷ் பேக் ஆஃபர்களை அறிவித்துள்ளது.
அந்த வகையில் பேடிஎம் மூலம் சிலிண்டர் புக் செய்தால் 500 ரூபாய் வரை கேஷ் பேக் கிடைக்கும். இந்த சலுகை முதல்முறை பேடிஎம்மில் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு பொருந்தும்.
முதல்முறை பேடிஎம் மூலம் சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் FIRSTLPG என்ற குறியீட்டை உள்ளிட வேண்டும். அப்படி செய்யும் போது 500 ரூபாய் கேஷ் பேக் பெற முடியும். இந்த சலுகை வரும் 31ஆம் தேதி வரை இருக்கிறது.
பேடிஎம் செயலியி5ல் ரீசார்ஜ் & பே பில்ஸ் என்ற பகுதிக்கு சென்று கேஸ் சிலிண்டர் புக் செய்து இந்த அரிய வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Source:newstm.in
0 Comments:
Post a Comment