72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் இன்று உரையாற்றுகிறார்
நாட்டின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று (ஜனவரி 25, 2021) உரையாற்றுகிறார்.
குடியரசுத் தலைவரின் உரை மாலை 7 மணி முதல் அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுவதுடன், அனைத்து தூர்தர்ஷன் சேனல்களில் இந்தியிலும் அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பப்படும். தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும்
இந்தி மற்றும் ஆங்கில உரையைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் மாநில மொழிகளிலும் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாகும். அகில இந்திய வானொலியில் இரவு 9:30 மணி முதல் சம்பந்தப்பட்ட மண்டல அலைவரிசைகளில் குறிப்பிட்ட மாநில மொழிகளில் ஒலிபரப்பாகும்.