மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 20 -ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டு கல்வி உதவித் தொகை பெற கடந்த டிசம்பர் மாதம் 28 முதல் ஜனவர் 8 -ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், கடந்த ஆண்டை விட குறைந்த இதுவரை மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். இதனால், மாணவர்கள் நலன் கருதி கால அவகாசம் வரும் 20 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இத்தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 21 -ம் தேதி நடைபெற உள்ளது.