உயர்நிலை &மேல்நிலைப் பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு 18-ந்தேதி ஆய்வு செய்வதால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, January 15, 2021

உயர்நிலை &மேல்நிலைப் பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு 18-ந்தேதி ஆய்வு செய்வதால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது


பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு18-ந்தேதி ஆய்வு செய்வதால்அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்கவேண்டும் என்று கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது


பள்ளி ஆசிரியர்

பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு18-ந்தேதி ஆய்வு செய்வதால்அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள்

பள்ளியில் இருக்க வேண்டும் என்றுகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

கொரோனா தொற்று பரவல் குறைந்துவருவதால் 10 மற்றும் 12-ம்வகுப்புகளுக்கு மட்டும் 19-ந் தேதிபள்ளிகளை திறக்க அரசுஉத்தரவிட்டுள்ளது.

பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளைதிறக்க விருப்பம் தெரிவித்தனர். அதன்அடிப்படையில் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் எவ்வாறுசெயல்பட வேண்டும் என்பது குறித்துஅரசு வழிகாட்டு நெறிமுறைகளைவெளியிட்டது. அனைத்துமாணவர்களும் முகக்கவசம் கட்டாயம்அணிதல், கிருமி நாசினிபயன்படுத்துதல், குடிநீர், உணவு வீட்டில்இருந்து கொண்டு வர வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் கைகுலுக்குதல், தொட்டுபேசுதல் போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் 25 பேர் வீதம் குழுவாக பிரித்து பாடம்நடத்தவும், ஆய்வகத்திலும் கூட்டத்தை 

தவிர்க்கவும் சமூக இடைவெளியைபின்பற்றவும் அனைத்து தலைமைஆசிரியர்களுக்கும் முதன்மை கல்விஅதிகாரிகள் மூலமாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

19-ந் தேதி அனைத்து பள்ளிகளும்திறப்பதால் அதற்கான முன்ஏற்பாடுகளை முதன்மை கல்விஅதிகாரிகள் மாவட்டங்களில் செய்யவேண்டும் என பள்ளிக்கல்விஇயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்திஉள்ளார்.

அதன் அடிப்படையில் மாணவர்களைபள்ளி வளாகத்தில் எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து தலைமைஆசிரியர்களுக்கு முதன்மை கல்விஅதிகாரிகள் உத்தரவுகளைபிறப்பித்துள்ளனர். அதன் விவரம்வருமாறு:-

10 மற்றும் 12-ம் வகுப்புமாணவர்களுக்கு விரைவில் புதியபாடத்திட்டம் அறிவிக்கப்படும். அதனால்தேர்வு குறித்த பயம் தேவையில்லைஎன்பதை மாணவர்களுக்குதெளிவாக்க வேண்டும்

18-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகளைகல்வி அதிகாரிகள் குழு ஆய்வுசெய்வார்கள். அதனால் அனைத்துஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள்பள்ளியில் இருக்க வேண்டும். மாலை4.30 மணிவரை இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

சிறப்பு வகுப்பு, மாலை வகுப்பு நடத்ததேவையில்லை. பாட ஆசிரியர்கள்தவிர மற்ற ஆசிரியர்கள் (உடற்கல்வி, இடைநிலை) ஒழுக்கத்தைகண்காணிக்கவும், உடல் வெப்பபரிசோதனை, சானிடைசர்பயன்படுத்துதல் பணியில் ஈடுபடுத்தவேண்டும்.

அனைத்து மாணவர்களும் காலைபள்ளிக்கு வந்தவுடன் பள்ளி நுழைவுவாயில் மூடப்பட வேண்டும். பள்ளிக்குவருகை தந்த மாணவர்களைஎக்காரணத்தை கொண்டும் பள்ளிமுடியும் வரை வெளியே அனுமதிக்ககூடாது.

மாணவ-மாணவிகளுக்கு உடல்நலமின்மை கண்டறியப்பட்டால்உடனடியாக அரசு மருத்துவமனைக்குஆசிரியர்கள் அழைத்து செல்லவேண்டும். வைட்டமின் மற்றும் நோய்எதிர்ப்பு சக்தி மாத்திரை பள்ளி வகுப்புஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும்.

இறைவணக்க கூடுகை, விளையாட்டுபயிற்சி உள்ளிட்ட இதர வகுப்புகள்நடத்தக்கூடாது.

மாணவர்கள் பஸ் பயணத்தைகுறைத்துக் கொண்டு சைக்கிளில் வருவதை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர் அழைத்து வந்துவிடுவதைஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோரின் விருப்ப கடிதம் மாதிரிபடிவம் வழங்கப்படும். அதனை பூர்த்திசெய்து மாணவர்கள் வகுப்புஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். எந்த ஒரு மாணவரையும் வருகை பதிவுகட்டாயப்படுத்தக் கூடாது.

10-ம் வகுப்பு மாணவர் களுக்கு மாலை4.15 மணிக் கும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 4.30 மணிக் கும் வகுப்புவிடப்படும். அனைத்து ஆசிரியர்களும்18-ந் தேதி முதல் 100 சதவீதம் பள்ளிக்குவருகை புரிய வேண்டும்.

ஆசிரியர்கள் முதல் இரண்டுநாட்களுக்கு மாணவர்களுக்குகவுன்சிலிங் மட்டுமே வழங்கப்படவேண்டும்.

இவ்வாறு அரசு, உதவி பெறும் பள்ளிதலைமை ஆசிரியர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.



Post Top Ad