131 பணியிடங்களுக்கு 57 ஆயிரம் பேர் போட்டி சி.எம்.டி.ஏ., வேலைக்கு ஏராளமானோர் மோதல் :


சி.எம்.டி.ஏ.,வில், ஐந்து நிலைகளில், 131 பணியிடங்களுக்கு, 57 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான தேர்வு நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

சி.எம்.டி.ஏ.,வில், அமைச்சு மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் உள்ளன. இதில், 22 பிரிவுகளில், 171 பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி தேர்வு, 2015ல் அறிவிக்கப்பட்டது.வயது வரம்பு மற்றும் பணி விதி சிக்கல் காரணமாக, இதற்கான அறிவிக்கை, 2018 பிப்., 6ல் ரத்து செய்யப் பட்டது. இதையடுத்து, 2020 பிப்ரவரி, 8ல், ஐந்து பிரிவுகளில், 131 பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கு, தமிழகம் முழுதும் இருந்து, 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, களபணியாளர், மெசேஞ்சர் எனப்படும், செய்தியாளர் பணிக்கு, 18 ஆயிரம் பேரும், பிற பணியிடங்களுக்கு, 39 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, இதன் தொடர் நடவடிக்கைகள் முடங்கின.

இந்நிலையில், இந்த விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு, நேர்முக தேர்வு பணிகள் துவங்கி உள்ளன.சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை அமைத்து, கள பணியாளர், செய்தியாளர் பணிக்கான நேர்முக தேர்வுகள் நடந்து வருகின்றன. அடுத்தபடியாக, இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு, இன்று நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ ஆய்வாளர் பணி தேர்வு முடிவு வெளியீடு.



மருத்துவ ஆய்வாளர் பதவியில் 46; இளநிலை பகுப்பாய்வாளர் பதவியில் 13 காலியிடங்களுக்கு 2019 ஜூனில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 4308 பேர் பங்கேற்றனர். அவர்களில் 128 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அவர்களுக்கு பிப். 10ம் தேதி நேர்முக தேர்வு நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. மேலும் விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நீதிமன்றப் பார்வைக்குள்ளாகும் அரசுப் பணியாளர் தேர்வுகள்



ஒரு சாமானியக் குடிமகனின் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்கிற பக்குவம் அதிகார வர்க்கத்தில் உள்ள எல்லோருக்கும் இருப்பது இல்லை. இந்தப் பிரச்சினை காலம் காலமாக உலகம் எங்கும் இருக்கிறது. சுந்திரமான நீதித்துறையை கொண்ட இந்தியாவில் எந்த மனுவும், தகுந்த முகாந்திரம் இன்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. எனவே நீதிமன்றம் கேட்கும்போது, தனதுநிலைப்பாடு தவறு எனத் தெரிந்தால், மாற்றிக் கொள்வதாக, சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் அறிவித்த சம்பவங்கள் நிறைய உண்டு. அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெறுகிற நிர்வாக சுதந்திரம் கொண்டவர்களாக அதிகாரிகள் இருந்தனர். இவை எல்லாம் பொய்யாய், கனவாய், பழங்கதையாய் போய் விட்டன. இன்று, அரசியல் தலைவர்களை விடவும் அதிகாரிகள் மாறி விட்டனர். நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தாலும், தவறை ஒப்புக்கொண்டு, சரி செய்கிற மனநிலை அவர்களுக்கு இல்லை. ‘நீட்’ தேர்வு தொடங்கி பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் வரை,பல தேர்வுகள் நீதிமன்றப் பார்வைக்கு வருவதைக் காண முடிகிறது. இதுவிஷயத்தில் வாரியம் அல்லது தேர்வாணையம் எடுக்கும் நிலைப்பாடுகள், தரும் பதில்கள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. பாதிப்புக்கு ஆளானவர்கள் நீதிமன்றக் கதவைத் தட்டுவதற்கு முன், தங்கள் கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறை அல்லது அமைப்பிடம் வைக்கின்றனர். இங்கெல்லாம், யாரும் சற்றும் அசைந்து கொடுப்பது இல்லை; ‘நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்; நீங்கள் என்ன கதறினாலும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம்’ என்கிற இறுக்கமான அணுகுமுறை, எழுதப்படாத சட்டம் ஆகி விட்டது. கடந்த அக்டோபர் 4-ம் தேதி, ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. கரோனா தொற்றின் பாதிப்பு மோசமாக இருந்த நேரம் அது. சிலரால் தேர்வு எழுத முடியவில்லை; சிலரால் முழுமையாக தேர்வுக்குத் தயாராக முடியவில்லை. எனவே, அந்த ஆண்டுடன், தேர்வுக்கு விண்ணப்பிக்கிற வயது நிறைவடைந்த தேர்வர்கள் சிலர், தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்று பரவலாக நம்பப்பட்டது. மாறாக, தேர்வர்களின் கோரிக்கையை நிராகரிப்பதாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கீழ்நிலைச் செயலர், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது அதிர்ச்சியாக இருந்தது. ஓர் அசாதாரண கோரிக்கை எழும்போது, ஆணையத்தின் உயர் நிலையில் முடிவெடுத்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பதுதான் நியாயம். ஆனால் கீழ்நிலைச் செயலர் ஒருவர், எப்போதும் உள்ள விதிமுறைப்படி, கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் தந்துள்ளார். இது குறித்து, நீதிபதி கன்வில்கர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கீழ்நிலை அலுவலர்களின் அதிகாரம் மிகக் குறுகியது. அவர்களைக் கொண்டு, உச்ச நீதிமன்ற வழக்கில் கொள்கை முடிவுகளைத் தெரிவிப்பது அலட்சியத்தின் உச்சம். மனிதாபிமான அடிப்படையில், கூடுதலாக சிலரை தேர்வுக்கு அனுமதிப்பதை, கீழ்நிலை அதிகாரியை விட்டு மறுப்பதன் மூலம் ஆணையம் சொல்ல வருவது என்ன..? ‘எமது அதிகாரமே இறுதியானது; நாங்களாக மனது வைத்தால் மட்டுமே அனுமதிக்க முடியும்; நீதிமன்ற வழக்கின் மூலம் எங்களைப் பணிய வைக்க முடியாது’ என்பதுதான் அது. இங்கே, தமிழ்நாட்டில் நடந்தது இது:2016 குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்ததாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மீது, தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்று புகார் கூறியது. பொய்யான சான்றுகளின் அடிப்படையில் ஆணையத்துக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி ஒளிபரப்பியதாக, செய்தி நிறுவனம் மீது உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி வழக்கு தொடுத்தது. இத்தகைய செய்திகள் ஆணையத்தில் உள்ள தவறுக்கான சாத்தியங்களைக் களைய உதவும் என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகளை நாம் பலமுறை பாராட்டியுள்ளோம். அதே சமயம் தவறுகளைக் களைய, பிழைகளைத் திருத்திக் கொள்ள எந்த முனைப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. உலகம் போற்றும் திருக்குறள், போலி ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது என்று வினா - விடை அளிக்கிற ஆணையம் அதற்காக வருந்தவில்லை. குரூப்1 தேர்வு வினாத்தாளில், தமிழ் மொழியில் எண்ணற்ற பிழைகள் இருந்ததைப் பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால், குரூப் 2 தேர்வில், சிலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தப்படும் என்று அறிவிக்கிறது. பாடத் திட்டம் வெளியிட்டு, அதில் இந்தந்தப் பகுதிகள் (மட்டும்) முக்கியம் என்று எந்தத் தேர்வாணையமும் குறிப்பிட்டுச் சொன்னதாகத் தெரியவில்லை. ஏன் இந்த மரபு மீறல்? ஆணையத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், தமக்குப் பிடித்த கொள்கைகளை தேர்வர்களின் மீது திணிப்பதாகத் தோன்றுகிறது. அரசுகளுக்குக் கட்டுப்படாது ஆணையங்கள் சுதந்திரமாக செயல்படத் தரப்பட்டுள்ள அதிகாரம், தனித்து இயங்கத்தானே அன்றி தன்னிச்சையாக செயல்பட அல்ல. இதனை, தேர்வர்களின் மனுக்கள் மீது நீதிமன்றங்கள் சொல்வதற்கு முன்பாக, ஆணையங்கள் தாமாகவே புரிந்து நடந்து கொண்டால் நல்லது. இதுதான், திருக்குறள் நவிலும் ‘நயத்தக்க நாகரிகம்’. தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆணையங்கள் பரிவுடன் பரிசீலிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும், நீதிமன்றங்கள் மூலம்தான் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிற நிலைக்குத் தேர்வர்களைத் தள்ளுதல், ஆணையங்களுக்கு அழகல்ல. நிறைவாக, தேர்வு ஆணையங்களை விடவும் தேர்வர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இது ஒரு வகையில் நல்ல செய்திதானே..?

அரசு பள்ளி தூய்மைப் பணியாளர்கள் 30,798 பேர் ஓராண்டாக ஊதியம் கிடைக்காமல் தவிப்பு


அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் 30,798 பேர் கடந்த ஓராண்டாக மாத ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை மாணவர்களைக் கொண்டே சுத்தம் செய்வதாக புகார்கள் எழுந்தன.

அதையடுத்து, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ள கடந்த 2016 ஜனவரி முதல் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுடன் தூய்மைப் பணியாளரை நியமித்துக்கொள்ள கல்வித் துறை உத்தரவிட்டது. தொடக்கப் பள்ளியில் தூய்மைப் பணியை மேற்கொள்வோருக்கு மாதம் 1,000 ரூபாயும், நடுநிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வோருக்கு ரூ.1,500-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இவர்களுக்கான ஊதியத்தை 4 மாதங்களுக்கு ஒருமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு கணக்கில் வரவு வைக்கப்பட்டு, துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரிக்குப் பின்னர் இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 23,939 ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளும், 6,859 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில் தலா ஒரு தூய்மைப் பணியாளர் வீதம் மொத்தம் 30,798 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஊதியமின்றி சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள வீரலட்சுமி கூறுகையில், பள்ளியில் தூய்மைப் பணியை மேற்கொள்வதால் வேறு கூலி வேலைக்குச் செல்ல முடியவில்லை. காலையில் கழிப்பறைகள், வகுப்புறைகள், பள்ளி வளாகம், பள்ளியின் முன்புறம் உள்ளிட்ட பகுதிகளை துப்புரவு செய்ய வேண்டும். மதியம் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்ட பின்னர் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு நாளைக்கு கூலி ரூ.33 மட்டுமே. கடந்த 11 மாதங்களாக இந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. இந்த வேலை அரசு வேலையாக மாறிவிடும், குறைந்தது மாதம் ரூ.10 ஆயிரமாகவது ஊதியமாகக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். என்னைப் போன்று தமிழகம் முழுவதும் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் ஊதியமின்றி சிரமப்படுகின்றனர். தமிழக அரசு உடனே தனி கவனம் செலுத்தி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று கூறினார்.

பிப்ரவரி 7-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


கடலூர் மாவட்ட நிர்வாகத்துடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வரும் 7-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்துகிறது. அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்திருக்கிறார். இம்முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த எட்டாம் வகுப்பு முதல் பொறியியல் பட்டப் படிப்பு வரை படித்த, ஐடிஐ மற்றும் பட்டயப் படிப்புகளை முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான ‘www.tnprivatejobs.tn.gov.in’ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்புடன் முகாமில் நேரடியாக பங்கேற்கலாம். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04142 - 290039) வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். நிறுவனங்களும் தொடர்பு கொள்ளலாம் இம்முகாமில் பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் வேலையளிப்பவர்கள் தங்களின் பணியாளர்கள் தேவை மற்றும் ஆட்கள் தேவைப்படும் முழுமையான விவரங்களை ‘deo.cud@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 04142-290039 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவித்து முன்பதிவு செய்து வேலைவாய்ப்புத் துறையின் ஒப்புதலுடன் முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கான பதிவும் இம்முகாமில் நடைபெறவுள்ளது. எனவே, நமது கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் வரும் 7-ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் திரளாக பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தச் சேவைக்கு கட்டணம் ஏதும் கிடையாது என்றும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.


பத்தாம்வகுப்பு தேர்வு எழுதும்மாணவர்கள்14 வயது இருக்கவேண்டும் அதற்குகுறைவாகவும்இருந்தால் தேர்வு எழுதலாம்அதனுடையவழிமுறைகள்கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளிமாவட்டத்தில் நடப்பு2020-21ஆம்  கல்வியாண்டில்10 ஆம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதஉள்ளமாணவ , மாணவியர்களில் 14 வயதினைநிறைவு செய்யாதமாணாக்கர்க்கு வயதுதளர்வாணைகோரும்

விண்ணப்பங்களைசம்பந்தப்பட்டமாவட்டக்கல்விஅலுவலருக்கு அனுப்பி வயதுதளர்வாணைபெறுவதற்கு நடவடிக்கைமேற்கொள்ள அனைத்து வகைஉயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளின்தலைமையாசிரியர்கள் / பள்ளிமுதல்வர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சிராப்பள்ளிமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்செயல்முறைகள்ந.க.எண்: 06277/ ஆ3/2020, நாள்: 17-12-2020...




தேர்தல் பணிக்கு 'புதிய மொபைல் ஆப்'


தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிக்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


தமிழக சட்டசபைக்கு, மே, 25க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, மார்ச்சில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. பயிற்சி வகுப்புகொரோனா காரணமாக, ஒரு ஓட்டுச்சாவடியில், அதிகபட்சம், 1,000 வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


எனவே, கூடுதலாக, 23 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், தேர்தல் பணியில் கூடுதல் பணியாளர்கள், போலீசாரை ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் கூடுதலாக தேவை.இவற்றை மாவட்ட வாரியாக கணக்கிட்டு, தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன. அவற்றை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது.


தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, நான்கு நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், தேர்தல் வழக்கு வராத வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அவர்களுக்கு விளக்கப் பட்டுள்ளது.விரைவில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் போன்றோருக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், இந்த தேர்தலில், நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.பழுதுமுதற்கட்டமாக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்காக, தனி, 'மொபைல் ஆப்' உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மொபைல் ஆப் வழியே, எந்த ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது, எங்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், பழுது ஏற்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, எவ்வளவு ஓட்டுகள் பதிவாகி உள்ளன என்ற விபரங்களை, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி தொடர்பான தகவல்களை, மொபைல் ஆப் வழியே, உயர் அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.இந்த மொபைல் ஆப்பில் எந்த விதமான விபரங்களை சேர்க்கலாம் என, அனைத்து மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரிகளிடம், தேர்தல் கமிஷன் கருத்து கேட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் 4 இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு


 

பள்ளிக் கல்வித் துறையில் 4 இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு. GO NO : 8 , நாள் : 29.01.2021.



ஆசிரியர் மற்றும் பிற பணிகளுக்கான வேலைவாய்ப்பு செய்திகள்


ROSEMARY EDUCATIONAL SOCIETY TEACHERS WANTED Rose Mary Educational Society is searching for well qualified and experienced teachers to TEACH ALL SUBJECTS (for all classes) with fluency in English. (for both Matric and CBSE). Good Salary is assured. Note : Montessori Teachers and Physical Education Teachers also can apply. Apply to ROSE MARY MATRIC. HR. SEC. SCHOOL (MAIN) No.2, Convent Road, Palayamkottai, Tirunelveli. E-Mail id: rosemarymhss@yahoo.com (Monday to Saturday, Time: 9.30 to 12.00 ) WANTED: SCHOOL VAN DRIVERS. PSF MATRICULATION SCHOOL Vadugappatti (Po), Sankari (Tk), Salem (Dt) - 637 301. TEACHERS WANTED • SG Teachers : English, Science & Social DTEd., / D.EI.Ed., or UG with B.Ed., • BT Teachers : English, Science & Social UG / PG with B.Ed., / M.Ed., • Computer Science & Hindi : Upto 8th Std. • Accountant : Any degree with Taly knowledge • PET : Male / Female Walk-in Interview on or before 06-02-2021 Time : 10.00 am to 2.00 pm For Enquiry : 97900 36507 Apply to : psfschool@hotmail.com
WANTED DHARAN COLLEGES LECTURERS (Female) M.Sc. (Microbiology) Fresher, Experienced M.Sc. (Biochemistry) Fresher, Experienced M.Sc. (Clinical Nutrition) Fresher, Experienced B.Sc. (Nursing) - Tutors Fresher, Experienced M.Sc. (Nursing) - Tutors Fresher, Experienced M.A. (English) Fresher, Experienced Hostel Warden (Female, Male) Fresher, Experienced College Librarian (Female) B.Lis. / M.Lis. - Fresher, Experienced Walk in : 1t - 6th Feb. 2021 V Dharan Hospital 96558 19990 0427-2709999 95850 09990 9.00 am- 6.00 pm only dect@dharanhospital.com

வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் நியமனம்


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, வேதியியல் ஆசிரியர் பணிக்கு, 313 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, இரண்டாண்டுகளுக்கு முன், தேர்வு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்றவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி பட்டியல் தயாரிக்கப்பட்டது.இந்நிலையில், பல்வேறு நீதிமன்ற வழக்குகளால், அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.வழக்குகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன், பணி நியமன கவுன்சிலிங் நடத்தப்பட்டது.இதை தொடர்ந்து, 313 முதுநிலை பட்டதாரிகளுக்கு, வேதியியல் ஆசிரியர் பணிக்கான பணி நியமன உத்தரவு, நேற்று வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், பணி நியமன ஆணைகளை வழங்கினார். புதிய ஆசிரியர்கள், நாளை பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

40 ஆண்டு அரியர் தேர்வு மீண்டும் எழுத வாய்ப்பு


சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 40 ஆண்டுகள் வரை, சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல், 'அரியர்' உள்ளவர்கள், மீண்டும் தேர்வு எழுத, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., விதிகளின் படி, பட்டப்படிப்பு முடிப்பவர்கள், தங்களது படிப்பு காலம் முடிவதில் இருந்து, மூன்று ஆண்டுகளுக்குள் மட்டுமே, அரியர் பாடங்களுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். அதன்பின், அனுமதி அளிக்கப்படாது.ஆனால், தமிழக பல்கலைகளில், மாணவர்கள் நலன் கருதி, கூடுதல் காலம் சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி, சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில் படித்து, 40 ஆண்டுகள் வரை, அரியர் உள்ளவர்கள், தங்களின் தேர்ச்சி அடையாத பாடத்துக்கு, மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முயற்சிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 1980- - 81ம் கல்வி ஆண்டு முதல் படித்து, தற்போது வரை, அரியர் பாடம் வைத்துள்ளவர்கள், 2021 மே மற்றும் டிசம்பர் தேர்வுகளில் பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களை தொலைநிலை கல்விக்கான, www.ideunom.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், டிசம்பர் மாதத்தில் நடத்த வேண்டிய தேர்வு, தாமதமாக நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை, நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க சிறப்பு வாக்குப்பதிவு மையம்: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்


சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வாக்களிக்க சிறப்பு வாக்குப்பதிவு மையம் ஏற்படுத்தி வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசியர் கழகம் வலியுறுத்தியது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் தலைவர் அ.மாயவன், திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:

கடந்த மக்களவைத் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 4.36 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சுமார் 38,000 பேருக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு அனுப்பப்படவில்லை. வரப் பெற்ற அஞ்சல் வாக்குச்சீட்டுகளில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் (Gazetted Officer) கையொப்பம் இல்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு சுமார் 26,000 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. இவ்வாறு, கடந்த மக்களவைத் தேர்தலின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் 63 ஆயிரம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்குரிமையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லாததே இதற்குக் காரணம்.

வரும் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் ஈடுபடவுள்ளனர். மக்களவைத் தேர்தலைப்போல் இந்தத் தேர்தலில் அவர்களது வாக்குரிமை பறிபோய்விடக் கூடாது.

எனவே, சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் யோசனை தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின்போதும், தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினர் அனைவரும் வாக்களிக்க காவல் துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இதன்படி, தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது தேர்தல் முடிந்த பிறகோ தொகுதி வாரியாக சிறப்பு வாக்குப்பதிவு மையத்தை ஏற்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஜனநாயக கடமைகளில் ஒன்றான தங்கள் வாக்குரிமையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேறு தகுந்த மாற்று யோசனை இருந்தாலும், அதைச் செயல்படுத்த வேண்டும். தேர்தலில் வாக்களிக்கும் உரிமை யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்.

மேலும், வாக்குப்பதிவு மையத்தில் பணியில் ஈடுபடுவோர் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பணியில் ஈடுபட தேர்வு செய்யப்பட்டு காத்திருக்க வைக்கப்படுவோருக்கும் குடிநீர், மின் விசிறி, கழிப்பிடம், தங்கும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

செய்தியாளர் சந்திப்பின்போது அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.பக்தவத்சலம், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சேதுசெல்வம், மாநிலச் செயலாளர் வா.கோபிநாதன், திருச்சி மாவட்டத் தலைவர் வே.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அடுத்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு 80,000 ஸ்மார்ட் போன்கள்! அமைச்சர் செங்கோட்டையன் தகவல் !


பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அருகே சக்கந்தியில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர் கிராமத் தொழில்கள் நலவாரிய நலத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பாராட்டியுள்ளார். அதில், கல்வி முறைதான் சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர்.

742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்கப்படும். தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

ஏற்கனவே,பல்வேறு பள்ளிகளில் 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த உள்ளோம். இல்லையெனில், அரசுக்கு ரூ.1,400 கோடி நிதித் சுமை ஏற்படும்.

ஆசிரியர் பணி நியமனத்தில் ஒரு சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் வரும் பிப்ரவரி 13-ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.

மேலும், அரசுக்கு எதிராக ஜாக்டோ- ஜியோ போராட்டம் நடத்தியது. அதில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழத்தில் வேலை


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழத்தின் தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் என 185 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

மொத்த காலியிடங்கள்: 185

பணியிடம்: தஞ்சாவூர்

பணி: உதவியாளர் - 72
சம்பளம்: மாதம் ரூ.2410 + 4049
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பட்டியல் எழுத்தர் - 62
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: காவலர் -51
சம்பளம்: 2359 + 4049
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எண்.1, சச்சிதானந்த மூப்பனா ரோடு, தஞ்சாவூர் - 613001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 15.01.2021

Any Degree ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 322 ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிர்வாகம்: Reserve Bank of India

வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியிடங்கள்:

Officers in Grade 'B' - 322 காலியிடங்கள்.

கல்வித்தகுதி:

Any Degree with 60%, Master Degree போன்ற ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:
General - 21 வயது முதல் 30 வயது வரை.
BC,MBC,DNC,BCM (OBC) - 21 வயது முதல் 33 வயது வரை.
SC, SCA, ST- 21 வயது முதல் 35 வயது வரை.
Pwd -21 வயது முதல் 40 வயது வரை.

ஊதியம்: மாதம் ரூ.35,150 முதல்.

கடைசிநாள்: 15.02.2021

தேர்வு கட்டணம்:
General, BC,MBC,DNC,BCM - Rs.850
SC, SCA, ST, Pwd - Rs.100

OFFICIAL WEBSITE – https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx

OFFICIAL NOTIFICATION - https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTGBDRB092851E3E1C4D219C54676FA642772E.PDF

ONLINE APPLICATION – https://ibpsonline.ibps.in/rbiscsgjan21/

7,100 பேர் உபரி ஆசிரியர்கள் உள்ளனர் - பிப்.13-ம் தேதிக்குள் TRB மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் _ அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.


சிவகங்கையில்     அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

’’அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் கல்வி முறை சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர். 742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். காலத்திற்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்கி விட்டோம். ஏற்கனவே 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதித் சுமை ஏற்படும்.

மேலும் சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் ஆசிரியர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார்.

2020 - 21 - INCOME TAX - EXCEL SHEET - OLD AND NEW METHOD

2020 - 21 - INCOME TAX - EXCEL SHEET - OLD AND NEW METHOD

ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி – மாணவிகளை தனிமைப்படுத்த உத்தரவு!


தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரது வகுப்பறை மாணவிகளை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளி ஆசிரியைக்கு கொரோனா:தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் சேலம், திண்டுக்கல், திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. தற்போது தருமபுரி மாவட்டத்திலும் பள்ளி ஆசிரியை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலக்கோடு அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் கடந்த ஜனவரி 21ம் தேதி பணிக்கு வந்துள்ளார். பின்னர் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அடுத்த 2 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. அந்த ஆசிரியைக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வகுப்பை சேர்ந்த 42 மாணவிகளை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது

முதுகலை படிப்புகள் நிறுத்தம் - அண்ணா பல்கலைக்கழகம்




மத்திய அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வந்த இரண்டு முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது.

      

மத்திய அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வந்த இரண்டு முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது. 


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் உயிர் தொழில்நுட்பவியல் முதுகலை எம்டெக், மற்றும் எம்.டெக்.,  பயோடெக்னாலஜி பாடப்பிரிவுகள் உள்ளன.  கடந்த ஆண்டுகளில் இந்த படிப்புகளில் மத்திய அரசின் 50சதவிகித  இட ஒதுக்கீட்டு அடிப்படையில்   மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. எனினும் தற்போது இந்த இரண்டு படிப்புகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு 50 சதவீதம் இடம் வழங்குவதை ஏற்க முடியாது என்ற தெரிவித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்ய அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் - பள்ளிக்கல்வித்துறை செயல்முறைகள்


 

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல், வேதியியல், வரலாறு , தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு!

அரசிதழ் 36, நாள்: 30.01.2020ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு.

இயற்பியல்- ந.க.எண். 002803 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Physics - Download here

வேதியியல்- ந.க.எண். 002804 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29.01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Chemistry - Download here

விலங்கியல் -ந.க.எண். 002806 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Zoology - Download here

தாவரவியல்- ந.க.எண். 002805 / டபிள்யு2 / இ1 / 2020, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Botany - Download here

பொருளியல்- ந.க.எண். 2841 / டபிள்யு3 / இ3 / 2020, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Economics - Download here

வணிகவியல்- ந.க.எண். 2813 / டபிள்யு3 / இ2 / 2021, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - Commerce - Download here

வரலாறு- ந.க.எண். 2815 / டபிள்யு3 / இ2 / 2021, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - History - Download here

PET II to PET I ந.க.எண். 2815 / டபிள்யு3 / இ2 / 2021, நாள். 29 .01.2021

DSE Proceeding - BT To PG Panel 2021 - PET - Download here

NMMS EXAM FEB 2021 CENTER LIST AND CLUBING SCHOOLS LIST

NMMS EXAM FEB 2021 CENTER LIST AND CLUBING SCHOOLS LIST

சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி 21.02.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கு , இணைப்பில் உள்ள பள்ளிகள் தேர்வு மையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது . எனவே மேற்படி தேர்வின் பொருட்டு தேர்வறைகள் , தளவாடங்கள் மற்றும் இதர தேர்வு முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்யுமாறு சார்ந்த தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 21.02.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வு மைய விவரங்கள் மற்றும் காலை 9.00 மணிக்கு தேர்வு தொடங்கி பகுதி I - மனத்திறன் தேர்வு ( Mental Ability Test ) ( MAT ) , பகுதி II படிப்பறிவுத் தேர்வு ( Scholastic Aptitude Test ) ( SAT ) நடைபெறும் என தெளிவாக தெரிவிக்குமாறும் , தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு தங்கள் பள்ளியில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை சரிப்பார்த்துக் கொள்ளுமாறும் இணைப்பு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 


இணைப்பு : தேர்வு மைய விவரம் மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் :


NMMS EXAM FEB 2021 CENTER LIST AND CLUBING SCHOOLS LIST - Download here...



9, பிளஸ் 1 பள்ளி திறப்பு ஓரிரு நாளில் அறிவிப்பு


சென்னை:ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பு, இரண்டு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.இந்நிலையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் துவங்கிஉள்ளன.


மாணவ - மாணவியர் முக கவசம் அணிந்து, வகுப்புகளில் பங்கேற்கின்றனர்.இதையடுத்து, ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கும், பிப்., 1 அல்லது 2ல், நேரடி வகுப்புகளை துவங்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், இன்று அல்லது நாளை, இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

93,935 பேருக்கு வேலை வாய்ப்பு: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 52,257 கோடி ரூபாய் புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மாநில அரசின் அமைச்சரவை இன்று (29.01.2021) கூடி 34 முக்கிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. தமிழ்நாடு அரசின் புதிய தொழில் கொள்கையான தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 வெளியிடவும் அனுமதி அளித்துள்ளது. இன்றைய தினம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 34 திட்டங்களில் 52,257 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 93,935 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதாகும். மேற்படி முதலீடுகள் பெரும்பாலும், மின்னணுவியல், மின் வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகன மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி, சூரிய சக்தி மின்கல உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்று அமைச்சரவையால் அனுமதி அளிக்கப்பட்ட சில முக்கிய முதலீடுகள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:- 1) டாட்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 5763 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 18,250 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைபேசி உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. 2) தைவான் நாட்டினைச் சேர்ந்த பெகாட்ரான் கார்ப்பரேஷன் 1100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 14079 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கைபேசிகள் உற்பத்தி திட் திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. 3)தைவான் நாட்டினைச் சேர்ந்த Luxshare நிறுவனம், 745 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூரில் மின்னணு வன்பொருள் உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், செயல்படாமல் இருந்த மோட்டாரோலா தொழிற்சாலையினை மீண்டும் நிறுவிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 4) சன் எடிசன் நிறுவனம், 4629 கோடி ருபாய் முதலீடு மற்றும் 5397 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் சூரிய ஒளி மின்னழுத்த தொகுதிகள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. 5) Ola Electric நிறுவனம் 2354 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2182 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் சிப்காட் தொழிற்பூங்காவில் மின் வாகனங்கள் மற்றும் மின்னேற்றுகள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. 6)ஜெர்மனி நாட்டினைச் சேர்ந்த Eickhoff Wind Ltd நிறுவனம் 621 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 319 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் சென்னைக்கு அருகில் ஒரு காற்றாலை மின்சக்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் சீனா மற்றும் ஜெர்மனி நாட்டில் இருந்த தனது திட்டங்களை, தமிழ்நாட்டிற்கு இடமாற்றம் செய்ய உள்ளது. 7) உலகின் மிகப் பெரிய இரசாயன நிறுவனங்களில் ஒன்றான ஜெர்மனி நாட்டினைச் சேர்ந்த BASF நிறுவனம் 345 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 235 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் வாகன உமிழ்வு வினையூக்கிகள் (Automobile Emission Catalysts) உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. 8) லூகாஸ் TVS நிறுவனம் 2500 கோடி முதலீடு மற்றும் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் லித்தியம் அயன் மின்னேற்றுகள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. 9) ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த டெய்செல் கார்ப்பரேஷன், இந்தியாவிலேயே முதன் முதலாக காற்றுப்பைகளில் காற்றடைக்கும் கருவி (Air bag inflators) உற்பத்தி திட்டத்தினை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள One Hub Chennai தொழிற் பூங்காவில் 358 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 180 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் நிறுவ திட்டமிட்டுள்ளது. 10) கொரிய நாட்டினைச் சேர்ந்த எல். எஸ். ஆட்டோமோட்டிவ் நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 200 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வாகன ஸ்விட்சுகள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. 11) அமெரிக்க நாட்டினைத் தனது உற்பத்தித் தளமாகக் கொண்ட 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 400 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிப்காட் செய்யார் தொழிற் பூங்காவில் மோட்டார் வாகன பயணிகளின் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. 12) Data patterns நிறுவனம் 303.52 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 703 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் என்ற வகையில், தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழிச்சாலையின் சென்னை முனையத்தில், பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பான தயாரிப்புகள் உற்பத்தி திட்டத்தினை நிறுவ திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு முதலீட்டாளர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு தொகுப்புச் சலுகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சில முதலீடுகளில், பூர்வாங்கப் பணிகளைத் தொடங்க ஏதுவாக, தொகுப்புச் சலுகை இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இப்போது, அமைச்சரவை ஒப்புதலுடன், சட்டபூர்வமான பிணைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படும். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 ,விரைவில் வெளியிடப்பட உள்ளது. அரசு எடுத்து வரும் இத்தகைய சிறப்பான முயற்சிகளின் காரணமாக தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருகி குறிப்பாக, கொரானா நோய்தொற்று காலத்தில் ஏற்பட்ட பின்னடைவையும் சீர் செய்து அதிக அளவில் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக வழிவகை ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் எடையைக் குறைக்கும் கறிவேப்பிலை!


உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பல விதங்களில் முயற்சி செய்து வரும் நிலையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளைக் கொண்டு உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

பொதுவாக வீட்டில் உணவுப் பொருள்களில் சமையலில் கறிவேப்பிலை அதிகம் பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலானோர் சாப்பிடும்போது அந்த கறிவேப்பிலையை எடுத்து ஓரமாக வைத்து விடுகின்றனர். இதற்கு பின்னால் உள்ள பலன்கள் குறித்து அவர்கள் அறிவதில்லை.

அனைத்து உணவுகளிலும் கறிவேப்பிலை சேர்க்கப்பட காரணம் அது செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

கறிவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் எந்த உணவாக இருந்தாலும் எளிதாக செரித்துவிடும். வயிற்று உபாதைகள் ஏற்படாது.

மேலும், வயிற்றில் கொழுப்புகள் படிந்து உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது. உடலில் கெட்ட கொழுப்புகளைக் குறைகிறது. எனவே, உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் உணவுடன் சேர்த்தது சாப்பிடுங்கள்.

இதுதவிர உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலை பத்து கறிவேப்பிலை இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறைகிறது.

மேலும், கறிவேப்பிலையை ஜூஸ் செய்தும் அருந்தலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு அருந்திவர உடல் எடை வெகுவாக குறைந்து வருவதை காண முடியும்.

டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..?


ஜனவரி 25ஆம் தேதி டிஜிட்டல் வாக்காளர் அட்டை என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது. இந்தச் சேவை மூலம் வாக்குப்பதிவு செய்ய மக்கள் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதன் மூலம் ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் டிஜிட்டல் முறையில் பெறுவது போல் வாக்காளர் அட்டையும் டிஜிட்டல் முறையில் பெற முடியும். சரி டிஜிட்டல் வாக்காளர் அட்டையை எப்படி டவுன்லோடு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

இண்டர்நெட் இணைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் அல்லது கம்பியூட்டர் அடிப்படைத் தேவையாக உள்ளது. 5 மாநில தேர்தல் இந்தியாவில் மேற்கு வங்காளம், அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 5 மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அனைவரும் பெற முடியா..?

இதை வைத்து வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய முடியுமா..?

டவுன்லோடு செய்வது எப்படி..?

கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ பயன்படுத்தவும்.

https://voterportal.eci.gov.in/ 

https://nvsp.in/Account/Login


இணையதளத்தில் login செய்ய வேண்டும்.

இந்தத் தளத்தில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி-யை கொண்டு ஒரு கணக்கைத் துவங்க வேண்டும்.

கணக்கைத் துவங்கிய பின்பு லாக் இன் செய்த உடனேயே உங்கள் கணக்கில் டவுன்லோடு E-EPIC (Electronic Electoral Photo Identity Card) என்ற ஆஃப்ஷன் இருக்கும். இதைக் கிளிக் செய்ய வேண்டும்.

இந்த டிஜிட்டல் சேவை தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 தேதி காலை 11.14 மணி முதல் மக்களின் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 31 வரை முதல்கட்டமாக இந்தச் சேவை புதிய வாக்காளர்களுக்கு மட்டும் வழங்கப்பட உள்ளது. வாக்காளர் அட்டையைப் பெறுவதற்காக மொபைல் நம்பர் உடன் பதிவு செய்துள்ள வாக்காளர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரையில் வழங்கப்படும். மொபைல் நம்பர் உடன் பதிவு செய்தவர்களுக்குத் தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள இரண்டு தளத்தில் இருந்து டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்ய முடியும்.

அனைவருக்கும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண்-ஐ இணைத்துள்ள அனைவரும் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை மேலே குறிப்பிட்டு உள்ள வழிமுறையைப் பயன்படுத்தி டவுன்லோடு செய்துகொள்ள முடியும். மொபைல் நம்பர் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண்-ஐ இணைக்காதவர்கள் உங்களின் தரவுகளைத் திருத்தி அல்லது சரிபார்க்கப்பட்டுத் தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண் இணைக்கப்பட்ட பின் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்யும் சேவையைப் பெறலாம்.

டவுன்லோடு செய்யப்படும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை pdf பார்மெட்-ல் இருக்கும். பாதுகாப்புக் காரணிகள் இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையில் QR கோட் இருக்கும், இந்த QR கோட்-ல் வாக்காளரின் புகைப்படம், அவரது பிராந்திய தகவல், முகவரி ஆகியவை இருக்கும். மேலும் இதைப் போலியாகத் தயாரிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ள காரணத்தால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அது மட்டுமல்லாமல் இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையை அரசின் டிஜிலாக்கர் சேவையில் பதிவேற்றம் செய்து பாதுகாக்கவும் முடியும்.

முன்னாள் மாணவர்கள், பல்வேறு நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் உள்கட்டமைப்பு, சுற்றுச் சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் – 2016 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி (இணை இயக்குநர் இடைநிலைக் கல்வி) உத்தரவு!!!*


*பள்ளிக் கல்வி – அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் – அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள – முன்னாள் மாணவர்கள், பல்வேறு நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் உள்கட்டமைப்பு, சுற்றுச் சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் – 2016  ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி (இணை இயக்குநர் இடைநிலைக் கல்வி) உத்தரவு!!!*


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் ( இடைநிலைக் கல்வி செயல்முறைகள் , சென்னை B00006 . நக.எண் .074 பிடிஇ 1 / 2019 , நான் , 25.012021 பொருள் : பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள முன்னாள் மாணவர்கள் . பல்வேறு நிறுவனங்கள் மூலம் சமூகப் பொறுப்புணர்வு நிதி ( CSR ) மூலம் உள்கட்டமைப்பு சுற்றுச் சுவர் , வர்ணம் பூசுதல் , இணையதள வசதிகள் , சுகாதாரமான கழிவறைகள் , ஆய்வகங்கள் , நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் - 2016 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை பெறப்பட்ட நிதி மற்றும் பயனடைந்தபள்ளிகள் விவரம் கோருதல் - சார்பாக , பார்வை : செயல்முறைகள் , தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் ந.க.எண் .074 / பிடிஇ 12019 , நாள் : 25.04.2019 . பார்வையில் காணும் செயல்முறைகளின் மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப் படுகிறது . தமிழக அரசு , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் இருக்கும் முன்னாள் மாணவர்களும் , தற்போது தொழில் அதிபர்களாக உள்ள முன்னா ar மாணவர்களும் , சமுக அக்கறை கொண்ட நிறுவனங்களும் ( NGO ) தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி ( CSR ) மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிகளின் உள் கட்டமைப்பு சுற்றுச் சுவர் , வர்ணம் பூசுதல் , இணையதள வசதிகள் , சுகாதாரமான கழிவறைகள் , ஆய்வகங்கள் , நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இதன் மூலம் பல அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பயன்பெற்றுள்ளது . 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரைசமூக பொறுப்புணர்வு நிதி ( CSR ) மூலமாக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான பெறப்பட்ட நிதிகள் விவரம் , பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம் மற்றும் பயனடைந்த பள்ளிகளின் விவரத்தினை இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படிவங்கள் 1 மற்றும் 11 ல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான தனித்தனி படிவத்தில் பூர்த்தி செய்து உடன் இவ்வியக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் . இணைப்பு : படிவம் 1 மற்றும் II ஓம் / சசுகன்யா இணை இயக்குநர் ( இடைநிலைக் கல்வி ) பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் . D.2021 Year Files PDS + 

Recent Posts

Total Pageviews

Blog Archive