ஒரே நாள்... ஒரே கிழமை... 1971 மற்றும் 2021ம் ஆண்டு காலண்டர் அதிசயம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, January 2, 2021

ஒரே நாள்... ஒரே கிழமை... 1971 மற்றும் 2021ம் ஆண்டு காலண்டர் அதிசயம்


நாகர்கோவில்: மனித சரித்திரத்தில் மறக்க முடியாத பதிவை 2020ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல், புயல்களின் தொடர் தாக்குதல், போர்கள் என சாமானியர்கள் முதல் செல்வந்தவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுமார் ஒரு வருடம் வீட்டிலேயே முடக்கி வைத்தது. மேலும் பல முக்கிய தலைவர்களின் உயிரை பறித்தது. பலர் வறுமையிலும், பலர் உறவுகளை இழந்த சோகத்திலும், பலர் வேலையிழப்பிலும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் 2021ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த ஆண்டு ஆறுதலான ஆண்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஏக்கமாக உள்ளது. இதற்கிடையே 2021ம் ஆண்டு ‘காலண்டர் அதிசய’ ஆண்டாக அமைந்துள்ளது.

கடந்த ஐம்பது வருடத்திற்கு முன்பு உள்ள 1971ம் ஆண்டு காலண்டரும், 2021ம் ஆண்டு காலண்டரும். ஒரே மாதிரி அமைந்துள்ளது. இரு ஆண்டும் நாள், தேதி ஒத்திருக்கிறது. பண்டிகை நாள்களும் ஓரளவு ஒத்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பின் அதே காலண்டர் திரும்பி வந்தாலும் மனித வாழ்வும், நாட்டு நடப்பும், கலாச்சாரமும் முற்றிலும் மாறியுள்ளது. 1971 போல மனிதன் திரும்ப மாற முடியாது. அன்று மாட்டு வண்டிக்கு முக்கியத்துவம், இன்று கம்ப்யூட்டருக்கு முக்கியத்துவம். அன்று மனிதன் இயற்கை உணவுகள் சாப்பிட்டான், இன்று செயற்கை உணவு வகைகளையும் சாப்பிட்டு வருகிறான்.

Post Top Ad