வருகின்ற ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஜனவரி மாத இறுதிக்குள் தேர்வர்கள் தங்களுடைய நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற முறைகேட்டை தொடர்ந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய தேர்வர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவித்திருந்தது. ஆனால் பல்வேறு தேர்வர்கள் ஆதார் எண்ணை இணைப்பது சிக்கல்கள் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு வருகின்ற ஜனவரி 3ம் தேதி நடக்கவிருக்கும் குரூப்-1 தேர்வு மற்றும் ஜனவரி 9 மற்றும் 10ம் தேதி நடக்கவிருக்கும் தொழில் மற்றும் வணிகத்துறை உதவி இயக்குநர் பணியிடத்தேர்வுக்கு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதில்லை என தற்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இருப்பினும் நிரந்தரப் பதிவை வைத்திருக்கும் தேர்வர்கள் அந்த கணக்குடன் தங்களுடைய ஆதார் எண்ணை வருகின்ற ஜனவரி மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் இனி வரக்கூடிய தேர்வுகளுக்கு ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கடந்த 23ம் தேதி முதல் இன்று வரை ஒன்றரை லட்சம் பேர் தேர்வர்களில் 70,000 பேர் தங்களுடைய ஆதார் கணக்கை இணைத்துள்ளதாகவும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
0 Comments:
Post a Comment