சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தற்பொழுது இந்திய மக்களை புதிய அறிவிப்பு மூலம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, கோவிட் -19 தடுப்பூசி பெறுவதற்கு மக்கள் அவசர-அவசரமாக அங்கீகரிக்கப்படாத மொபைல் பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்து முன்பதிவு செய்ய வேண்டாம் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இப்படி நம்மை எச்சரிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?ுதிய எச்சரிக்கை அறிவிப்பு
CoWIN - COVID Intelligence Network பயன்பாட்டிற்கு எதிராக ஜனவரி 6-ம் தேதி சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூகிள் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோர்களில் போலி கோவின் ஆப்ஸ்களின் எண்ணிக்கை தற்சமயம் அதிகமாக இருப்பதினால், மக்கள் அவசரப்பட்டு போலி பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்து, மோசடி கும்பலிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் கோவிட்-19 தடுப்பூசி பெற
காரணம், அரசாங்கத்தின் கோவிட்-19 தடுப்பூசி பெறப் பதிவு செய்ய வேண்டிய கோவின் பயன்பாடு தயாரிப்புக்கு முன் நிலையில் இருப்பதால், இன்னும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான பயன்பாடு மக்களின் பயன்பாட்டிற்காக நேரலைக்கு வரவில்லை என்று சுகாதார நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.