கர்நாடகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று (ஜன.1) திறக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
மாநிலத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது.
அந்த நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களால் புதிய கரோனா தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் நிலவி வருவதால், மாநிலத்தில் கரோனா தொற்றைத் தடுக்க வல்லுநர்கள் குழு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
வல்லுநர்கள் அளித்துள்ள அறிக்கையைத் தொடர்ந்து ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, பி.யூ.கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கியுள்ளன.
6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிப்புறக் கல்வித் திட்டத்தின் (வித்யாகமா) மூலம் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு சென்று பாடங்கள் எடுக்கப்படும்.
0 Comments:
Post a Comment