பள்ளிகள் திறப்பில் மீண்டும் சிக்கல் :



தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதிய கல்வி ஆண்டு துவங்கியும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், சமீபகாலமாக கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சீராகி வந்ததால், ஜனவரியில் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.

ஆனால், பிரிட்டனில் இருந்து புதிய வகை கொரோனா வைரசால், மீண்டும் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்படலாம். இந்த சூழலில் பள்ளிகளை திறப்பது சரியாக இருக்குமா? சுகாதாரத்துறை அனுமதி அளிக்குமா என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மீண்டும் ஊரடங்கு கடுமையானால், பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகலாம்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive