அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப் படி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, January 20, 2021

அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப் படி உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

தற்போதைய பணவீக்க விகிதம் 28 விழுக்காடுக்கு ஏற்ப அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணத்தை உயர்த்தும்படி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

அகவிலைப் படியை உயர்த்தும் முடிவை கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மத்திய அரசு கிடப்பில் போட்டது. மேலும், 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதலான அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணத்தை செலுத்த வேண்டாம் என முடிவு செய்திருந்தது.

2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரையிலான அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் கூடுதல் தவணையையும் செலுத்த வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதுமட்டுமல்லாமல், ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 4 விழுக்காடு உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தை 21 விழுக்காடு உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் இந்த முடிவை கிடப்பில் போட முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post Top Ad