பிப்ரவரி 6 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, January 24, 2021

பிப்ரவரி 6 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்


ஈரோடு மாவட்டம் கோபியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி முதல் நடக்கவுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தனியார் வேலைவாய்ப்பு முகாம்:கொரோனா காரணமாக பலர் வேலை இழந்துள்ள நிலையில் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் விதத்தில் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபி- சத்தியமங்கலம் சாலையில் கரட்டடிபாளையத்தில் அமைந்துள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரியில், தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் 200-க்கு மேற்பட்டவை கலந்து கொள்வார்கள். அந்த நிறுவனங்களில் 10000க்கு மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் பட்டதாரிகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக சுயதொழில் செய்ய விரும்புவோருக்கான ஆலோசனைகள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் வங்கிக்கடன் குறித்த வழிகாட்டுதல்கள் போன்றவை வழங்கப்பட உள்ளன. இந்த முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். முகாமிற்கு வரும் போது தங்களை பற்றிய சுயவிவர குறித்த சான்றிதழ், ஆதார் அட்டை நகல், மற்றும் கல்வி சான்றிதழ் போன்றவற்றுடன் கலந்துகொள்ள வேண்டும்.

Post Top Ad