தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு NEET (UG) 2021- முக்கிய அறிவுரைகள்


 

தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு NEET (UG) 2021- முக்கிய அறிவுரைகள் 

தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை – முதல்வர் துவக்கி வைப்பு!


தமிழகத்தில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

அரசு ஊக்கத்தொகை:

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது திமுக அணி. அதனை தொடர்ந்து தற்போது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின், வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விளக்கமளித்துள்ளார். தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் உதவித்தொகை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் எனவும், அமைச்சர் சேகர்பாபு செயல் பாபுவாக பணியாற்றுகிறார் என புகழ்ந்து பேசியுள்ளார்.

நீட் தேர்வில் வெற்றி பெற வழி கூறும் கல்வியாளர்!


இந்தியா முழுதும் 16 லட்சம் பேர், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அதில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவக் கல்லுாரிகளில் சேர முடியும் என்ற நிலையில், போட்டி பயங்கர மாக இருக்கிறது. முதல்முறை தேர்வு எழுதும் மாணவர்கள், ஒருவித பதற்றத்திலேயே இருப்பர். அவர்களுக்கு தொடர் தேர்வுகள் நடத்தி, சரியான விடைகளையும் அளிப்பதால், தேர்வு பயம் முற்றிலும் குறையும். இதற்காக இலவச தேர்வு பயிற்சி அளிக்கும் வகையில், கொஸ்டின் கிளவ்ட் இன் இணையதளத்தை உருவாக்கி உள்ளேன். அதிக பயிற்சி, அதீத வெற்றி. எனவே, படிப்புக்கான நேரத்தை அதிகப்படுத்துங்கள். தேவையற்ற கவனச் சிதறலை கைவிடுங்கள். எதைப் படித்தாலும் கவனமாக படித்தல், ஆழமாக புரிந்து படித்தல், தினமும் பயிற்சி எடுத்தல் ஆகிய மூன்றும் தான், வெற்றிக் கோப்பையை பெற்று தரும். நீட் தேர்வில் மொத்தமுள்ள 180 கேள்விகளில், 50 சதவீதம் அதாவது 90 கேள்விகள் உயிரியலில் இருந்தும், இயற்பியல் மற்றும் வேதியியலில் இருந்து தலா 45 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. தற்போது, ஒவ்வொரு பாடத்துக்கும் ஐந்து கேள்விகள் அதிகப்படுத்தப்பட்டு, அவை சாய்ஸ் ஆக வழங்கப்பட்டுள்ளன. இதனால், நன்கு தெரிந்த வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்கும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது. கொஸ்டின் கிளவ்ட் இன் இணைய தளத்தில், பாடத்திட்டம் வாரியாக 7,500 கேள்வித் தாள்கள் என, மூன்று லட்சத்துக்கும் அதிகமான கேள்விகளுடன் பதில்களும் உள்ளன. இத்தளத்தில் பயிற்சி எடுக்கும் மாணவர், மூன்று மணி நேரத் தேர்வை எழுதி முடித்த அடுத்த நிமிடமே அவருக்கு மதிப்பெண்ணும் கிடைத்துவிடும். இப்படியான மாதிரி தேர்வுகளை பழகுவது வெற்றிக்கு எளிதாக இருக்கும். முன்கூட்டியே மையங்களை அடைந்து விடுங்கள். நன்கு மூச்சுப் பயிற்சி எடுத்துக் கொள்பவர்களுக்கு மூளை திறம்பட வேலை செய்யும். நன்கு தெரிந்த கேள்விகளை முதல், ரவுண்டில் வேகமாக முடித்து விட வேண்டும். ஒருமுறை, ஒரு விடையை குறியீடு செய்து விட்டால் மாற்ற முடியாது என்பதால், ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து குறியிடுவது அவசியம். மொத்தம் 180 கேள்விகளில், 150க்கு சரியான விடை எழுதினாலே 600 மதிப்பெண் பெறலாம். 500க்கும் அதிகமாக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே டாக்டர் கனவை தக்கவைத்துக் கொள்ள முடியும். நீங்கள் ஒருமுறை கஷ்டப்பட்டு படித்து, சீட்டை பெற்று விட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்கு நீங்கள் ராஜா தான்!

பள்ளிக்குள் நுழைய வெளிநபர்களுக்கு தடை


பள்ளிக்கு தொடர்பில்லாத நபர்கள், எந்த வகையிலும் நுழைய அனுமதிக்கக் கூடாது என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி கமிஷனர் அனுப்பிய சுற்றறிக்கை:

மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், பள்ளிகளுக்குள் நுழையும் போது, உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். உடல் வெப்ப நிலை அதிகமாக இருப்பவர்களை, பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது. சுகாதார துறை அலுவலர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிக்குள் நுழையும் போது, கிருமி நாசினி மற்றும் சோப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வது கட்டாயம். அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து, மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.

பள்ளி வளாகத்தில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக்கு தொடர்பில்லாத நபர்கள், பள்ளிக்குள் நுழைவதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு தவிர்ப்பாணை மட்டும் தந்தால் 9 ஆண்டுகால TET வழக்குகள் (சுமார் 400+) வாபஸ் ஆகும்"

"

 

ஒரு தவிர்ப்பாணை மட்டும் தந்தால் 9 ஆண்டுகால TET வழக்குகள் (சுமார் 400+) வாபஸ் ஆகும்"- கல்வித்துறை ஆணையர் & தமிழக முதலமைச்சரின் கருணைப் பார்வைக்கு காத்திருக்கும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் குடும்பங்கள்.
அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 23/08/2010 க்குப் பிறகு பணி நியமனம் பெற்று பணியாற்றி வரும் சுமார் 1000 ஆசிரியர்கள் சார்பில்...










பாரதியார் பல்கலை அரியர் மாணவர்களுக்கு நேரடி தேர்வு – அறிவிப்பு வெளியீடு


கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்ற மாணவர்களுக்கு நேரடி தேர்வு எழுத பாரதியார் பல்கலைக்கழகம் வாய்ப்பு அளித்துள்ளது.

அரியர் தேர்வுகள்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்கள், தேர்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சில மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் தோல்வியுற்றனர். 2021ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தியது. இதில் ஒரு பாடத்தில் மற்றும் தோல்வியடைந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை ஆன்லைன் தேர்வு நடத்தப்படாது எனவும், நேரில் வந்து தேர்வு எழுத வேண்டும் என பல்கலை நிர்வாகம் கூறியுள்ளது. நேரில் நடத்தப்படும் தேர்வானது செப்., 26ம் தேதி காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை நடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 2018-19ம் ஆண்டை சேர்ந்த, இளங்கலை மற்றும் எம்.சி.ஏ., மாணவர்களுக்கும், 2019-20ம் ஆண்டு சேர்ந்த, முதுகலை முது அறிவியல், முது வணிகவியல் மாணவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் செப்.9ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இளங்கலை கலை, வணிகவியல் தேர்வுகள் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், இளம் அறிவியல், முதுகலை, முது அறிவியல் மற்றும் (எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உட்பட) தேர்வுகள் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திலும் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கான நுழைவுச்சீட்டை தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.b-u.ac.in என்ற இணையத்தை அணுகுமாறு நிர்வாகம் கூறியுள்ளது

வழக்கு தொடர்ந்ததால் பழிவாங்கும் வகையில் கலந்தாய்வு நெறிமுறைகள் - ஆசிரியர் பயிற்றுனர்கள் கொந்தளிப்பு.

வழக்கு தொடர்ந்ததால் பழி வாங்கும் நோக்கில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நெறிமுறைகள் இடம் பெற்றுள்ளன' என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் நடத்தப்படும் பொது மாறுதல் கலந்தாய்வு போல் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு 2014 முதல் நடத்தவில்லை. பாதிக்கப்பட்டோர் வழக்குகள் தொடர்ந்ததால் கலந்தாய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிடப் பட்டது. அதிகாரிகள் நடவடிக்கை இல்லாத தால் அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டு விசாரணைக்கு வந்த நிலையில், பணிமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வளமையஆசிரியர் முன்னேற்றசங்க மாநில தலைவர்சம்பத், துணை தலைவர் முத்துக்குமரன் கூறியதாவது:பள்ளிக்கு மாறிச் செல்ல தயாராக உள்ளோம். வெளிப்படை யான கலந்தாய்வு நடத்த வேண்டும்.

எம்.ஹெச்.ஆர்.டி.,யில் தமிழகத்தில் 5984 ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்கள் காண்பிக்கப்பட்டு நிதி பெறப்படுகிறது. ஆனால் தற்போது 3700 இடங்கள் மட்டுமே காண்பிக்கப் பட்டுள்ளன. ஆசிரியர் பொது மாறுதலில் முதலில் மாவட்டத்திற்குள் பின் மாவட்டம் விட்டு மாவட்டம் சீனியாரிட்டி பின்பற்றப்படும். விரும்பிய இடம் கிடைக்காவிட்டால் மறுக்கும் (விருப்பம் இல்லை என தெரிவிப்பது) வாய்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.ஆனால் அதுபோன்ற நடைமுறை இந்த கலந்தாய்வில் இல்லை. மாநில சீனியாரிட்டி பின்பற்றப்படுகிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற நிலையில், வழக்கு தொடர்ந்ததால் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு உள்ளது. மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம் என்றனர்.

பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர் நியமனம்!



சிவகங் கையில் தமிழ்நாடு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட் டம் நடந்தது. மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித் தார். மாநிலச் செயலாளர் நாகலிங்கம் முன்னிலை வகித்தார். மண்டல நிர் வாகி மகேந்திரன்,மாவட் டத்தலைவர், சேவியர்ஆ ரோக்கியதாஸ், மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜா, மாவட்ட பொரு ளாளர் பிரிட்டோ மற்றும் மாநில, மாவட்ட நிர்வா கிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.

கூட்டத்தில் புதிய நிர் வாகிகள் பதவி ஏற்றனர். ஓய்வுபெற்ற தலைமை ஆசி ரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமி ழகத்தில் கொரோனா நோய் தொற்றினை படிப்படியாக குறைத்து பள்ளிகளை திறக்க முன்வந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட் டது. புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். மேல்நிலைப் பதவி உயர்விற்கு தனியா கத்தயாரிக்கப்படும் உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமை பட்டியலில் இருந்து ஒரு வர் பதவி உயர்வு பெற விரும்பவில்லை எனில், அடுத்த நபருக்கு பதவி உயர்வு வழங்கிய பின்னரே முதுநிலை ஆசிரியர் பணி யில் இருப்போருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து உயர்நிலை பள் ளிகளிலும் கணினி பட்ட தாரி ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும்.

அனைத்து பள்ளிக பள்ளி தலைமையளிலும் கழிவறை சுத்தம் செய்ய துப்புரவு பணியா ளர்கள் நியமனம் செய்து அவர்களுக்கு நூறு நாள் வேலை திட்ட பணியா ளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு நீக்கப்படுமா?



ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு கட்டுப்பாடு நீக்கப்படுமா என்று 45 வயது கடந்த பட்டதாரிகள் எதிர்பார்த்து காத்தி ருக்கின்றனர்.

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு எழுதுவதற்கு, ஏற்கெனவே வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் கிடையாது. உரிய கல்வித் தகுதி இருந்தால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வை 57 வயதில்கூட எழுதலாம். இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, முதன்முதலாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதன்படி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. எஸ்சி, எஸ்டி, பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி வகுப்பினருக்கும், பொதுப்பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டது.

ஆசிரியர் பணிக்கு வயது வரம்புகொண்டுவந்ததற்கு, பிஎட் முடித்தமுதுநிலை பட்டதாரிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியர்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.ஆனாலும், வயது வரம்பு கட்டுப்பாட்டில் மாற்றம் செய்யப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 40 ஆகவும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு 45 ஆகவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கெனவே, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பொதுப் பிரிவினர் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் எந்த விதமான வயது வரம்பும் கிடையாது. மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதக்கூட வயது வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், அதிமுக ஆட்சியில் ஆசிரியர் பணிக்கு கொண்டுவரப்பட்ட வயது வரம்பு நீக்கப்படும்என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக பொறுப்புக்கு வந்துள்ளதால், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு நீக்கப்படும் என்று, 45 வயது கடந்தபிஎட் பட்டதாரிகளும், இடைநிலைஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இதுபற்றிய அறிவிப்புநடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் வெளியாகும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால், அதில் எந்தஅறிவிப்பும் வெளியிடப்படாததால், ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, வயது வரம்பு கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் கூறியதாவது:

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சிவாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்று கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்டது. ஏற்கெனவே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் கணிசமானோர் 40 வயதை தாண்டியவர்கள். தற்போது வயது வரம்பு கட்டுப்பாடு இருப்பதால் டெட் தேர்ச்சி பெற்றும்,40, 45 வயது தாண்டியவர்களால் அரசு பள்ளிகளில் வேலைக்கு செல்ல முடியாது. தகுதி தேர்வுக்கும் அவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

விரைவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதிதேர்வை நடத்த தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே, ஆசிரியர் பணியில் சேரவும், டெட் தேர்வு எழுதவும் விதிக்கப்பட்டுள்ள வயது வரம்பு கட்டுப்பாட்டை தமிழக அரசு நீக்க வேண்டும். இப்படி அறிவிப்பதால், அரசுக்கு எந்த நிதி இழப்பும் கிடையாது. 45 வயது கடந்தவர்களும் ஆசிரியர் பணியில் சேர முடியும். எனவே, திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்குவது குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!


 வருமான வரி செலுத்தும் இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறுகள் நிமித்தமாக வரிக்கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் செப்டம்பா் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.


வருமான வரி



இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் முதல் வருமான வரி செலுத்துவதற்கான புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இணையதளத்தில் ஆரம்பம் முதலே பல்வேறு விதமான கோளாறுகள் ஏற்பட்டு வந்தது. இவற்றை சரி செய்யும் முயற்சியில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் மேற்கொண்ட சிரமங்களை தவிர்க்கும் வகையில் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.



அந்த வகையில் ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் வரிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில், வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி செப்டம்பா் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வட்டித் தொகையுடன் சேர்த்து வருமான வரியை அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்வதற்கான கால நீட்டிப்பு ஜூலை 31 லிருந்து நவம்பா் 30 ஆம் தேதி வரையும், தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்திற்கான கால நீட்டிப்பு அக்டோபா் 31 லிருந்து டிசம்பா் 31 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, GST வரிக் கணக்குகளை தாக்கல் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்க GST கவுன்சில் முடிவு செய்தது. அந்த வகையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று மத்திய நிதியமைச்சகம் குறைக்கப்பட்ட வரி கட்டணத்தை அறிவித்தது. இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசமும் ஆகஸ்ட் 31 லிருந்து நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்ஜி., தரவரிசை பட்டியல் செப்., 4ல் வெளியீடு


 இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 4ம் தேதி, தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளது. 


தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்பட உள்ளது.



இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூலை 26ல் துவங்கி இம்மாதம் 24ல் முடிந்தது. கடந்த 27ம் தேதியுடன் விண்ணப்ப கட்டணம் செலுத்தும் அவகாசம் முடிந்தது. அதேநேரம், ஆன்லைனில் கட்டணம் செலுத்தியவர்கள், அசல் சான்றிதழ்களை 'ஸ்கேன்' செய்து, இணையதளத்தில் பதிவேற்றி வருகின்றனர்.இந்த சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து, அரசு தேர்வு துறை வழியாக, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 



விளையாட்டுப் பிரிவில் ஒதுக்கீடு கேட்டவர்களுக்கு மட்டும், சென்னையில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லுாரியில் நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.'இதில் மாணவர்கள் யாராவது பங்கேற்காமல் இருந்தால், நாளையும், நாளை மறுநாளும் நேரடியாக, தரமணி மத்திய பாலிடெக்னிக் கவுன்சிலிங் உதவி மையத்துக்கு சென்றால், அங்கு சான்றிதழ்களை ஆய்வு செய்து கொள்ளலாம்.'கூடுதல் விபரங்களை, https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், வரும் 4ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்' என, உயர் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செப்.15 வரை நேரடி மாணவா் சோ்க்கை



 சென்னையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், செப்.15-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா். 


இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: தமிழக அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னை மாவட்டத்தின் கிண்டி தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி மகளிா், திருவான்மியூா், வடசென்னை, ஆா்.கே.நகா் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயல்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 



இங்கு பயில 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி பெற்று சேரும் மாணவா்களுக்கு கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயணச் சலுகை அட்டை, பாடப்புத்தகம், சீருடை, வரைபடக் கருவிகள், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 என பல சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.



பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ், முன்னோடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.


TNPSC அறிவிப்பு: உதவி புவியியலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2021 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் காலியாக உள்ள 26 உதவி புவியியலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 592 அறிவிப்பு எண்.12/2021

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)

பணி: Assistant Geologist

காலியிடங்கள்: 26

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: புவியியல் பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் குறைந்தபட்சம் ரூ.37,700 முதல் அதிகபட்சம் ரூ.1,19,500 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வானது தாள் I, தாள் II என்ற முறையில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி: 20.11.2021 - 21.11.2021

தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. தேர்வுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விரிவான விவரங்கள் அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2021


மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/12_2021_COMBINED%20GEOLOGY_ENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை

இன்ஸ்பையர் அவார்டு குறித்து ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற (Webex Meet) நிகழ்நிலை கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்.




இன்ஸ்பையர் அவார்டு குறித்து ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்ற (Webex Meet) நிகழ்நிலை கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்.

 பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு வருடமும் இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை 2008 முதல் இன்ஸ்பையர் விருது வழங்கி வருகிறது.

 2016 முதல் இந்த விருது புத்தாக்க அறிவியல் ஆய்வு (மானக்) என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடமும் இன்ஸ்பயர் மானக் விருதுக்கு பதிவுகள் துவங்கிவிட்டது. கடைசி தேதி செப்டம்பர் 30 ஆக கூறப்பட்டுள்ளது

  இந்தமுறை 5 மாணவ / மாணவிகளின் பெயரை பதிவு செய்யலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள எந்த வகுப்பில் இருந்து வேண்டுமானாலும் இந்த ஐந்து மாணவர்களின் தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட வகுப்பில் இத்தனை மாணவர்கள்தான் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒவ்வொரு மாணவனின் படைப்பும் தனித்தனியாக இருத்தல் அவசியம்

    2 (அ) 3 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு படைப்பை தர அனுமதி இல்லை. குழு செயல்பாடு இல்லை. அவ்வாறு ஒரே கருத்தை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொடுத்து பதிவு செய்தால் உங்கள் பதிவு நிராகரிக்கப்படும்

      இந்த முறையும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு தலா பத்தாயிரம் (10000/_) ரூபாய் வழங்கப்படும்.கடந்த காலங்களில் விண்ணப்பிக்கும் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு அனைவருக்கும் தொகை கொடுக்கப்பட்டது. ஆனால் , இந்த முறை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே தொகை வழங்கப்படும்.

அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அடுத்த கட்டமாக மாநில அளவிலும், தேசிய அளவிலும், கண்காட்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் படைப்புகள் தொழில் முனைவோரின் முயற்சியால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் இது தொடர்பாக மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு சென்று தன் படைப்புகளை காட்சிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் ஜப்பான் நாட்டிற்கு நமது மாணவர்கள் சென்று வந்துள்ளனர்.

இன்ஸ்பயர் அவார்டு க்கு படைப்புகளைத் தேர்வு செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

Novelty - புதுமையான படைப்புகள்

👉 Social applicability - சமுதாயத்திற்கு பயன்படும் விதமாக, பொருந்தும் விதமாக இருத்தல்

👉 Competitive advantages over existing technologies - தற்சமயம் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்

👉 Cost effectiveness - குறைந்த செலவில் தயாரான படைப்புகள்

👉 User friendliness - கையாள்வதற்கு எளிமையாக இருத்தல்

👉 Any other speciality வேறு ஏதும் சிறப்பு அம்சங்கள் உடைய படைப்புகள் தவிர்க்கவேண்டிய படைப்புகள்

👉 மழைநீர் சேகரிப்பு

👉 சூரிய மண்டலம், கோள்கள், பூமியின் இயக்கம்

👉 எரிமலை, மண்சரிவு, நிலநடுக்கம்

👉 மின்சாரம் தயாரித்தல். (காற்றாலை மூலமாக சூரிய சக்தி மூலமாக)

👉 பல்வேறு வகை அலாரங்கள்

👉 மண்புழு உரம் தயாரித்தல்

👉 Vaccum cleaner

👉Hydraulic lift

👉 Sensor தொடர்பான படைப்புகள்

👉 உணவு மாசுபாடு

ஒளிச்சேர்க்கை, மிருகக்காட்சிசாலை மாதிரிகள், மூலிகைத்தோட்டம், உணவு சங்கிலி, கார்பன், நீர் சுழற்சி

👉 கட்டுரைகள்

👉 தானியங்கி தெருவிளக்குகள்

👉 மனித உறுப்பு மாதிரிகள்

👉 நீர் சுத்திகரிப்பு, தானியங்கி நீர் ஏற்றுதல்

மேற்கூறிய தலைப்புகளில் உள்ள படைப்புகள் இருப்பதை தவிர்க்கலாம். இருந்தால் நிராகரிக்க படுவீர்கள்.

🌷 முக்கிய குறிப்புகள் 🌷

பதிவு செய்யும்போது U Dise code பயன்படுத்தவும்

5 படைப்புகள்/ 5 மாணவர்கள்

ஒரு மாணவனின் படைப்பு மற்ற மாணவனுக்கு பயன்படுத்தவோ, பதிவு செய்யவும் கூடாது

சென்ற வருடம் பயன்படுத்திய படைப்புகளை பயன்படுத்தக்கூடாது

பதிவு செய்யும்போது audio / video வாக பதிவு செய்யலாம்

பதிவு செய்யும் மொழியை தேர்வு செய்து கொள்ளவும்

மாணவனின் வங்கிக்கணக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருத்தல் அவசியம். மேலும் வங்கிக் கணக்கு எண்ணை சரிபார்த்து பதிவு செய்யவும், மாணவனின் பெயர் வங்கி கணக்கு (passbook) புத்தகத்தில் உள்ளது போல் பதிவு செய்தல் மிகவும் அவசியமானதும் முக்கியம் வாய்ந்ததாகும்

கடந்த வருடம் போலவே இந்த வருடமும் தங்களின் username,password ஐ பயன்படுத்தி பதிவு செய்யவும்.

பள்ளிகள் திறந்த பிறகு இன்ஸ்பையர் அவார்டு மாணவர்களை தேர்வு செய்யக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

யோசனை போட்டி நடத்துதல்

குழுக்களாக மாணவர்களை பிரித்து எதைப்பற்றி படைப்புகள் செய்யலாம் என்ற யோசனை கேட்கவும்

அப்படிப் பெறப்பட்ட யோசனைகளில் புதுமையான ஒரு கருவி , ஏற்கனவே உள்ள கருவியில் ஒரு மேம்பாடு செய்தல், நிகழ்காலத்தில் உள்ள ஒரு பிரச்சனைக்கு தீர்வாக அமையும் யோசனைகளை தேர்வு செய்யவும்

அனைத்து யோசனைகளையும் சேகரித்த பின்பு தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் கலந்து ஆலோசித்து சிறந்த ஒன்றை தேர்வு செய்யலாம்

கருத்துப்பெட்டி என்ற ஒரு பெட்டியை பள்ளியில் வைத்து மாணவனின் படைப்பு சார்ந்த யோசனையை அதில் எழுதி போட சொல்லவும்

அன்றாடம் சுற்றுப் புறத்தில் நிகழும் நிகழ்வுகளை உற்றுப் பார்த்து கவனித்து பிரச்சனைகளை கண்டுபிடிக்க கூறவும்

பிறகு அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்க சொல்லவும் இதனால் அருமையான படைப்புகள் உருவாகும்


அண்ணா பல்கலைக்கழக 2020 நவம்பர், டிசம்பர் 2021 ஏப்ரல், மே மாத செமஸ்டர் இளநிலை, முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு..!


 

அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2020 நவம்பர், டிசம்பர் 2021 ஏப்ரல், மே மாத செமஸ்டர் இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. எனவே முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான், அண்ணா பல்கைலக்கழக இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து, 2020ம் ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டுக்கான ஏப்ரல், மே மாதங்ளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

மேலும், தேர்வு முடிவுகளை, https://auexams2.annauniv.edu/result/index.php மற்றும் https://auexams3.annauniv.edu/result/index.php ஆகிய வெப்சைட்களில் பார்க்கலாம். பல மாணவர்களும் ஒரே நேரத்தில், ரிசல்ட் பார்க்க முற்பட்டதால், இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. எனவே சிறிது நேரம் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவருமே தேர்ச்சி பெற்றிருப்பதால் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்று தேர்வுகள் கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.


80% ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்



80% ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். மாணவர்கள் பாதுகாப்பிற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!


தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் செப். 1 வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியான மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மாணவர் சேர்க்கை:

தற்போது மாணவர்களிடம் கல்வி கற்பது குறித்த ஆர்வம் அதிகரித்து வருகின்றது. 12ம் வகுப்பு முடித்து இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் பல்வேறு படிப்புகளை தேர்வு செய்து படித்து வருகின்றனர். கல்லூரிகளிலும் மாலை நேர வகுப்புகள், சான்றிதழ் வகுப்புகள் என நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தொழிலாளர் மேலாண்மையில் பட்ட மேற்படிப்பு மற்றும் பகுதி நேர பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழிலாளர் கல்வி நிலையத்தில் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டப்படிப்பு (பி.ஜி.டி.எல்.ஏ.), தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும் (டி.எல்.எல்.) ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படிப்புகளுக்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் tilschennai@tn.gov.in என்னும் மின்னஞ்சல் மூலம் பெயர், தொலைபேசி எண், முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்பி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 044 – 29567885 / 29567886 என்ற தொலைபேசி எண் மூலம் தெரிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – RBI வெளியீடு!


செப்டம்பர் மாதம் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அம்மாதத்தில் சுமார் 12 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விடுமுறை பட்டியலையும் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.


விடுமுறை நாட்கள்

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் வங்கிகளின் செயல்பாடுகளை பெற்றுக்கொள்வதில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது வங்கிகள் வழக்கம் போல இயங்கி கொண்டிருக்கும் சூழலில் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆகஸ்ட் மாதத்திலும் கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இன்னும் 5 நாட்களில் துவங்கவுள்ள செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள வங்கி விடுமுறை பட்டியலில், ஏழு நாட்கள் மாநிலங்களுக்கான விடுமுறைகளும், மற்ற நாட்கள் வார இறுதி நாட்கள், மத நிகழ்வுகள், பண்டிகை விடுமுறைகளும் அடங்கும்.

எனவே செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கான வங்கி விடுமுறைகளை பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவின் படி செப்டம்பர் 2021 மாதத்திற்கான முழு விடுமுறை நாட்களின் பட்டியல் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்,

செப்டம்பர் 5 ஆம் தேதி – ஞாயிறு விடுமுறை.

செப்டம்பர் 8 ஆம் தேதி – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது.

செப்டம்பர் 9 ஆம் தேதி – தீஜ் தினத்தை முன்னிட்டு ஹரித்தாலிகா மற்றும் கேங்டாக் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை. செப்டம்பர் 10 ஆம் தேதி – விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தொடர்ந்து அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி உள்ளிட்ட நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 11 ஆம் தேதி – இரண்டாவது சனிக்கிழமை மற்றும் விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு வங்கிகள் செயல்படாது. செப்டம்பர் 12 ஆம் தேதி – ஞாயிறு பொது விடுமுறை.

செப்டம்பர் 17 ஆம் தேதி – கர்ம பூஜையை முன்னிட்டு ராஞ்சியில் வங்கிகள் இயங்காது.
செப்டம்பர் 19 ஆம் தேதி – ஞாயிறு பொது விடுமுறை.

செப்டம்பர் 20 – இந்திரஜத்ரா பண்டிகை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.

செப்டம்பர் 21 ஆம் தேதி – ஸ்ரீ நாராயண குரு சமாதி நாளை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

செப்டம்பர் 25 ஆம் தேதி – நான்காவது சனிக்கிழமை, விடுமுறை நாள்.

செப்டம்பர் 26 ஆம் தேதி – ஞாயிறு பொது விடுமுறை நாள்.

Kalvi TV - Today ( 27.08.2021 ) Programme Schedule

Kalvi TV - Today ( 27.08.2021 ) Programme Schedule


 

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று ( ஆகஸ்ட் 27 ) கல்வி டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் - வகுப்பு வாரி பாட விவரங்கள் :


Kalvi TV - 1 to 10th Std - August Month Full Schedule - Download here


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு.




செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:



’’நடைபெறவுள்ள செப்டம்பர் 2021 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாம் ஆண்டு தேர்வுகள் 03.09.2021 முதல் 22.09.2021 வரையிலும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் 02.09.2021 முதல் 21.09.2021 வரையிலும் நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) அனைவரும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து 25.08.2021 பிற்பகல் 2.00 மணி முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

பதிவிறக்கம் செய்யும் முறை

http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தோன்றும் DEE EXAM SEPTEMBER 2021 – PRIVATE CANDIDATE – hall ticket DOWNLOAD என்பதை க்ளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்’’.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: அரசு அறிவிப்பு.



தமிழகம் முழுவதும் 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும்‌ அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.26) உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் உயர் கல்வித்துறை சார்பில் வெளியான அறிவிப்பு:

''தமிழகத்தின்‌ அனைத்துப்‌ பகுதிகளுக்கும்‌ சீரான உயர் கல்வி வழங்குவதற்கும்‌, மாணவர்‌ சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும்‌, 10 புதிய அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளைத்‌ தொடங்குவதற்கும் வரவு செலவுத்‌ திட்டத்தில்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ்க்காணும்‌ இடங்களில்‌ புதிய கல்லூரிகள்‌ தொடங்கப்படும்.

விருதுநகர்‌ மாவட்டம்‌ - திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ - திருக்கோயிலூர்‌, ஈரோடு மாவட்டம்‌ - தாளவாடி, திண்டுக்கல்‌ மாவட்டம்‌ - ஒட்டன்சத்திரம்‌, திருநெல்வேலி மாவட்டம்‌ - மானூர்‌, திருப்பூர்‌ மாவட்டம்‌ - தாராபுரம்‌, தருமபுரி மாவட்டம்‌ - ஏரியூர்‌, புதுக்கோட்டை மாவட்டம்‌ - ஆலங்குடி, வேலூர்‌ மாவட்டம்‌ - சேர்க்காடு ஆகிய இடங்களில்‌ புதிய இருபாலர்‌ அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளும்‌, திருவாரூர்‌ மாவட்டம்‌ - கூத்தாநல்லூரில்‌ புதிய அரசு மகளிர்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியும்‌ தொடங்கப்படும்''.

இவ்வாறு உயர் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது‌.


ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்தப்படும். பள்ளி மானியக் கோரிக்கையில் அறிவிப்பு.


ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கொள்கை :

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக , ஆண்டுதோறும் பொதுமாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்பொதுமாறுதலை ஒளிவுமறைவின்றி 2021 22 ஆம் கல்வியாண்டு முதல் நடத்திட பொது மாறுதல் கலந்தாய்வுக் கொள்கை வகுக்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என இன்று வெளியிடப்பட்ட பள்ளி மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.




அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது. முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டநிலையில், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. 

அப்போது தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

கடந்த பல ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதில்லை என்று கூறினார். தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக நாங்களும் ஆதரிக்கிறோம். பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

உடல் எடையைக் குறைக்க ஸ்கிப்பிங் சிறந்த வழி



ஸ்கிப்பிங் என்பது செலவில்லாத முழு உடற்பயிற்சியாகும். இது உங்களுக்கு இதய ஆரோக்கியத்தை தரும். உடலில் பல மடங்கு கலோரிகளை எரிக்க உதவும்.


உங்களின் இதயத் துடிப்பை அதிகரிப்பதுடன், உங்கள் நுரையீரலின் திறனை அதிகரிக்கும் மற்றும் முக்கியமாக உங்களை வியர்க்க வைக்கும். உடல் எடையை ஸ்கிப்பிங் எவ்வாறு குறைக்க உதவுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

தசைகள் வலுப்பெற:

ஸ்கிப்பிங் மற்றும் ரன்னிங் இவை இரண்டும் உங்கள் கீழ் உடலில் அழுத்தம் கொடுக்கின்றன. மேலும், உங்கள் மூட்டுகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தவிர, ரன்னிங் என்பது உங்கள் பிட்டம் முன்னோக்கி நகர்த்துவது, தோள்கள் மற்றும் கால் இயக்கத்தை சமப்படுத்த உதவுகிறது.

ஸ்கிப்பிங், உங்கள் பிட்டம் தசைகள் இயக்கப்படுவதால் இது உங்கள் இடுப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது

கலோரிகளை குறைக்கும்

உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் உங்களுள் வந்துவிட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று, உங்கள் உடலில் உள்ள கலோரிகளை குறைக்க வேண்டும். இதில், ஸ்கிப்பிங் மற்றும் ரன்னிங் இரண்டும் சிறந்தவை. ஆனால், ஸ்கிப்பிங்கில் சற்று கூடுதல் நன்மைகள் இருப்பதாக தெரிகிறது.

68 கிலோ எடையுள்ள ஒருவர் மிதமான வேகத்தில் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் 10 நிமிடங்களில் 140 கலோரிகளை எரிக்க முடியும். அதே வேளையில், மிதமான வேகத்தில் ரன்னிங் செய்யும் போது, அதே நபர் 10 நிமிடங்களில் 125 கலோரிகளை மட்டுமே எரிக்க முடியும்.

ஸ்கிப்பிங் பலன்கள்:

ஸ்கிப்பிங் செய்வது முழங்கால், இடுப்பு அல்லது கணுக்கால் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்காது. அதற்கு பதிலாக, நீங்கள் குறைந்த வேகத்தில் நடக்க அல்லது ஓட முயற்சி செய்யலாம்.

ஸ்கிப்பிங் செய்தால், உங்கள் முழங்கால்களில் அழுத்தத்தைக் குறைக்க நிலையாக முயற்சிக்கவும். உங்களுக்கு எது சிறந்தது என்பதை தீர்மானிக்கும்போது, இரண்டையும் முயற்சிக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும், உங்களிடம் குறைவான நேரம் இருப்பின், ஸ்கிப்பிங் செய்வது ரன்னிங்கை விட சிறந்த வழியாகும்.

அரசுப் பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடம் சீரமைப்பு: பாரம்பரிய, தற்காப்புக்‌ கலைகள்‌ அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.



அரசுப் பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடத்திட்டம் சீரமைக்கப்படும் என்றும் பாரம்பரிய, தற்காப்புக்‌ கலைகள்‌ அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.26) உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியான அறிவிப்பு:

''தொழிற்கல்விப்‌ பாடத்திட்டத்தைச்‌ சீரமைத்தல்‌

தொழிற்கல்வி பயிலும்‌ மாணவர்களின்‌ வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்‌ வகையில்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ தொழிற்கல்விப்‌ பாடங்கள்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ உறுதுணையோடு மேம்படுத்தப்படும்‌.

இதனால்‌ மாணவர்கள்‌ தொழிற்சாலைகளின்‌ தேவைகளுக்கேற்ப திறனைப் பெற்று உடனடி வேலைவாய்ப்பினைப்‌ பெறுவர்‌.

பள்ளிகளில்‌ பாரம்பரியக்‌ கலைகள்‌

கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம்‌, ஒயிலாட்டம்‌, காவடியாட்டம்‌, பன்னிசை, நாட்டுப்புறப்‌ பாட்டு போன்ற தமிழரின்‌ பாரம்பரியக்‌ கலை வடிவங்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களிடம்‌ எடுத்துச்‌ செல்வதை‌ இலக்காகக்‌ கொண்டு கிராமப்புறங்களில்‌ ஆலோசனை மையம்‌ உருவாக்கப்படும்‌. நாட்டுப்புறக்‌ கலைஞர்களின்‌ உதவியுடன்‌ பயிற்சியளிக்கப்படும்‌.

இதுபோலவே சிலம்பம்‌, மல்யுத்தம்‌ முதலான தமிழரின்‌ பாரம்பரிய தற்காப்புக்‌ கலைகளையும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்களுக்கு முறையாகக்‌ சேர்க்க உரிய பயிற்சி அளிக்கப்படும்‌''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

ஈட்டிய விடுப்பு ஊதியத்தை அடுத்த ஓராண்டுக்கு நிறுத்தி தமிழக அரசு உத்தரவு.

 E.L SURENDER SUSPENDED FOR ONE MORE YEAR UPTO 31.3.22 - GO NO : 48 , DATE : 13.05.2021

IMG_20210823_150537
ORDER : In the Government Order third read above , due to the fiscal stress arising from the COVID - 19 pandemic , orders were issued for suspension of the facility of the periodical surrender of Earned Leave for encashment for 15 days every year / 30 days every two years to all the Government Employees and Teachers , initially for a period of one year , from the date of issue of order. In the said Government Order , it has also been ordered that this order shall also be applicable to all Constitutional / Statutory bodies including all State Corporations , Local Bodies , Boards , Universities , Commissions , Companies , Institutions , Societies , etc. , Further in the Government Order fourth read above , necessary amendments to rule 7A of the Tamil Nadu Leave Rules , 1933 , have been issued , in this regard. 



In view of the second wave of Corona and the need to conserve resources to fight the pandemic , the suspension of periodical surrender of Earned Leave for encashment for 15 days every year / 30 days every two years , as provided under Rule 7A of the Tamil Nadu Leave Rules , 1933 is extended for one more year , till 31.03.2022 , to all the Government Employees and Teachers.



The order shall also be applicable to all Constitutional / Statutory bodies , including all State Corporations , Local Bodies , Boards , Universities , Commissions , Companies , Institutions , Societies , etc. ,






உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள்: 50% ஒதுக்கீட்டுக்கு சட்டம் இயற்ற வேண்டுகோள்


"உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறும் வகையிலான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மருத்துவா் பி.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி 2017-ம் ஆண்டு முதல் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள டிஎம், எம்சிஎச் போன்ற உயா் சிறப்பு மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு மொத்தமுள்ள 450 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசின் தொகுப்புக்கு வழங்கப்பட்டது. இதனால், மத்திய அரசின் மூலமாக 100 சதவீத இடங்களும் நிரப்பப்படுகின்றன. இதுதொடா்பாக பலமுறை கோரிக்கை வைத்தும், பறிக்கப்பட்ட 50 சதவீத தமிழக ஒதுக்கீட்டு இடங்களைத் திரும்பப்பெற இயலவில்லை. 50 சதவீத இடங்கள் மீண்டும் கிடைத்திட நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓா் அவசரச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவா் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயா் சிறப்பு மருத்துவப் பட்டமேற்படிப்புகளைப் படித்த வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களில் 80 சதவீதம் போ் தமிழகத்தில் இரண்டு ஆண்டு கட்டாயப் பணி மேற்கொள்வதை புறக்கணித்துள்ளனா். இதேநிலை தொடா்ந்தால் தமிழக அரசு மருத்துவமனைகளில் உயா் சிறப்பு மருத்துவப் பட்டமேற்படிப்புகளைப் படித்த மருத்துவா்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடா்ந்து 50 சதவீத இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தைக் கூறி 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தனியாருக்கு அனுமதி - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.


6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை WhatsApp & Google Meet-ல் நடத்த தனியார் அமைப்புக்கு அனுமதி - பள்ளிக்கல்வித்துறை

அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு.
மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கி ஆணை.

மேலும் 18 மாவட்டங்களில் Science Centre, Mobile Science Lab ஆகியவற்றை அமைக்கவும் அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தேதியில் மாற்றம் இல்லை - 9ம் தேதி ஹால்டிக்கெட்



சென்னை, ஆக.23: தேசிய தேர்வு முகமை அறிவித்த தேதியின்படி செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடக்க இருக்கிறது. இதுவரை அந்த தேதியில் மாற்றம் ஏதும் செய் யவில்லை,

மருத்துவ படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) இந்த ஆண்டு நடக்குமா,நடக்காதா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலை யில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடந்தே தீரும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மேலும், தேர்வு எழுத வரும் மாணவ மாணவிய ருக்கான வழிகாட்டு நெறி முறைகளும் வெளியிடப்பட் டுள்ளன. அதில் ஓஎம்ஆர் விடைத்தாள் மாதிரியும். அதை எப்படி பூர்த்தி செய் வது என்பதும் தெளிவு படுத்தி தேசிய தேர்வு முக மையின் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதன் படி தேர்வு எழுதுவோர் எந் தவித தவறுகளும் செய்யா மல் விடைத்தாளை பூர்த்தி செய்ய வேண்டும் அப்படி செய்தால் தான் கணினியில் அது சரியான முறையில் ஏற் கும் என்றும் தெரிவித்துள் ளது.

இந்நிலையில், தேர்வுக் கான ஹால்டிக்கெட்டுகள் தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக வினியோகம் செய்யப்படும் என்று அறி வித்ததன் பேரில் செப்டம் பர் 9ம் தேதி ஹால்டிக்கெட் டுகளை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

தகுதித்தேர்வு, பணிநியமன தாமதம் காரணமாக தமிழகத்தில் பி.எட்., கல்லூரிகளில் சரிந்து வரும் மாணவர் சேர்க்கை - மூடும் நிலைக்கு தள்ளப்படும் அவலம்!



தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு, பணி நியமனத்தில் தாமதம் மற்றும் கொரோனா காரணமாக, பிஎட்., படிப்பில் சேர மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் பல பிஎட் கல்லூரிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு கல்லூரிகள், 14 உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 756 கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் (பிஎட்.,), முதுகலை கல்வியியல் (எம்எட்.,) மற்றும் ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் சேர பிஎட் கட்டாயம். எனவே, இளங்கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்த பலர், பிஎட் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வந்தனர். ஆனால், தற்போதைய நிலையில் பல பிஎட் கல்லூரிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து தனியார் பிஎட்., கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஓராண்டாக இருந்த பிஎட் படிப்பு காலம் இரு ஆண்டாக உயர்த்தப்பட்டது. அப்போது முதலே மாணவர் சேர்க்கை குறையத் தொடங்கியது. அதனை தொடர்ந்து, பிஎட்., முடித்தாலும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சியடைந்ததால், பிஎட் படிப்பு மீதான ஆர்வம் சரிந்தது. இதனிடையே, கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் ஆசிரியருக்கான படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களில், இடைநிலை ஆசிரியராக 1.70 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியராக 85 ஆயிரம் பேரும், முதுகலை ஆசிரியர் பணியை பெற 2.42 லட்சம் பேரும் பதிவு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக போட்டித்தேர்வு மூலம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதால், ஆசிரியர் பணியை பெறுவதில் சிக்கல் உள்ளதாக கருதுகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில், அரசுப்பள்ளிகளில் பல பாடப்பிரிவுகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். மேலும், கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக புதிய நியமனம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், பிஎட் முடித்தாலும் அரசுப்பணி வாய்ப்பு கேள்விக்குறி தான். கொரோனா காரணமாக, தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால், பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பல மடங்கு சரிந்துள்ளது. இதனிடையே பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததுடன், அங்கீகார கட்டணமாக பல லட்சம் செலுத்த வேண்டிய நிலைக்கு நிர்வாகங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால், கல்லூரிகளை நிரந்தரமாக மூடும் எண்ணத்திற்கு பலர் சென்றுவிட்டனர். இதேநிலை நீடித்தால், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு வந்த நிலைமை, பிஎட் கல்லூரிகளுக்கும் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில் இணைய வழியாக ABL முறையில் வகுப்பு எடுக்க அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்க்கு பள்ளிகல்வி துறை அனுமதி


அரசுப் பள்ளிகளில் இணைய வழியாக ABL முறையில் வகுப்பு எடுக்க அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்க்கு பள்ளிகல்வி துறை அனுமதி 



அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம்- 2021-2022 ஆம் கல்வி ஆண்டு- புதியதாக 18 மாவட்டங்களில் Science Centre, Mobile Science Lab, | Mobile Lab, Lab on a Bike and YIL Programs தொடங்கிடவும் , கடந்த கல்வி ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு 12 மாவட்டங்களில் செயல்படுத்தி வரும் மேற்கண்ட திட்டங்களை இக்கல்வி ஆண்டிலும் செயல்படுத்திட அனுமதித்தும் , 2021-22 ஆம் கல்வி ஆண்டு- அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழி கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதித்து பள்ளிகல்வி துறை ஆனை வெளியிட்டுள்ளது 



பள்ளிகல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைபடி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், இராமநாதபுரம், விருதுநகர், தேனி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கரூர் ஆகிய Science Centre, Mobile Science Lab, | Mobile Lab, Lab on a Bike and YIL Programs தொடங்கிட அனுமதி வழங்கியுள்ளார் .



CSE - Permission to Agastya International Foundation 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்தாரால் ஏற்கனவே பள்ளிகளில் செயல்படுத்தி வரும் திட்டங்களை, இக்கல்வி ஆண்டிலும் செயல்படுத்திட அனுமதி வழங்கியுள்ளார்.



அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் (whats app ,google meet ) செயல்வழி கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி ஆணை வழங்கியுள்ளார்



நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை அமல்


நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை தெரிவித்தார்.
இதுதொடர்பாக பெங்களூருவில் நடைபெற்ற விழாவில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து விழாவில் முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை பேசியதாவது:

''புதிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக்க வேண்டுமெனில், அதை மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். புதிய டிஜிட்டல்மயமாக்கப்பட்ட கொள்கையைக் கல்விக்கென உருவாக்க வேண்டும். தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களின் உதவியுடன் இது ஒவ்வொரு கிராமத்திலும் சாத்தியமாக்கப்பட வேண்டும்.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட திட்டத்தின்கீழ் பட்டப்படிப்பு அளவிலான மாணவர்களுக்கு ஐபாட் வழங்கப்படும். கலபுர்கியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்விக்குழு உருவாக்கப்பட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையின்படி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பெங்களூருவில் 180 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்ட மையங்கள் உள்ளன. ஆனால் அவற்றுக்கும் மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இந்த நிலை மாற்றப்படும்.

புதிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டம் ஒவ்வொரு கிராமமும் பள்ளியும் பல்கலைக்கழகமும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கன்னடிகாவும் அறிவு சார்ந்தவராக இருக்க வேண்டும்.

நம் நாட்டைப் பல்வேறு நபர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். ஆனால் அமைப்பில் அடிப்படை மாற்றத்தைச் செய்ய சிலரால் மட்டுமே முடியும். புதிய கல்விக் கொள்கை அந்த அடிப்படை மாற்றத்தைச் செய்திருக்கிறது''.

இவ்வாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை தெரிவித்தார்.


பிளஸ் 2 துணை தேர்வு நிறைவு 23 முதல் விடைத்தாள் திருத்தம்


 சென்னை:பிளஸ் 2 துணைத் தேர்வுகள் முடிந்தன. வரும் 23ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது.

கொரோனா தொற்று பிரச்னையால், தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர்.பிளஸ் 2 மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் அடிப்படையில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கு மட்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 36 ஆயிரம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு, இம்மாதம் 6ம் தேதி துவங்கியது. நேற்றுடன் தேர்வுகள் முடிந்தன. இதையடுத்து 23ம் தேதி முதல் விடைத்தாள் திருத்த பணிகளை துவங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது; 28ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தப் பணிகளை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2020 - 2021க்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறையின் செயல்முறைகள்.

பள்ளி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 23.08.2021 தேதி அன்று காலை 11.00 மணி முதல் 31.08.2021 தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பிறந்த தேதி , தேர்வெண் ஆகியவற்றை அவர்தம் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அரசுத் தேர்வுத் துறையின் மூலம் 21.08.2021 தேதி அன்று காலை 11.00 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.
எனவே , பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , தங்களுக்கான Roll No , பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து , தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

.com/img/a/

எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்கினால் அரசு திவாலாகிவிடும் - பழைய ஓய்வூதியத்துக்கு வாய்ப்பு இல்லை : சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்கினால் அரசு திவாலாகிவிடும். மாநிலத்தின் நிதி சூழ்நிலை இக்கட்டான நிலையில் இருப்பதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், 2021-22 நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட் மற்றும்வேளாண் பட்ஜெட் மீதான விவாதம்கடந்த 16-ம் தேதி தொடங்கி நேற்றுநிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, விவாதத்துக்கு பதில் அளித்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: திராவிட இயக்க கொள்கைகளை பின்பற்றி, முதல்வர், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று கூறியுள்ளார். அதை கொஞ்சம் திருத்திக் கூற விரும்புகிறேன். சமூக, பொருளாதார நீதிக்கு ஏற்ப. எல்லோருக்கும் எல்லாவற்றையும் இலவசமாக வழங்க முடியாது. அப்படி செய்தால் அரசு திவாலாகிவிடும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்சி, இந்த கொள்கையில் இருந்து விலகி, யாரெல்லாம் எதையெல்லாம் கைப்பற்ற முடியுமோ அதை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற அடிப்படையில் நடந்துள்ளது. இது எங்கள் கருத்துக்கு விரோதமானது. இதை மாற்றியே ஆக வேண்டும். இன்றைய சூழலில், மாநிலத்துக்கான பல அதிகாரங்கள், மாநிலங்களிடம் இல்லை. எனவே, நம்மிடம் இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு சிறப்பானநிர்வாகத்தை கட்டமைக்க வேண்டும். 5 திருத்தங்கள் அவசியம்

இதற்காக, 5 திருத்தங்களை சுட்டிக்காட்டியுள்ளோம். தகவல் அடிப்படையில் நிர்வாகம் என்பது முதலாவது. ஆக.13-ல் பேரவையில் பெட்ரோல் குறைப்பு அறிவிக்கப்பட்டது. உடனடியாக தகவல் திரட்ட தொடங்கினோம். இந்த தகவல்கள் மத்திய அரசிடம் உள்ளன. பெட்ரோல் விற்பனையைப் பொருத்தவரை, ஆக.1 முதல் 13 வரை 91 லட்சம்லிட்டர் விற்பனையான நிலையில்,வரியை குறைத்த பிறகு 14 முதல் 16-ம்தேதி வரை 1.03 கோடி லிட்டர் விற்பனைஆனது. மக்கள் அதிக அளவில் பெட்ரோலை பயன்படுத்தியதால் விற்பனைஅதிகரித்துள்ளது. இந்த அளவுக்கு தகவல் இருந்தால் அரசை சிறப்பாக நடத்த முடியும். இரண்டாவது மத்திய - மாநில அரசு உறவு. இதை பயன்படுத்தி, மத்திய அரசிடம் இருந்து முதல்வர் மூலம், தரவு சேமிப்பை செய்யப் போகிறாம். அதாவது, வருமான வரி, பெட்ரோல் டீசல் பயன்பாடு, விற்பனை, தடுப்பூசி போடப்பட்ட விவரம் இவற்றைகேட்டுப் பெற சட்டம், விதிமுறைகள்உருவாக்கி முயற்சி எடுக்கப் போகிறோம். மக்களின் நலன், நிலம், பணத்தைபாதுகாப்பது, இடர் மேலாண்மை என்பது அடுத்த முக்கிய அம்சம். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் மொழிபெயர்த்து, திட்டத்தின் தன்மை, பயன்களை மக்களிடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இது சீர்திருத்தத்தின் முதல்கட்டம்ஆகும். இன்னும் பல நடவடிக்கைகள் வர உள்ளன. ஆண்டு பொருளாதாரக் கணக்கெடுப்பு கடந்த 10 ஆண்டுகளாக பட்ஜெட்டுக்கு முன்னால் வெளியிடப்படவில்லை. இது அடுத்த ஆண்டு முதல் வெளியிடப்படும். 110 விதியின் கீழ் அறிவிப்பு விவரம்

கடந்த 10 ஆண்டுகளில் 110 விதியின்கீழ் எத்தனை அறிவிப்புகள் வந்தன. எவை செயல்படுத்தப்பட்டன. கைவிடப்பட்டவை, நிதி பெற்ற விவரம், பட்ஜெட்டுக்கு உட்படாத நிதி எங்கிருந்து வந்தது,திட்டமிடப்படாத அறிவிப்புகள் அரசை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்துஆய்வு செய்து, இந்த கூட்டத் தொடரிலேயே அவையில் சமர்ப்பிக்கப்படும். இன்னும் பல துறைகளில் பல காரணங்களுக்காக பல ஆய்வுகள் நடக்கஉள்ளன. இதை பழிவாங்கும் நடவடிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நாம் இக்கட்டான சூழலில் உள்ளோம். அனைவருடைய ஒத்துழைப்புடன்தான் முன்னேற முடியும். அரசின் நிதிச்சூழலை மேம்படுத்தாமல், இன்று இருக்கும் அளவைவிட சிறப்பாக குடிநீர்,சாலை, மருத்துவமனை, வீடுகள் ஆகியவற்றை கட்டித் தர முடியாது. எனவே,இன்று உள்ள சூழலை திருத்தியே ஆக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய், மத்திய அரசின் நிதி என ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் எல்லா அரசுகளும் வேறு வழியின்றி, சில செலவுகளை ஒத்திவைக்கின்றன. ஊதியக் குழு பரிந்துரைகள் தள்ளி அமல்படுத்தப்பட்டன, அகவிலைப்படி உயர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. நிதி இல்லாதபோது, திறமை இருந்தாலும் சமாளிக்க முடியாது. தேவைஉள்ள நேரத்தில் வரியை அதிகரிக்காவிட்டால், அரசை நடத்த முடியாது. முன்பு, மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த வணிக வரி உயர்த்தப்பட்டது. மிக கடினமான சில பிரச்சினைகளை ஒத்திவைத்துக் கொண்டே வருகிறோம்.பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதுபற்றி முடிவெடுக்காமல் 3, 4 முறைஅரசுகள் ஆட்சிக்கு வந்து சென்றுவிட்டன. நிதி சூழ்நிலை இக்கட்டான நிலையில் இருப்பதால், அதற்கானமுடிவை எடுக்க முடியவில்லை. சில செலவுகள் பண வீக்கத்துக்கு ஏற்ப அதிகரிக்கப்படுகிறது. பொருட்கள் விலை அதிகரிப்பால் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி உயர்வின்போது, ஓய்வூதியம் அதிகரிக்கப்படுகிறது. ஆனால், விதவைகளுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படுவது இல்லை. வரி உயர்த்தப்படுவது இல்லை. இதை மாற்றியாக வேண்டும். இவ்வாறு அமைச்சர்தனது பதில் உரையில் தெரிவித்தார்.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது நிறைவேற்றப்படும்? - பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தகவல்!


தமிழக அரசின் நிதி நிலைமையை நினைத்தால் அச்சமாக உள்ளது என்று, தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் மீதான பதில் உரையில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில்,

"பல விவகாரங்களில் முடிவெடுக்க முடியவில்லை. தமிழக அரசின் நிதிநிலைமை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற முடியாதுயாதற்கு இந்த நிதி சூழல் தான் காரணம்.

அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். ஆனால், நிதி சூழல் மந்த நிலையில் இருக்கிறது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இதில், பழைய ஓய்வூதிய (பென்ஷன்) திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் என்று அமைச்சர் தியாகராஜன் தெரிவித்திருப்பதால், தற்போதைக்கு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

அதாவது, திமுகவின் தேர்தல் வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற முடியாது என்று நிதி அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இன்னும் புரியின்படி சொல்லவேண்டுமானால், திமுக தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், தற்போதைய நிதி சூழல் காரணமாக அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி இந்த வருடம் இல்லை என்று தெரிவித்த நிலையில், தற்போது பழைய பென்சன் திட்டமும் கொண்டுவர முடியாத சூழ் உள்ளதாக தெரிவித்திருப்பது, தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

HI TECH LAB - BATCH II ( 23.08.2021 - 27.08.2021 ) ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள் ஆசிரியர்கள் - இப்பயிற்சியில் பங்கேற்க EMIS ல் தாங்களாகவே பதிவு செய்ய வேண்டும்.



அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு :
* Android கைப்பேசியில் TN EMIS App யினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

* TN EMIS App யில் Teacher ID ( 8 digit ) மற்றும் password யினை பயன்படுத்தி login செய்ய வேண்டும் . password EMIS யில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசியின் முதல் நான்கு இலக்கு @ பிறந்த வருடம்.

* Login செய்ததும் click Teacher Training Module Select training யினை Click செய்யவும். அதில் தற்பொழுது கலந்துக் கொள்ளும் பயிற்சியின் தலைப்பினை ( ICT Training ) தெரிவு ( Select ) செய்ய வேண்டும்.

* பின்பு பயிற்சி மையத்தினை ( Training venue ) Click செய்யவும் . ஒன்றியத்திலுள்ள ( Block ) அனைத்து உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் உள்ள ( Hi - Tech Lab ) பள்ளியின் பெயர்கள் காட்சிபடுத்தப்படும் . அதில் பயிற்சியில் கலந்துக் கொள்ள தங்கள் பள்ளி மையமாக இருப்பின் அப்பள்ளியினை தெரிவு ( select ) செய்து submit / save செய்ய வேண்டும் . தங்கள் பள்ளி பயிற்சி மையமாக இல்லை எனில் அருகிலுள்ள பள்ளியின் பெயரை தெரிவு ( select ) செய்து submit / save செய்ய வேண்டும்.

 * அவ்வாறு submit'save செய்யும் பொழுது அம்மையத்தில் பயிற்சியில் கலந்துக் கொள்ள காலியிடம் இருக்கும் பட்சத்தில் Registered successfully என காண்பிக்கப்படும்.

* இவ்வாறு ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையங்களை தெரிவு செய்து வரும் பொழுது அம்மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வரும்.

 * எனவே ஆசிரியர்கள் login செய்யும் பொழுது உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி இணைப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலியாக இருக்கும் பயிற்சி மையங்களின் பெயர் மட்டுமே காண்பிக்கப்படும்.


அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இனி இணையதளம் மூலம் சொத்து வரி செலுத்தலாம்!


Sub: Property Tax City Municipal Corporations and Municipalities -

Property Tax and Property Tax Name Transfer Urban Tree Information System Services to be delivered only through online - Instructions issued - Regarding.

1. This office circular Roc No. 15940/2015/VB, dated 09.08.2017. 2. This office circular Roc. No. 12503/2018/R1, dated 23.03.2021

In the circular 1 cited above, the Commissioners of Corporation (except Greater Chennai Corporation) and Municipalities were informed to make accessible the services provided by the City Municipal Corporations and Municipalities online. The delivery of various services have been made available to the public at affordable cost under "Urban Tree Information System" through centralized web based software which is being monitored by the Directorate of Municipal Administration. The services delivered the City Municipal Corporations and Municipalities pertaining to Property Tax. Profession Tax, Non-Tax, Water Charges. Trade License, Under Ground Drainage user charges have already been brought online and all the Commissioners of Corporations and Municipalities were informed to provide citizen's services such as Profession Tax and Trade License only through online vide this office circular referred 1" above in continuation of the instructions issued in circular cited 1 above, issued further instructions to all the Commissioners of Corporation (except GCC) and Municipalities vide circular cited 20 above to ensure delivery of services namely profession tax registration, payment, filing of returns and downloading signed certificates etc., online.. The Government of India has initiated the Business Reform Action Plan, 2019 to minimize the compliance burden on citizen services, wherein, it has been entrusted to ensure the compliance of online delivery of services namely, filing of self-assessment of Property Tax returns, levy and collection of Property Tax, application for name transfer of Property Tax and issue of name transfer orders, etc.

Hence, all the Commissioners of Corporations (except Greater Chennai Corporation) and Municipalities are herby instructed to ensure delivery of online services in case of filing of self-assessment of Property Tax returns, levy and collection of Property Tax, application for name transfer of Property Tax and issue of name transfer orders via Urban Tree Information System website (https://tnurbanepay.tn.gov.in) The Commissioners of all Corporations and Municipalities are requested to implement the online delivery of above services through UTIS without any lapae in view of complying the requirement for Reduction on Regulatory Burden to facilitate Ease of Doing Business



மாணவர்களுக்கான தேசிய அளவிலான அறிவியல் திறனாய்வுத் தேர்வு - மாதந்தோறும் உதவித்தொகை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?


வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் -2021 இணைய வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு -2021
 * வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் , விபா நிறுவனம் , என்.சி.இ.ஆர் , டி { NCERT , GOVT.OF INDIA ) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை , மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் கொரோனா பேரிடரால் பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் வீட்டில் இருந்தே இத்தேர்வை மாணாவர்கள் எழுத திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வு இந்தியா முழுவதும் 30-11-2021 ( செவ்வாய் மற்றும் 05-12-2021 ( ஞாயிறு ) ஆகிய இரு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன் , டேப்லெட் , மடிக்கணினி , கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது . இந்த திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ் , இந்தி , மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத இயலும் முக்கியமாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும். 



தேர்வின் முக்கியமான நோக்கங்கள் : 



* அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் பள்ளி மாணாக்கர்களின் பங்கேற்பை அதிகரித்தல் " மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கலாம். இதில் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நம் உணவுப் பழக்கம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் தாக்கம் போன்றவற்றை அறியலாம். 



தேர்வுக் கட்டணம் + 100 ரூபாய் 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-10-2021 

தேர்வு நடைபெறும் நாள் : 30-11-2021 ( செவ்வாய் ) அல்லது 05-12-2021 ( ஞாயிறு ) 

தேர்வு நேரம் : 90 நிமிடங்கள் ( 1.30 மணி நேரம் ) நேரம் : காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். ( ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும் )



யாரெல்லாம் தேர்வு எழுதலாம் ? 

 6 ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம். 6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும் 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும். 



தேர்விற்கான பாடத்திட்டம் : 

பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும் , அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு ஆச்சர்யா பிரபுல்லா சந்திர ராய் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டம் மற்றும் அறிவியல் ஆகிய புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகளும் , சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீத கேள்விகளும் ஆக மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.



எவ்வாறு பதிவு செய்வது ? 



www.wm.org.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 

பள்ளி வழியாக : பள்ளி மூலமாக விண்ணப்பிக்க இயலும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.பள்ளி மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்.



தனித்தேர்வர்களாக : 

தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.



பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் : 

பள்ளி அளவில் : பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக்கர்களுக்கு பள்ளி அளவிலான மின் சான்றிதழ்கள் வழங்கப்படும் , 



மாவட்ட அளவில் : மாவட்ட அளவில் ( 6 முதல் 11 ம் வகுப்புவரை ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் . 

> அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் . - , மாவட்ட மண்டல அளவில் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.



மாநில அளவில் : மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர் . அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும் . 

- இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள் , கேடயங்கள் வழங்கப்படும்.

- 120 மாணாக்கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசாக முறையே ரூ .5000 , ரூ .3000 , ரூ .2000 வழங்கப்படும்.

தேசிய அளவில் : 

- ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தோவு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள்.

- தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

 - மேலும் ஸ்ரீஜன் என்ற பெயரில் தேசிய மற்றும் மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்று முதல் 3 வாரங்களுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

- தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர் . அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் , கேடயங்கள் மற்றும் முதல் இரண்டாம் , மூன்றாம் இடம் பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ .25000 , ரூ .15000 , ரூ .10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் . 

> மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு ரூ .5000 , ரூ .3000 , ரூ , 2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும் . - அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துக்களை தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள் , இதுபோன்ற தோவுகளால் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும் . மேலும் இந்த வருடம் பதிவு செய்யும் மாணாக்கர்கள் அனைவரும் இந்திய அளவிலான மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.



 மேலும் விவரங்களுக்கு .. 

கண்ணபிரான் , 

மாநில ஒருங்கிணைப்பாளர் , 

வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் , 

cell : 8778201926 

Email : vvmtamilnadu@gmail.com


பிடெக் மாணவர்கள் ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்க AICTE அனுமதி

:


பிடெக் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரேநேரத்தில் பொறியியல் படிப்பையும் படிக்க அனுமதி வழங்கலாம் என்று ஏஐசிடிஇ, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அனைத்துகல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ அனுப்பிய சுற்றறிக்கை:



ஏஐசிடிஇ-யின் நிர்வாகக் குழுவின் 144-வது ஆலோசனைக் குழு ஜூலை 13-ம் தேதி நடைபெற்றது. அதில், பிடெக் மாணவர்கள், தாங்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே ஒரேநேரத்தில் பொறியியலும் படிக்க அனுமதி வழங்கவேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

லேட்டரல் என்ட்ரி முறையில்

அதன்படி, தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் பிடெக் படிப்பை எடுத்துப் படிக்கும் மாணவர்களை, லேட்டரல் என்ட்ரிஅடிப்படையில் தகுதியான பொறியியல் பிரிவில் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான செய்முறையையும் படிக்க உரிய அனுமதி வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள்மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தேவைப்படும் நேரத்தில் படிப்பை நிறுத்தி,அதற்குப் பொருத்தமான சான்றிதழ் பெறுதல், மீண்டும் படிப்பைத் தொடர விரும்பும்போது எளிதானசேர்க்கை உள்ளிட்ட வழிமுறைகளை புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி ஏஐசிடிஇ வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வசதி



அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வசதி ஏற்படுத்தி தர தலைமையாசிரியர் சங்கம் கோரிக்கை 

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.




நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை பரிசீலித்து சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள்

 



ஆண்டுதோறும் 2 முறை சூரியன் உச்சிக்கு வரும் நிழலில்லா நாள் இந்தாண்டில் 2வது முறையாக இன்று நிகழ்கிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிழலில்லா நாளை காணலாம். ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூரில் காணலாம். சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளை காட்சிப்படுத்தவும் விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் ஆக. 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

.


பள்ளிக் கல்வி - NSP இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவு செய்து KYC படிவத்தை பூர்த்தி செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


ஒவ்வொரு ஆண்டும் , NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று , தெரிவுசெய்யப்பட்ட , ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு NMMS கல்வி உதவித்தொகை மத்திய கல்வி அமைச்சகத்தால் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் ( DBT ) வரவு வைக்கப்படுகிறது.



இதற்காக , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( DNO ) மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் ( INO ) தங்களது ஆதார் விவரங்களை NSP இணைய தளத்தில் உள்ளீடு செய்து , KYC ) படிவத்தை தவறாமல் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



 இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி , ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களது ஆதார் விவரங்களை NSP இணையதளத்தில் 2021 , ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



ஒரு UDISE பள்ளிக் குறியீட்டிற்கு ஒரு தலைமை ஆசிரியரின் ஆதார் விவரங்கள் மட்டுமே NSP இணையதளத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே , இப்பணியை அனைத்து தலைமை ஆசிரியர்களும் மிகுந்த கவனத்துடன் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DSE - KYC Updation Instructions .pdf - Download here...




BREAKING NEWS பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு தமிழகத்தில் செப் .1 ல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.



BREAKING NEWS பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு தமிழகத்தில் செப் .1 ல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
SOP- Guidelines 
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Click here - School Reopen SOP- pdf

சி.இ.ஓ.,க்கள் 37 பேர் பொறுப்பேற்பு


 சென்னை---பள்ளி கல்வித் துறையில் மாற்றப்பட்ட, 37 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் நேற்று பொறுப்பேற்றனர்.தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்றி வந்த 37 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், இரண்டு நாட்களுக்கு முன் மாற்றப்பட்டனர். அவர்கள் நேற்று தங்களுக்கான புதிய பணியிடங்களில் பொறுப்பேற்றனர்.பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், 'ஆன்லைன்' வகுப்பு, மாணவர் சேர்க்கை, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குதல் உள்ளிட்ட விவகாரங்களில், கவனமுடன் செயல்பட, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தமிழகத்தில் செப். 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை இன்று முக்கிய ஆலோசனை!


 


தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். சென்னையில் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்துவது , பள்ளிகள் திறப்பு நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று ஆலோசனை நடத்தி வருகிறது.


செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பஞ்சாப், பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனவே செப். 1 முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.


தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!


சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் அதிகாரபூர்வ இணையதளத்தில் சிகிச்சை உதவியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டி.பார்ம், டிப்ளமோ இன் நர்சிங் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

பணியின் பெயர் : சிகிச்சை உதவியாளர்

கல்வித்தகுதி : டி.பார்ம், டிப்ளமோ இன் நர்சிங்

பணியிடம் : தமிழ்நாடு

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தபால்

மொத்த காலியிடங்கள் : 420

கடைசி நாள் : 25.08.2021

முழு விவரம் : https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082957.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

2022 - ஆண்டுக்கான போட்டித் தேர்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.


2022-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டது. 2022-ல் நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான அட்டவணையை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஐஏஎஸ் முதல் நிலை தேர்வுக்கான அறிவிக்கை 2022 பிப்.2-ம் தேதி வெளியாகிறது.

எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை சதவீதம் பாடத்திட்டம் குறைப்பு? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.




1 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 



இந்நிலையில், கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 

அனைத்து பாடத்திட்டங்களையும் நடத்தி முடிக்க முடியாத சூழல் இருப்பதால் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.



அதன்படி,



1 முதல் இரண்டாம் வகுப்புக்கு - 50% பாடங்கள் குறைப்பு.

3 முதல் 4 ஆம் வகுப்பு வரை - 49% பாடங்கள் குறைப்பு.

5 ஆம் வகுப்புக்கு - 48% பாடங்கள் குறைப்பு.

6 ஆம் வகுப்புக்கு - 47 % வரையிலான பாடங்கள் குறைப்பு

7,8-ம் வகுப்பு வரை 40% - 50% பாடங்கள் குறைப்பு.

9-ம் வகுப்புக்கு 38% பாடங்கள் குறைப்பு.

10-ம் வகுப்புக்கு 39% பாடங்கள் குறைப்பு.



11, 12-ம் வகுப்புகளுக்கு 35% - 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் செலவுகள் - ஒரு ரூபாயில்

தமிழ்நாடு அரசின் செலவுகள் - ஒரு ரூபாயில்

EMIS Portal - Teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்வது எப்படி?




✳️தற்போது EMIS Portal teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
✳️அனைத்து ஆசிரியர்களும் தங்களுடைய பயனர் பெயர் (User name) மற்றும் கடவுச்சொல்லைப் ( Password ) பயன்படுத்தி எமிஸ் வலைத்தளத்தைத் திறந்து தடுப்பூசி போட்ட ( Covid vaccination details ) விவரங்களை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Vaccination details update செய்யும் வழிமுறைகள்:

✳️ Go to Emis Web site.
EMIS login>ஆசிரியர் தங்களுடைய username / Password>dashboard ல் > My profile ஐ கிளிக் செய்யவும். அவற்றில் தோன்றும் vaccination details பதிவு செய்து Save கொடுக்கவும்.

✳️அனைவரும் இப்பணியை விரைந்து முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


ஆகஸ்டு 20 முதல் அக்டோபர் 10 வரை ‘நீட்’ எம்.டி.எஸ். கவுன்சிலிங்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்


முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான (எம்.டி.எஸ்.) ‘நீட்’ தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி நடத்தப்பட்டது. முடிவுகள் கடந்த டிசம்பர் 31-ந் தேதி வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இதுவரை கவுன்சிலிங் நடத்தப்படாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல் மருத்துவ மாணவர்களின் நேரம் வீணடிக்கப்பட்டு, எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தேதியும் அறிவிக்கப்படாமல் கிடப்பில் உள்ள நிலையில் என்.டி.எஸ். கவுன்சிலிங்கை 3 வாரங்களுக்கு நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ‘நீட்’ எம்.டி.எஸ். கவுன்சிலிங் தேதியை ஒரு வாரத்துக்குள் அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆகஸ்டு 20-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை ‘நீட்’ எம்.டி.எஸ். கவுன்சிலிங் நடைபெறும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

Total Pageviews

Blog Archive