மதுரையில் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி மைய பொறுப்பாளர்களுடன் சி.இ.ஓ., சுவாமிநாதன் இணையவழியில் ஆலோசித்தார்.
முன்மாதிரியாக ஆன்லைன் வழி மாதிரி நீட் தேர்வு நடத்திய பொறுப்பாளர்களை சி.இ.ஓ., பாராட்டினார்.
அவர் பேசியதாவது:
வரும் தேர்வில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்து ஒவ்வொரு அரசு பள்ளியிலும் குறைந்தபட்சம் தலா ஒரு மாணவர் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
தற்போதைய தேர்வு முறையில் உள்ள சிக்கலை அறிந்து அடுத்து வரும் தேர்வுகளை எளிதாக்க வேண்டும், என்றார்.நீட் தேர்வு பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் வெண்ணிலா தேவி, மோசஸ் பாக்கியராஜ், செல்வன் அற்புதராஜ், ராஜசேகர், ஜாக்குலின், சங்கரி சுபாஷினி பங்கேற்றனர். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் சின்னதுரை ஏற்பாடுகளை செய்தார்.