வரும் ஜனவரி 31 -ஆம் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக தமிழகம் முழுவதும் 43,000 மையங்கள் அமைக்கப்பட உள்ளன . அதன் வாயிலாக மொத்தம் 70 லட்சம் குழந் தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கத் திட்ட மிடப்பட்டுள்ளது . இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலி யோவை ஒழிப்பதற்காக , 1994 - இல் இருந்து ஆண்டுதோ றும் , ஜனவரி , மார்ச் ஆகிய மாதங்களில் இரண்டு தவணை யாக ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது .
இந்தச் சூழலில் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்ட தொடர்நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில்போலியோ பாதிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது . இதனால் , தற்போது ஆண்டுக்கு ஒரு தவணையாக மட்டுமே சொட்டு மருந்து வழங் கப்பட்டு வருகிறது . அதன் அடிப்படையில் , நிகழாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17 - ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அண்மையில் அறி வித்தது . ஆனால் , கரோனா தொற்று தடுப்பூசி போடும் பணி தொடங்க இருந்ததால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது . அதை தொடர்ந்து , அந்த முகாம் வரும் 31 - ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இதையடுத்து தமிழகத்தில் , அதற்கான முன்னேற்பாடு கள் செய்யப்பட்டு வருகின்றன.இதுகுறித்து பொது சுகாதா ரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழகத்தில் , 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது .அதற் காக , அரசு மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங் கள் , ரயில் நிலையங்கள் , விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் , முகாம்கள் நடத்தப்பட உள்ளன . தற்போது ஒரே தவணையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதால் , 43,000 முகாம்கள் அதற்காக அமைக் கத் திட்டமிடப்பட்டுள்ளது . சொட்டு மருந்து வழங்கும் பணி களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடு படுத்தப்பட உள்ளனர் . போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறை யில் நடைபெற தகுந்த கரோனா தொற்று நெறிமுறைகள் மற் றும் வழிக்காட்டுதலை பின்பற்ற வேண்டும் . முகக்கவசம் அணிந்து , தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண் டும் . கைகளை கழுவ வேண்டும் . கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் . சொட்டு மருந்து கொடுக்கும் ஒவ்வொரு குழந்தையுடன் ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் . பெரியவர்கள் , குழந்தைகளுக்கு காய்ச்சல் , இருமல் உள்ளிட்ட கரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் முகாம்களில் அனு மதிக்கக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .