தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – ஜனவரி 31க்குள் விண்ணப்பிக்கலாம்! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, January 25, 2021

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – ஜனவரி 31க்குள் விண்ணப்பிக்கலாம்!


தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்றோர்க்கு, அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் வருகிற 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பற்றோர்க்கான உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இதன்படி மாதந்தோறும் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.200 உதவித்தொகையும், 10 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.300 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு ரூ.400 உதவித்தொகையும் , பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் 10 ஆம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.600 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கும் ரூ.750 உதவித்தொகையும், பட்டதாரிகளுக்கு ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளாக பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அதனை புதுப்பிக்க வேண்டும்.

Post Top Ad