TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி ஆணை வழங்க கோரி மனு :


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி ஆணை வழங்க கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கொடுத்துள்ள மனுவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் அரசு பள்ளிகளில் ஆசிரியராக சேர அதிகபட்ச வயது 40 என்பதனை அரசு நீக்க வேண்டும் எனவும் என்சிடிஇ அறிவிப்பின்படி ஆணை வழங்க வேண்டும் எனவும் அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசு பள்ளிகளில் புதிய வேலை வாய்ப்பு உருவாகி பணி நியமனம் வழங்க வேண்டுமெனவும் 2013ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனவும் அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive