ஓட்டுநர் உரிமம் (டி.எல்) வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் வாகனங்களை பதிவு செய்வது உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக பல சேவைகள் முற்றிலும் ஆன்லைனில் மேற்கொள்ளும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தற்போதையை தொற்றுநோய் பரவல் காலத்தில் இந்த புதிய நடைமுறையான நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கெனவே இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. எனவே அங்கு தற்போது ஓட்டுநர் உரிமங்கள் வழங்க ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தற்போது தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த புதியமுறையானது அமலுக்கு வந்துள்ளதால், ஆஃப்லைன் நடைமுறையை தவிர்ப்பது நல்லது.
ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்வது எப்படி? படி 1: போக்குவரத்து அமைச்சின் வலைத்தளத்தைப் https://parivahan.gov.in/parivahan//en - ல் பார்வையிடவும்.
படி 2: முகப்புப்பக்கத்தில் ஆன்லைன் சேவைகள் என்ற டேப்பை கிளிக் செய்க. பல சேவைகள் குறித்த மெனு ஒன்று தோன்றும்.
படி 3: அந்த மெனுவில் 'ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்' என்பதை தேர்வு செய்ய வேண்டும். படி 4: பின்னர் உங்கள் 'மாநிலத்தை' தேர்ந்தெடுக்கவும்
படி 5: 'அப்ளை ஓட்டுநர் உரிமம்' என்பதை தேர்வு செய்து, விண்ணப்ப படிவத்தை நிரப்பவும். பின்னர் ஓட்டுநர் உரிமம் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீங்கள் பதிவேற்ற வேண்டும்.
படி 6 : இதுதவிர புது கற்றுணர் உரிமம் (New Learner Licence) அல்லது ஓட்டுனர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other) என இதர சேவைகள் பலவும் இருக்கும். இவற்றில் உங்களுக்கு தேவையான சேவையை தேர்வு செய்து கொள்ளலாம் .
குறிப்பாக பிறந்த தேதி சான்று, 10ம் வகுப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை,மாற்றுச் சான்றிதழ், முகவரி சான்று, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவை முக்கியமாக தேவைப்படும் ஆவணங்களாகும்.
ஆவணங்களை பதிவேற்றிய பின்னர் அப்ளை செய்யுங்கள். இப்பொழுது உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ் கிடைக்கும். அதை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள். இதில் உங்களுக்கான ஒப்புகை சான்றிதழ், ஃபார்ம் 1 ஐ, ஃபார்ம் 1 எ ஆகியவற்றை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள். உங்கள் பதிவேற்றத்திற்கான கட்டணத்தை டெபாசிட் செய்யும் முறையை மாற்றியுள்ளனர். அதன்படி ஆன்லைனிலேயே கட்டணத்தை செலுத்தி உங்கள் கற்றுணர் உரிமத்தை அருகில் உள்ள ஆர்.டி.ஓ ஆபீஸ் சென்று பெற்றுக்கொள்ளலாம்.